ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் 'ஜிஹாதும் போர்களும்'

இஸ்லாமின் நீண்ட ஜிஹாத் சரித்திரத்தை விளக்கி, இஸ்லாமிய போர்களினால் உண்டான உயிர் நஷ்டங்கள் பற்றி நான் பேசி முடித்ததும், பொதுவாக மக்கள்  என்னிடம் கேட்கும் முதலாவது கேள்வி என்ன தெரியுமா? 

'கிறிஸ்தவத்திலும் ஒரு காலக்கட்டத்தில் போர்களும், உயிர் நஷ்டங்களும் நடந்தது அல்லவா? கிறிஸ்தவமும் இஸ்லாம் போல நடந்துக்கொண்டதல்லவா?' 

இந்த கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன, முதலாவது பதில் 'ஆம்', இரண்டாவது பதில் 'இல்லை' என்பதாகும்.

"ஆம்", கடந்த காலத்தை திரும்பி பார்க்கும் போது, கிறிஸ்தவத்தின் பெயரில் கிறிஸ்தவர்கள் கொன்று இருக்கிறார்கள். ஆம், கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு எதிராக போரிட்டுள்ளார்கள். ஆம், சரித்திரத்தின் சில ஏடுகள் இரத்தக் கரைகளால் மாசுபடுத்தப்பட்டுள்ளது, சிலுவைப்போர், மற்றும் ஸ்பானிஷ் இன்கியூஸிஸன் என்ற பெயரில் வன்முறைகள் நடந்துள்ளன என்பது மறைக்கமுடியாத உண்மையே! ஆனால், ஒன்றை இங்கு கவனிக்கவேண்டும், அதாவது மேற்கண்ட கிறிஸ்தவர்கள் புரிந்த போர்களும், இஸ்லாமில் காணப்படும் ஜிஹாத் / போர்கள் பற்றிய கோட்பாடும் வெவ்வேறானவைகளாகும். கிறிஸ்தவத்தின் பெயரில் நடத்தப்பட்ட போர்களும், இஸ்லாமின் பெயரில் நடத்தப்பட்ட மற்றும் நடந்துக்கொண்டுக் கொண்டு இருக்கும் போர்களும் ஒன்றல்ல. இவ்விரண்டுக்கும் இடையே மிகபெரிய இடைவெளி உண்டு. அதனை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும்.

கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் முஸ்லிமாக இருக்கட்டும், அல்லது விருப்புவெறுப்பு இன்றி பதில் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு கேள்வி கேட்கும் கிறிஸ்தவராக இருக்கட்டும், பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு போர்கள் பற்றி கேள்விகள் கேட்பார்கள். முதலாவதாக, பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்கள் தங்கள் எதிரிகளோடு (கானானியர்களோடு) புரிந்த போர்களை மேற்கோள்கள் காட்டி கேள்விகளை எழுப்புவார்கள். இரண்டாவதாக, சிலுவைப்போர் மற்றும் ஸ்பானிஸ் இன்கியூஸிஸன் போன்ற நிகழ்ச்சிகளை உதாரணங்களைக் காட்டுவார்கள். மேற்கண்ட இரண்டு உதாரணங்களும், இஸ்லாமின் போர்கள்/ஜிஹாத் பற்றிய கோட்பாடுகளுக்கு சமமானவைகள் அல்ல என்பதை மனதில் வைக்கவேண்டும் (*).

இவைகளை புரிந்துக்கொள்ள பழைய ஏற்பாட்டு யுத்தம் பற்றிய ஒரு உதாரணத்தை இங்கு நான் சொல்லட்டும், கூர்ந்து கவனியுங்கள். பழைய ஏற்பாட்டில் தீமை அதிகமாக செய்யும் நாடுகளுக்கு கொடுக்கும் தண்டனையாக, தேவன் போரை ஒரு ஆயுதமாக பயன்படுத்தினாரே தவிர 'யூத ஆட்சியின் நிலப்பரப்பை விஸ்தரிப்பதற்கு அல்ல'. யூதர்களின் ஆட்சியை விஸ்தரிக்க, அக்கம் பக்கத்து நாடுகள் மீது போர் தொடுத்து, அந்நாடுகளை யூத இராஜ்ஜியத்தோடு சேர்த்துக்கொள்ள தேவன் அனுமதிக்கவில்லை. குற்றம் யார் செய்திருந்தாலும், அவர்களை தேவன் தண்டித்தார். கானானியர்கள் குற்றம் செய்த போது, அவர்களை யூதர்களைக் கொண்டு தண்டித்த அதே தேவன், இஸ்ரேலர்கள் குற்றம் செய்த போது, அவர்களின் எதிரிகளைக் கொண்டு யூதர்களை தேவன் தண்டித்தார். தேவன் பட்சபாதம் காட்டுபவர் அல்ல. நேற்றும் இன்றும் என்றும் அவர் மாறாதவராக இருக்கிறார். ஆனால், இஸ்லாமை கவனித்தால், முஹம்மது தம்முடைய எதிரிகளை தோற்கடிப்பதற்கு யுத்தங்களைச் செய்தார். இஸ்லாமின் படி "முஸ்லிம்கள்" எப்போதும் நல்லவர்கள் ஆவார்கள், இவர்கள் யாரோடு சண்டை போடுகிறார்களோ அவர்கள் எப்போதும் தீயவர்கள் ஆவார்கள். முஸ்லிம்கள் யாரோடு சண்டையிட்டாலும், அவர்கள் முஸ்லிம்களின் "நல்ல செயல்களை" எதிர்க்கிறவர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள். 

கிறிஸ்தவத்தை பொறுத்தமட்டில், பழைய ஏற்பாட்டில் காணப்படும் யுத்தங்களை கிறிஸ்தவர்கள் செய்யவேண்டும் என்ற கட்டளையோ கோட்பாடோ  பைபிளில் இல்லை. இன்று மட்டுமல்ல, கி.பி. முதலாம் நூற்றாண்டு முதற்கொண்டு, எந்த ஒரு கிறிஸ்தவருக்கும் போர் செய்யவேண்டும் என்ற கட்டளை பைபிளில் கொடுக்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட போர்கள், அக்காலத்து மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது, அவைகளை தொடர்ந்து செய்யும் படி யூதர்களுக்கும் கட்டளையிடப்படவில்லை. தற்காலத்தில், உலகில் உள்ள எந்த ஒரு பைபிள் அறிஞரானாலும் சரி அல்லது பைபிள் கல்லூரியானாலும் சரி, இயேசுவின் நற்செய்தியை பரப்புவதற்காக போர்களைச் செய்யலாம் என்று போதிப்பதில்லை, இப்படிப்பட்ட கோட்பாடு பைபிளில் இல்லை என்பது தான் உண்மை.

ஆனால், குர்-ஆனை எடுத்துக்கொண்டால் விஷயம் வேறு மாதிரியாக இருக்கிறது. முஹம்மது பல போர்களில் ஈடுபட்டார் மேலும், இன்று முஸ்லிம்கள் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு மாதிரியை காண்பித்துச் சென்றுள்ளார்.  அபூ அலா மௌதுதீ என்ற இஸ்லாமிய அறிஞர் தன்னுடைய "Towards Understanding Islam" என்ற புத்தகத்தில் "குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ள கட்டளைகள் போதனைகள் அனைத்தும், உலகின் எந்த இடத்திலும், எக்காலத்திலும் பின்பற்றப்பட வேண்டும்" என்று எழுதியுள்ளார்.

குர்-ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மது அஸத் என்ற இஸ்லாமிய அறிஞர், ஸூரா 2:191ஐ பற்றி விளக்கமளித்துள்ளார். இந்த வசனத்தில் முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டில் எப்படி போரிட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வசனம் பற்றி முஹம்மது அஸத் விளக்கும் போது "குர்-ஆனில் சொல்லப்பட்ட இந்த சரித்திர விவரமானது, எல்லா காலத்துக்கும், சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் கட்டளையாக இருக்கிறது, இது முஸ்லிம்களுக்கு பொதுவான கட்டளையாகும்" என்று விளக்கமளித்தார். குர்-ஆனில் போர்கள் பற்றிய பல கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளது, அவைகள் அனைத்தும் தற்கால முஸ்லிம்களுக்கு பொருந்தும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. 

சிலுவைப்போர் மற்றும் ஸ்பானிஸ் இன்கியூஸிஸன் என்று சொல்லக்கூடிய வன்முறைகள் இஸ்லாமில் காணப்படும் போர்களுக்கு சமமான  வன்முறைகள் அல்ல. சிலுவைப்போர் மற்றும் ஸ்பானிஸ் இன்கியூஸிஸன் போன்ற வன்முறைகளுக்கு பைபிளில் ஆதாரமில்லை, அதனை பைபிள் அங்கீகரிப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சிலுவைப்போர் காலத்தில் திருச்சபைகளின் தலைவர்களில் சிலர் தங்கள் வன்முறைகளுக்கு பைபிளின் வசனங்களை தவறாக  மேற்கோள் காட்டியுள்ளார்கள், ஆனால், இவர்கள் செய்தது தவறாகும். பைபிள் அனுமதிக்காத ஒன்றை அனுமதிக்கிறது என்று பொய்யாய் காரணம் காட்டியுள்ளார்கள். ஆனால், இஸ்லாமில் காணப்படும் ஜிஹாத் போர்களுக்கு ஆதாரங்களை குர்-ஆனிலிருந்தே எடுத்து காட்டப்படுகின்றன. மேலும் முஹம்மதுவின் செயல்களும் கட்டளைகளும் ஜிஹாதை ஆதரிக்கின்றன. ஜிஹாத் என்ற இஸ்லாமிய கோட்பாட்டை எந்த ஒரு மத்திய கிழக்கு முஸ்லிம் அறிஞரும் மறுப்பதில்லை, ஏனென்றால், இஸ்லாமின் மையப்புள்ளி ஜிஹாத் ஆகும்.

சிலுவைப்போர்கள் மற்றும் ஸ்பானிஸ் இன்கியூஸிஸன் பற்றி என்னிடம் கேட்டால், "ஆவைகள் தீயச்செயல்கள். அவைகளை கிறிஸ்தவர்கள் என்றுச் சொல்லிக்கொண்டவர்கள் செய்தார்கள், ஆனால் அவைகளுக்கு பைபிளின் அங்கீகாரம் இல்லை" என்று நான் பதில் கொடுப்பேன். ஆனால், முஸ்லிம்கள் ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டு, அப்பாவி மக்களை கொன்றால், அவர்களின் செயல்களுக்கு இஸ்லாமின் அங்கீகாரம் உள்ளது, இஸ்லாமிய இறையியலில் அனுமதியும் உள்ளது.

கடைசியாக, 'கிறிஸ்தவர்கள் எப்படி வாழவேண்டும்?' என்பதை ஒருவர் தெரிந்துக்கொள்ள விரும்பினால், அவர் இயேசுவின் வாழ்க்கையை பார்க்கட்டும். மேலும் புதிய ஏற்பாட்டு காலத்தின் திருச்சபையைப் பார்த்து கற்றுக்கொள்ளட்டும். இயேசுவின் அமைதியான வாழ்க்கையை கண்டு அனேகர் அவர் மீது கோபம் கொண்டனர். அவரை பலமுறை கொல்லப்பார்த்தார்கள், இருந்தாலும் ஒருமுறை கூட அவர் 'வன்முறையை' பதிலுக்கு பதிலாக கொடுக்கவில்லை.  முஹம்மது அனேகரை கொன்றார், ஆனால், இயேசு ஒருவரையும் துன்புறுத்தவில்லை. இயேசு இவ்வுலகைவிட்டுச் செல்வதற்கு முன்பாக, தன் சீடர்களுக்கு ஒரு முக்கியமான கட்டளையை கொடுத்துவிட்டுச் சென்றார் (மத்தேயு 28:16-20). இது தான் தம்முடைய சீடர்களுக்கு அவர் கொடுத்த கடைசி கட்டளை, அதாவது இயேசுவின் சீடர்கள் உலகமெல்லாம் சென்று, மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியைச் சொல்லி, ஞானஸ்நானம் கொடுத்து, இயேசு கட்டளையிட்டவைகளை பின்பற்றும்படி போதிக்கவேண்டும், அவ்வளவு தான்.

உண்மையில், ஆரம்ப கால திருச்சபை எப்படி நடந்துக்கொண்டது என்பதை கவனித்தால் ஆச்சரியமாக இருக்கும். முஹம்மது மரித்த பிறகு, அடுத்த 100 ஆண்டுகளில் இஸ்லாம் எப்படி பரவியது என்பதை கவனியுங்கள், அதே போல இயேசு கடந்துச் சென்றுவிட்டபிறகு, திருச்சபையின் முதல் சில நூறு ஆண்டுகளில் கிறிஸ்தவம் எப்படி பரவியது என்பதை கவனியுங்கள். இஸ்லாம் போர்களினால் பரவியது, அதாவது ஸ்பெயின் முதல் சைனா மற்றும் இந்தியா வரை பரவியது. ஆனால், முதல் முன்னூறு ஆண்டுகள் கிறிஸ்தவம் கொடுமைகளின் மத்தியிலே ஐரோப்பா, ஆஃப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியாக பரவியது.

கிறிஸ்துவை ஒரு வழிகாட்டியாக கொண்டு வாழ்பவர்களைப் பார்த்து இவர்கள் 'வன்முறைகளினால், போர்களினால் கிறிஸ்துவை பரப்புகிறார்கள்' என்று யாராலும் குற்றம் சாட்டமுடியாது. இயேசுவின் வாழ்வும், புதிய ஏற்பாட்டின் வழி நடத்துதலும் தான் கிறிஸ்தவனுக்கு வழி காட்டுகின்றன. முஸ்லிம்கள் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பினால், சமாதான பிரபுவாகிய இயேசுவின் போதனைகளின் படி வாழ வேண்டும்.

அடிக்குறிப்பு:

[*] இது மிகவும் முக்கியமானது, அதாவது கிறிஸ்துவின் பெயரில் சிலர் சில நேரங்களில் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார்கள், பழைய ஏற்பாட்டிலும் அனேகர் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை மறைக்கமுடியாது, மறைக்கக்கூடாது. ஆனால், இந்த வன்முறைகள் இஸ்லாமின் வன்முறைக்கு ஈடாகாது. இஸ்லாமின் வன்முறையானது குர்-ஆனும், முஹம்மதுவும் அனுமதித்த ஒன்று. ஆனால் கிறிஸ்தவர்கள் புரியும் வன்முறை பைபிள் அனுமதிக்காத ஒன்று.

Source: http://www.str.org/articles/jihad-and-war-in-islam-and-christianity 

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon 

Translation: Answering Islam Tamil Team


இஸ்லாம் பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்துகிறதா?

"இஸ்லாம் பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்துகிறது" என்று மக்கள் அடிக்கடி சொல்வதை நான் கேட்கும்போதெல்லாம் மனதுக்கு சங்கடமாக இருக்கும். 9/11 தீவிரவாத செயல் நடந்துமுடிந்த ஒரு மாதத்திற்குள், "ஆர்ஃபா வின்ஃப்ரே" தம்முடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஜோர்டானின் 'குயீன் ரானியா' (Queen Rania)  என்பவரை அழைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசும் போது குயீன் ரானியா அவர்கள் 'பெண்களை ஆண்களுக்கு சமமாக இஸ்லாம் பார்க்கிறது, எனவே, பெண்களின் உரிமைகள் அனைத்தும் இஸ்லாமினால் பாதுகாக்கப்படுகிறது' என்று கூறினார்கள். 

குயீன் ரானியா, ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தும் அவர்களுக்கு முழு உரிமைகள் இருக்கலாம், ஆனால், அவ்வுரிமைகள் அனைத்தும் அவருக்கு இஸ்லாமினால் கிடைத்தவைகள் அல்ல என்பதை கவனிக்கவேண்டும்.

முஸ்லிம்களின் புனித நூல், குர்-ஆன் 'கீழ்படியாத மனைவிகளை கணவர்மார்கள் அடிப்பதை ஆதரிக்கிறது'.

குர்-ஆன் 4:34

4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

அரபி மூல மொழி வசனத்தில் 'இலேசாக' என்ற வாசகம் இல்லை என்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டும். (மொழியாக்கம் செய்தவர்கள், சுயமாக அடைப்பிற்குள் இப்படிப்பட்ட வாசகங்களை சொறுகி குர்-ஆனை காப்பாற்ற முயலுகின்றார்கள்.)

அதே குர்-ஆன் ஒரு முஸ்லிம் ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம் (குர்-ஆன் 4:3) என்று போதனை செய்கிறது. ஆனால், பெண்கள் மட்டும் ஒரே திருமணம் தான் செய்துக்கொள்ளவேண்டும்,  மேலும் சொத்துக்களில் கூட, ஆணுக்கு கிடைக்கின்ற பாகத்தில் பாதி மட்டுமே பெண்களுக்கு கிடைக்கிறது (குர்-ஆன் 4:176).  இன்னும் குர்-ஆன் போதிக்கும் இதர வசனங்களை கவனித்தால், இஸ்லாம் பெண்களை ஆண்களைவிட கீழானவர்களாக பாவிப்பதை பார்க்கமுடியும்.

இஸ்லாம் பெண்களை ஆண்களை விட கீழானவர்களாக பார்க்கிறது என்பதை, முஸ்லிம்களின் வாழ்க்கையை கவனித்தால் புரியும். இவ்வசனங்களின் உண்மையான பொருளை புரிந்துக்கொண்டு தான் முஸ்லிம் ஆண்கள் நடந்துக்கொள்கிறார்கள். 

ஸ்பெயின் நாட்டிலுள்ள  ஒரு மசூதியின் இமாம், முஹம்மத் கமல் முஸ்தஃபா (Mohamed Kamal Mustafa) என்பவர், தான் எழுதிய புத்தகத்தில், 'மனைவிகளின் உடல்களில் வடுக்கள் விழாதபடி எப்படி அடிக்கலாம்' என்று விவரிக்கிறார். அவரின் அறிவுரையின் படி, ஒரு மெல்லியதான கட்டை அல்லது தடியை எடுத்துக்கொண்டு, மனைவிகளின் கைகளிலும், கால்களிலும் அடிக்கவேண்டும், இப்படி செய்தால் அவர்களின் உடலில் வடுக்களோ,  அடித்த இடங்களில் அடையாளங்களோ காணப்படாது என்பதாகும்.

இஸ்லாமிய நபி முஹம்மதுவே ஒரு டஜன் பெண்களை திருமணம் செய்துக்கொண்டார். அவரது மனைவிகளில் ஒரு மனைவியின் குறைந்தபட்ச வயது ஆறு ஆகும். குர்-ஆன் முஹம்மதுவிற்கு மட்டும் ஒரு விதிவிலக்கை அளித்துள்ளது (குர்-ஆன் 33:50), அதாவது முஹம்மது மட்டும் நான்கிற்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்ற விதிவிலக்காகும். இந்த விஷயத்தில் குர்-ஆன் மிகவும் தெளிவாக, 'இந்த விதிவிலக்கு முஹம்மதுவிற்கு மட்டும் தான், இதர முஸ்லிம்களுக்கு அல்ல' என்றுச் சொல்கிறது.

மேலும், ஒரு மத சார்புள்ள  இஸ்லாமிய நாட்டின் பொது சட்டங்களையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற வாழ்க்கை முறைகளையும் கவனித்துப் பார்த்தால், உண்மை விளங்கும். அதாவது, இப்படிப்பட்ட இஸ்லாமிய நாடுகளில், பெண்கள் ஒரு உயிரற்ற பொருட்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை.

கடைசியாக, குயீன் ரானியா அவர்கள் ஆண்களுக்கு நிகராக  அனுபவித்துக்கொண்டு இருக்கும் உரிமைகளுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், "இஸ்லாமிய சமுதாயங்களில் ஆண்களுக்கு இருப்பது போன்று, சமமான உரிமைகளை முஸ்லிம்  பெண்களுக்கு இஸ்லாம் தருகின்றது" என்ற பொய்யை அவர் உலகிற்குச் சொல்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 2 ஆகஸ்ட், 2017

குர்-ஆன் வசனத்தை படிக்காதீர்கள் (Never Read a Qur'anic Verse)

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் குர்-ஆன் வசனம் படிப்பதை நீங்கள் எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்! அல்லவா? ஆனால்,  அது தான் இவ்வாண்டு நடந்தது. ரயீத் அல் சலாஹ் என்பவரின் குறும்படத்திற்கு (த வைட் ஹெல்மட்ஸ்) ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை வாங்க அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக, தனக்கு விருது வழங்கும் இவ்விழாவில் படிக்கும் படியாக அவர் ஒரு செய்தியை கொடுத்து அனுப்பியிருந்தார். அவர் அனுப்பியிருந்த செய்தியில் குர்-ஆனின் 5:32ம் வசனத்தின் ஒரு பகுதி இடம்பெற்று இருந்தது.  அவரது செய்தியின் சாராம்சம் இது தான்: "எங்கள் ஸ்தாபனம் குர்-ஆனின் இவ்வசனத்தில் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது - ஒரு உயிரை காப்பாற்றுபவன், ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை காப்பாற்றுபவனாகின்றான்" என்பதாகும்.

குர்-ஆனின் இந்த வசனத்தை மேற்கோள் காட்டுவது இது முதல் முறையல்ல. பைபிளின் யோவான் 3:16ம் வசனம் போன்று, இது குர்-ஆனின் புகழ்பெற்ற வசனம். நம்முடைய ஜனாதிபதி திரு ஓபாமா அவர்கள், 2009ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களுக்கு பிறகு, எகிப்தின் கெய்ரோ பட்டணத்தில் முஸ்லிம்களுக்காக ஒரு மேடையில் பேசினார். அப்போது இவ்வசனத்தை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.  அக்கூட்டத்தில் அவர் கூறியதாவது: "பரிசுத்த குர்-ஆன் இப்படி போதிக்கிறது, அதாவது ஒரு அப்பாவி மனிதனை கொன்று போடுபவன், மனித சமுதாயம் முழுவதையும் கொன்று போடுகிறான். எவர் ஒருவர் ஒரு உயிரை காப்பாற்றுகிறாரோ, அவர் முழு மனித சமுதாயத்தை காப்பாற்றுபவர் ஆகிறார்". குர்-ஆனின் இவ்வசனத்தை மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள், ஏனென்றால், அப்பாவி மக்களை கொல்லாதீர்கள் என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுவதாக, இவ்வசனத்துக்கு அவர்கள் பொருள் கொள்கிறார்கள். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், ஒரு மனிதனை கொல்வது எப்படிப்பட்ட குற்றமென்றால், ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை கொள்வதற்கு சமமான குற்றம் ஆகும். அதே போல, ஒரு மனிதனை காப்பாற்றினால், முழு மனிதவர்க்கத்தை காப்பாற்றியதற்கு சமம். 

நம்முடைய Stand to Reason கூட்டங்களில் நாங்கள் அடிக்கடி "பைபிளின் வசனத்தை படிக்காதீர்கள், பைபிளின் வசனங்களை படியுங்கள்" என்று போதிப்பது வழக்கம். பைபிளை படிக்கும் போது ஒரு பத்தியை, சில வசனங்களை அல்லது ஒரு அத்தியாயத்தை படியுங்கள், ஒரு வசனத்தை மட்டும் தனியாக படித்து பொருள் கொள்ளாதீர்கள் என்று  போதிப்போம். வசனம் சொல்லப்பட்ட பின்னணியை படித்து தெரிந்துக்கொள்ளாமல், வசனங்களை புரிந்துக்கொள்ள முயலவேண்டாம் என்று நாங்கள் கூறுவோம்.  இந்த போதனை குர்-ஆனின் வசனங்களுக்கும் பொருந்தும். குர்-ஆனின் 5:32ம் வசனத்தின் உண்மை பொருளை புரிந்துக்கொள்ள அதன் பின்னணியை புரிந்துக்கொள்வது அவசியமாகும்.  காயின் தன் சகோதரன் ஆபேலை கொன்றது பற்றி குர்-ஆனின் 5:32 - 33ம் வசனங்கள் பேசுகின்றன: 

5:32. இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு. (முஹம்ம்து ஜான் தமிழாக்கம்)

மேலே கொடுக்கப்பட்ட வசனங்களை அவைகளின் பின்னணியோடு படிக்கும் போது, இரண்டு விவரங்களை அறிந்துக்கொள்ளலாம். முதலாவதாக,  32ம் வசனத்தில்  அல்லாஹ் யூதர்களுக்கு  கட்டளை கொடுக்கிறான், முஸ்லிம்களுக்கு அல்ல.  இதனை "இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்" என்ற வாக்கியத்திலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.  அல்லாஹ் 33ம் வசனத்தில் முஸ்லிம்களுக்கு கட்டளை கொடுக்கின்றான். ஆனால், அல்லாஹ் யூதர்களுக்கு ஒரு விதமாக 32ம் வசனத்தில் கட்டளை கொடுக்கின்றான், 33ம் வசனத்தில் முஸ்லிம்களுக்கு வேறுவகையாக கட்டளை கொடுக்கின்றான். 

குழப்பம் செய்துக்கொண்டு திரிபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் படி அல்லாஹ் 33ம் வசனத்தில் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றான்.  அது என்ன தண்டனை? "(அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்". அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இப்படி தண்டனை கொடுங்கள் என்று சொல்லியிருக்கும் போது, ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் 32ம் வசனத்தை பின்னணியைச் சொல்லாமல் படித்ததினால், 'முஸ்லிம்கள் கொல்லக்கூடாது' என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று மக்கள் நம்பவேண்டும் என்று நினைத்துள்ளார்கள்.  குர்-ஆன் 5:33ல்  அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொல்லப்படது போல, பெரும்பான்மையான முஸ்லிம்கள் கொல்கிறார்கள், வெட்டுகிறார்கள் வன்முறையில் ஈடுபடுகிறர்கள் என்று நான் இங்கு சொல்லவரவில்லை. இது ஆய்வு செய்யவேண்டிய வேறு தலைப்பு ஆகும், அதைப் பற்றி இங்கு அலச வேண்டாம். என்னுடைய பொது மேடை பேச்சுக்களில், எழுத்துக்களில் நான் பல முறை 'பெரும்பான்மை முஸ்லிம்கள் அமைதியை விரும்புபவர்களாக இருக்கிறார்கள்' என்று சொல்லியுள்ளேன். இக்கட்டுரையின் கருப்பொருள் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதைப் பற்றியதாகும், முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியல்ல.

இரண்டாவதாக, குர்-ஆன் 5:32ல் 'அல்லாஹ்வின் வார்த்தை' என்று சொல்லப்படும் விவரமானது, புராதன கால யூத பாரம்பரிய நூலில் ( தல்மூத் - மிஸ்னா சாண்டெரின் 4:5ம் வசனத்தில்)  உள்ளதற்கு ஒத்து இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் 4:10 ல் வரும் 'காயின் தன் சகோதரன் ஆபேலை கொன்ற' நிகழ்ச்சிக்கு எழுதப்பட்ட விளக்கவுரையைத் தான் தல்மூத் நூலில் 4:5ல் காண்கிறோம்.  தல்மூத் ஆசிரியர் கீழ்கண்ட விதமாக விளக்கவுரை எழுதுகிறார், இதன் ஒரு பகுதி தான் குர்-ஆன் 5:32ல் அல்லாஹ்வின் வசனமாக நாம் காண்கிறோம்:

தல்மூத் 4:5 விளக்கவுரை:

காயின் தன் சகோதரனை கொன்ற விஷயம் பற்றி வேதம் 'உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது' என்றுச் சொல்கிறது.  மூல மொழியில் இந்த இடத்தில் 'இரத்தம்' என்று ஒருமையில் சொல்லப்படாமல், 'இரத்தங்கள்' என்று பன்மையில் சொல்லப்பட்டுள்ளது.  இறைவன்  ஒரே ஒரு மனிதனை மட்டுமே படைத்தார், இவன் மூலம் முழூ மனித வர்க்கம் உருவாக்கப்பட்டது. இதனை புரிய வைப்பதற்குத் தான் 'இரத்தங்கள்' என்று பன்மையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது அவன் ஒருவனைக் கொன்றான்,  ஆனால்,  அது முழு மனித இனத்தையும் கொன்றதற்கு சமமான குற்றமாக கருதப்படும். இதே போல, எவன் ஒரு தனி மனிதனை வாழவைக்கிறானோ (காப்பாற்றுகிறானோ), அவன் முழு மனித இனத்தையும் காப்பாற்றியதாக கருதப்படும்.

மேற்கண்ட யூத ரபியின் விளக்கவுரையை நான்  முழுவதுமாக ஏற்றுக்கொள்ளமுடியாது, இது வேறு விஷயம்.  இந்த விளக்கவுரையின் சுவாரசியம் எங்கு தொடங்குகிறது என்று பார்த்தால், 'குர்-ஆனின் ஆசிரியர்  மேற்கண்ட யூத ரபியின் விளக்கவுரையின் கடைசி இரண்டு வாக்கியங்களை எடுத்துக்கொண்டு, அவைகள் ஒரு யூத ரபியின் சொந்த விளக்கவுரை என்பதை உணராமல், அவைகளுக்கு 'அல்லாஹ்வின் வசனங்கள்' என்று அடையாளமிட்டு குர்-ஆனில் புகுத்தியது தான்'.

இதுவரை கண்ட விவரங்களின் சாராம்சம் இது தான்:

1) ஆதியாகமம் 4:10 ம் வசனத்துக்கு 'ஒரு தவறான விளக்கவுரையை எழுத' ஒரு யூத ரபிக்கு அல்லாஹ்  வஹி கொடுத்துள்ளான்,  அதன் பிறகு 400  ஆண்டுகள் கழித்து முஹம்மதுவிற்கு அதனை அறிவித்துள்ளான்.

அல்லது 

2) குர்-ஆன் 5:32ல் அல்லாஹ்வின் வார்த்தை இல்லை, மேலும் அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தல்மூத் விளக்கவுரையிலிருந்து எடுத்து குர்-ஆனில் புகுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விவரங்களில் எது சரியானதாக இருந்தாலும், ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது. ஆஸ்கார் விழாவில் வாசிக்கப்பட்ட வசனமானது "பின்னணியை ஒதுக்கிவிட்டு, தனியாக வசனங்களை வாசித்தால்' உண்டாகும் விளைவுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.  அடுத்த முறை யாராவது ஒரு மார்க்கத்தின் வசனங்களை வாசிப்பவர், 'பின்னணியை ஒதுக்கிவிட்டு, தனியாக வசனங்களை' வாசிக்காமல், அதைச் சுற்றியுள்ள முந்தைய பிந்தையை வசனங்களையும் வாசிக்கவேண்டும்.  இப்படி ஒருவர் செய்தால், அவருக்கு நிச்சயமாக ஆஸ்கார் விருதை தரலாம்.

Source: https://www.str.org/blog/never-read-quranic-verse

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon

Translation: Answering Islam Tamil Team


ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/alan_shlemon/never_read_quranic_verse.html

தனக்குத் தானே எதிராக பிரிந்திருக்கும் ராஜ்ஜியம் (A Kingdom Divided Against Itself)

நான் இஸ்லாம் பற்றிய தலைப்புக்களில் மேடையில் பேசும் போது, அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் கேள்வி இது தான்: 'முஸ்லிம்கள் தங்களுக்குள் ஏன் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்?' ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை கொல்லாமல், அதாவது தீவிரவாத செயல்கள் நடக்காமல் சூரியன் மறைவதில்லை என்றுச் சொல்லும் அளவிற்கு, உலகில் அனுதினமும் ஏதோ ஒரு வடிவில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் மற்றவர்களையும் கொல்கிறார்கள். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் எப்படி மேற்கத்திய நாடுகளை வெறுக்கின்றவொ, அதைவிட அதிகமாக ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவுகளிடையே வெறுப்புணர்வு ஒவ்வொரு நாளும் வளர்ந்துக்கொண்டு வருகிறது. இவ்விரு பிரிவினருக்கு இடையேயுள்ள இந்த வெறுப்புணர்வு சமீபகாலமாக உருவான ஒன்றல்ல. இஸ்லாமின் வயதும் இவ்வெறுப்புணர்வின் வயதும் ஒன்று என்றுச் சொல்லலாம்.

ஷியா சன்னி பிரிவினர்களின் இந்த வெறுப்புணர்வு சண்டைகள் 7ம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே வந்துள்ளது. அதாவது இஸ்லாமிய நபி முஹம்மது, தனக்கு பிறகு யார் தலைமை பீடத்தில் உட்காரவேண்டும் என்று ஒரு நபரை நியமிக்காமல் திடீரென்று மரித்ததால், முஸ்லிம்களிடையே கலீஃபா (இஸ்லாமிய ஆட்சி மற்றும் ஆன்மீகத் தலைவர்) யார் என்ற முடிவு எடுப்பதில் கருத்துவேறுபாடு உண்டானது. சன்னி பிரிவினரின் படி, கலீஃபா என்பவரை அனைவரும் ஒன்றாக கலந்து ஆலோசித்து நியமிக்கவேண்டும். ஷயா பிரிவினரின் படி, முஹம்மதுவின் குடும்பத்திலிருந்து ஒருவர் தான் (இரத்தவழியில் வந்தவர்) தலைவராக இருக்கவேண்டும் என்பதாகும்.

கி.பி. 632ல் முஹம்மது மரித்த பிறகு, அவரின் நெருங்கிய தோழர் மற்றும் ஆலோசகர் அபூ பக்கர் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை ஷியா பிரிவு முஸ்லிம்கள் 'சட்ட விரோதமானது' என்று கருதினார்கள். ஷியா முஸ்லிம்களின் படி, முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, அவரின் நெருங்கிய உறவினரும், மருமகனுமான அலி தான் கலீஃபா பதவிக்கு தகுதியானவர் ஆவார்.

காலம் கடந்துச் சென்றது. முதல் மூன்று கலீஃபாக்கள் நியமிக்கப்பட்டவர்களாகவே பதவி வகித்தார்கள். கி.பி. 656ம் ஆண்டு அலி அவர்கள் கலீஃபாவாக பதவி ஏற்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது. முன்றாவது கலீஃபா உஸ்மான் அவர்கள் கொல்லப்பட்டார்கள், அதன் பிறகு அலி அவர்கள் நான்காவது கலீஃபாவாக பதவி ஏற்றார்கள். அலியின் ஆட்சி காலத்தில், முஸ்லிம்களிடையே உள்நாட்டு கலவரம் வெடித்து, இஸ்லாமிய சம்ராஜ்ஜியம் இரண்டு அரசுகளாக அதாவது சன்னி மற்றும் ஷியா இராஜ்ஜியங்களாக பிரிந்துவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரையும் இவ்விரு பிரிவினர் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பல நூற்றாண்டுகால இந்த சண்டையை தீரிவரப்படுத்தும்படியாக, இப்பிரிவினருக்கு இடையே இன்னும் பல வேற்றுமைகள் புதிதாக உருவானது. மேலும் இவர்களுக்குள் உருவான கிளை பிரிவு ஜாதிகளினால் அந்த வேற்றுமை மிகப்பெரிய பிம்பம் எடுத்தது. துரதிஷ்டவசமாக, இவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்றுச் சொல்லிக்கொண்டு, மற்றர்கள் தவறான வழியில் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் 'தங்கள் கருத்தை நிலைநாட்ட எதிராளியை கொன்றாலும் தவறு இல்லை' என்ற நிலைக்கு வந்துள்ளார்கள். இதன் வெளிப்பாட்டைத் தான் நாம் அனுதினமும் செய்திகளில் வாசிக்கும் தற்கொலை வெடிக்குண்டு தாக்குதல்கள்.

Sourcehttp://www.str.org/blog/kingdom-divided-against-itself

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

To know about the Author, visitwww.str.org/training/speakers/alan-shlemon

Translation: Answering Islam Tamil Team


ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/alan_shlemon/kingdom-divided-against-itself.html