ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஐஸன்மேனின் ஊகக்கொள்கையை ஆய்வாளர்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள்?

இந்த தொடர் கட்டுரைகளில் இதுவரை சவக்கடல் சுருள்கள் பற்றிய அறிமுகத்தை கொடுத்தேன், அதன் பிறகு ஐஸன்மேனின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்தவத்தை விமர்சித்த பிஜே அவர்களுக்கு மறுப்பை எழுதினேன்.  இந்த கட்டுரையில் பேராசிரியர் ஐஸன்மேனின் கோட்பாட்டிற்கு சவக்கடல் ஆய்வாளர்கள் மற்றும் இதர அறிஞர்கள் கொடுத்த மறுப்பை அல்லது பதிலை காண்போம். 

இக்கட்டுரையை கீழ்கண்ட தலைப்புகளில் காண்போம்:

  1. ஐஸன்மேனின் புதிய கோட்பாடும், கிறிஸ்தவமும்.
  2. முதல் முறையாக 'கார்பன் 14' மூலமாக சவக்கடல் சுருள்களின் தேதியை கணக்கிட வற்புறுத்திய ஐஸன்மேன்
  3. இரண்டாம் முறையாக 'கார்பன் 14' கணக்கிடலும் ஐஸன்மேனின் குளறுபடிகளும்
  4. ஐஸன்மேனின் ஆய்வில் காணப்படும் பிழைகள்
  5. ஐஸன்மேனின் ஆய்வு பற்றி இதர ஆய்வாளர்களின் கருத்துக்கள்
  6. முடிவுரை

1. ஐஸன்மேனின் புதிய கோட்பாடும், கிறிஸ்தவமும்

கும்ரான் பகுதியில் வாழ்ந்த யூத பிரிவினர் (எஸ்ஸீன்ஸ்) தங்கள் குழு மக்கள் பின்பற்றுவதற்காக பல நூல்களை எழுதிவைத்திருந்தனர், இதனை Sectarian Documents என்று அழைப்பார்கள்.  

இந்நூல்களில் மூன்று வகையான நபர்கள் வருகிறார்கள்.

அ) The Teacher of Righteousness (நல்ல போதகர்)

ஆ) The Wicked High Priest (கெட்ட பிரதான ஆசாரியன்)

இ) The Man of Lie (பொய்யன்)

நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்கிறேன். 'நல்ல போதகர்' என்பவர் யூதர்களை வழிநடத்த வந்ததலைவர் ஆவார். அவரை 'கெட்ட பிரதான ஆசாரியன்' கொலை செய்துவிட்டான். 'பொய்யன்' என்பவன் யூதர்களை தவறான வழியில் நடத்தியவன். இவைகளில் வரும் விவரங்களுக்கு பேராசிரியர் ராபர்ட் ஐஸன்மேன் (Robert H Eisenman) ஒரு புதிய விளக்கத்தை கொடுத்தார்.

சடக்கடல் சுருள்களை ஆய்வு செய்த அறிஞர்கள் அனைவரும், கி.பி. 2ம் நூற்றாண்டில் நடந்த மெக்காபீன்கள் காலத்தில் நடைப்பெற்ற (கலவர) நிகழ்ச்சியைத் தான் இந்த சுருள்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று கூறுகிறார்கள். இதைப் பற்றிய விளக்கத்தை விவரமாக அறிய இந்த தொடுப்பை படிக்கவும்: Teacher of Righteousness

ஆனால், இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் ஐஸன்மேன், இயேசுவின் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகச் சொல்கிறார் (காலக்கட்டம் கி.பி. 30 முதல் 70 வரை).

இவரது கருத்தின் படி, 'நல்ல போதகர்' என்பவர் இயேசுவின் சகோதரர் யாக்கோபு ஆவார். கெட்ட பிரதான ஆசாரியன் என்பவன் 'அனனஸ் (Ananus)' ஆவான். இவன் தான் நல்ல போதகர் என்பவனை கொன்றவன். கடைசியாக, பொய்யன் என்பவன் பவுல் ஆவான். இதன் அடிப்படையில், ஐஸன்மேனின் படி யோவான் ஸ்நானகன், இயேசு மற்றும் அவரது சகோதரர் யாக்கோபு என்பவர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக, ரோமர்களுக்கு எதிராக புரட்சியில் இறங்கிய யூத இன தலைவர்கள் ஆவார்கள். யாக்கோபின் மரணத்துக்கு பிறகு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டதால், இவர்களை பின்பற்றிய மக்கள் தங்கள் சுருள்களை பாதுகாக்க கும்ரான் பகுதியில் உள்ள சவக்கடல் அருகில் இருக்கும் குகைகளில் தங்கள் பழைய ஏற்பாட்டு சுருள்களையும், தாங்கள் எழுதிய இதர சுருள்களையும் பாதுகாத்து வைத்தனர். 

இப்படிப்பட்ட புதிய கருத்துக்களைச் சொல்வது ஒன்றும் புதிதல்ல. ஆஸ்திரேலிய பேராசிரியர் பார்பரா தீரிங் என்பவர் கூட ஒரு புதிய கோட்பாட்டை கூறினார். அதாவது, யோவான் ஸ்நானகனின் கூட்டத்திற்கும், இயேசுவின் கூட்டத்திற்கும் இடையே நடந்த நிகழ்ச்சி தான் சவக்கடல் சுருள்களில் காணப்படுகிறது என்றுச் சொன்னார். இவரின் கருத்துப்படி, யோவான் ஸ்நானகன் தான் 'நல்ல போதகர்', இயேசுக் கிறிஸ்து 'கெட்ட பிரதான ஆசாரியன்' ஆவார். இயேசு தான் யோவான் ஸ்நானகனை கொன்றார் என்றெல்லாம் இவர் தம்முடைய கோட்பாட்டில் கூறினார். இவரது இந்த நிகழ்ச்சியை தொல்லியல் மற்றும் வேதாகம, மற்றும் மதசார்பற்ற அறிஞர்களின் உலகம், தகுந்த ஆதாரங்கள் இல்லாதபடியினால் தள்ளுபடி செய்துவிட்டது – பார்க்க: en.wikipedia.org/wiki/Barbara_Thiering

ஐஸன்மேன் விஷயத்துக்கு வருவோம். இவருடைய இந்த புதிய கோட்பாட்டில் அனேக பிழைகள் இருப்பதாக அறிஞர்கள் உலகம் சுட்டிக்காட்டினர். அந்த பிழைகள் நம்மைப்போல சாதாரண மக்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காக அவைகளை இங்கு தருகிறேன்.

2) முதல் முறையாக 'கார்பன் 14' மூலமாக சவக்கடல் சுருள்களின் தேதியை கணக்கிட வற்புறுத்திய ஐஸன்மேன்

சவக்கடல் சுருள்கள் 'தொல்லியல் மற்றும் பாலியோகிராபி' என்ற முறையில் அதன் காலம் கணக்கிடப்பட்டு, அது கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டது என்று சொல்லப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள ஐஸன்மேன் தயக்கம் காட்டினார், ஏனென்றால், இவரது புதிய கோட்பாட்டின் படி, அந்த சுருள்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டதாக இருக்கவேண்டும்.  அப்போது தான் அவர் சொல்லும் 'கதையை, கோட்பாட்டை' நம்பமுடியும். எனவே, இவர் 'கார்பன் 14' C-14 என்ற முறையில் சவக்கடல் சுருள்களின் காலத்தை கண்டுபிடிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக முன்வைத்தார். 

கார்பன்14 முறையில் நிச்சயமாக  தான் நினைத்த பதில் கிடைக்கும் என்று எண்ணினார். ஆனால், அந்த கார்பன் 14 முறையில் கூட, சுருள்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்று வந்தது, இவருக்கு அது ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதனை ஜீரணித்துக் கொள்ளமுடியாமல், கார்பன்14 முறையில் கணக்கிட்டவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். ஆனால், யூத மற்றும் மதசார்பற்ற ஆய்வாளர்கள் இவரது அறியாமையைக் கண்டு துக்கப்பட்டார்களே தவிர, இவர்  'ஒரு சீரியஸான ஆய்வாளர்' என்ற முறையில் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

3) இரண்டாம் முறையாக 'கார்பன் 14' ஆய்வும் ஐஸன்மேனின் குளறுபடிகளும்

தன்னுடைய கதைக்கு (ஊகக்கொள்கைக்கு) கார்பன் 14 முறையிலான ஆய்வு கைகொடுக்கும் என்று நம்பிய ஐஸன்மேனுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. ஆனால், இரண்டாம் முறையும் சவக்கடல் சுருள்களின் காலம் கார்பன் 14 மூலமாக கணக்கிடவேண்டும் என்ற கோரிக்கை இன்னொரு ஆய்வாளர் மூலமாக வந்தது. இது ஒரு சுவாரசியாமான நிகழ்ச்சி, இந்த ஆய்வாளர் வேறு யாருமில்லை, இந்த ஐஸன்மேனின் மாணவரும், நண்பரும் ஆவார், அவர் பெயர்  - Greg Doudna (கிரெக் டொட்னா) ஆகும்.

சவக்கடல் சுருள்களின் காலம் பற்றி, இவ்விருவருக்கு இடையே நடந்த உரையாடல்கள் மற்றும் வாக்குவாதங்களை நாம் பார்த்தால், பேராசிரியர் ஐஸன்மேனின் நம்பகத்தன்மை எப்படிப்பட்டது என்பது விளங்கும். ஐஸன்மேன் என்பவர் தான் சொல்லும் தியரி வீணாக போய்விடக்கூடாது என்பதற்காக எப்படிப்பட்ட தில்லுமுல்லுக்களைச் செய்தார் என்பதை அவரது மாணவரும், நண்பருமான இந்த ஆய்வாளர் சொல்வதை ஆங்கிலத்தில் இங்கு சொடுக்கி படியுங்கள். நான் தமிழில் வெறும் சுருக்கத்தை இங்கு தருகிறேன். 

Response to Robert Eisenman in the Huffington Post (Oct. 22, 2013) and Jerusalem Post (Oct. 21, 2013)

By Greg Doudna

October 2013

கீழே கொடுக்கப்பட்ட விவரங்கள் Greg Doudna என்வரின் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.

நான் (Greg Doudna) ஐஸன்மேனின் புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தேன், இவரது பரிந்துரையின் காரணமாக, முதன் முதலாக சவக்கடல் சுருள்கள் கார்பன் 14ன் முறைப்படி அதன் காலத்தை அறிய ஸ்விட்சர்லாண்ட், ஜூரிக் பட்டணத்தில், 1991ம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது என்பதை அறிந்துக்கொண்டேன். அதை படித்த போது, கார்பன் 14 முறை மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டாகிவிட்டது.  ஐஸன்மேனை நான் ஏற்கனவே 1987ம் ஆண்டு பாஸ்டனில் சந்தித்து இருந்தேன், அப்போது அவர் எனக்கு நல்ல அறிவுரைகளை கொடுத்தார். பலமுறை அவர் எனக்கு தொலைபேசி மூலமாக அழைத்து பேசினார், நான் பல்கலைக்கழகத்தில் இடமாற்றம் அடைவதற்கு எனக்கு உதவி செய்துள்ளார், இதனை மறக்கவே முடியாது. 

1991ம் ஆண்டு, நான் கொர்னேல் பல்கலை கழகத்தில்  முதலாமாண்டு படித்துக்கொண்டு இருக்கும் போது, ஐஸன்மேன் என்னோடு தொடர்பு கொண்டு, 'நாம் கலிபொர்னியாவிற்கு' போவோம் வா என்று அழைத்தார், நானும் அவரோடு சென்றேன். இந்த பயணம் மிகவும் முக்கியமானதாகும், அவரது குடும்பம் எனக்கு காட்டிய அன்புக்கும் உபசரிப்பிற்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இது மட்டுமல்ல, இதுவரை யாரும் பார்க்கமுடியாத ஒன்றை எனக்கு அவர் காட்டினார். அதாவது எந்த ஒரு மாணவனும் இதுவரை பார்க்காத, மக்களின் முன்னிலையில் கொண்டுவரப்படாத, 'சவக்கடல் சுருள்களில் படங்களை' இவர் எனக்குக் காட்டினார். நான் தான் உலகத்தில் முதன் முதலாக அச்சுருள்களை பார்த்த மாணவன். 

2006ம் ஆண்டு, ஐஸன்மேன் வெளியிட்ட 'The New Testament Code' என்ற புத்தகத்திலும் (பக்கம் 41-44), ஹப்பிங்சன் போஸ்ட், மற்றும் ஜெருசலேம் போஸ்ட் என்ற பத்திரிக்கைகளிலும் அவர் என்னைப் பற்றி கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்:

அவர் என்னைப் பற்றி எழுதும் போது, 'இது ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை  எனக்கு கொடுத்தது' என்று எழுதினார். ஏனென்றால், சவக்கடல் சுருள்கள் இரண்டாம் முறை கார்பன் 14 சோதனைக்கு உட்பட்டதற்கு நான் காரணமானேன் (டக்சன் 1994-95). அவர் ஏன் இப்படி எழுதினார் என்பதை புரிந்துக்கொள்ள, நம் முந்தைய கதையை இப்போது தொடர்கிறேன்.

கலிபோர்னியாவில், ஐஸன்மேன் எனக்கு சவக்கடல் சுருள்களின் படங்களை (Micro Film) காண்பித்தார். ஜூரிக் பட்டணத்தில், AMS ("Accelerator Mass Spectrometry") முறையில் கார்பன் 14 சோதனை செய்யப்பட இவர் தான் பரிந்துரை செய்தார், இந்த சோதனையின் முடிவு இவருக்கு சாதகமாக அமையவில்லை. இவர் எதிர்ப்பார்த்தது, கி.பி. முதல் நூற்றாண்டு என்று முடிவு வரும் என்பதாகும், ஆனால், இந்த சோதனையும் கி.மு. முதல்/இரண்டாம் நூற்றாண்டு என்று வந்தது. எங்களுடைய பயணத்தின் போது, இந்த கார்பன் 14 பற்றி இவரிடம் கேட்கவேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டு இருந்தேன், அதற்கு வாய்ப்பும் கிடைத்தது. 

நாங்கள் காரில் ஊருக்கு திரும்பி வந்துக்கொண்டு இருந்தோம், அப்போது அந்த கேள்வியை நான் கேட்டுவிட்டேன், ஆனால், அதற்கு அவர் கொடுத்த பதிலை நான் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் என்னிடம் 'Biblical Archaeology Review' என்ற குழுவிற்கு/பத்திரிக்கைக்கு ஒரு கடிதம் எழுது, அதில் ஜூரிக்கில் செய்யப்பட்ட கார்பன் 14 என்ற சோதனை தவறாக செய்யப்பட்டது என்று விமர்சனம் செய் என்று என்னிடம் சொன்னார். இந்த பதிலை நான் அவரிடம் எதிர்ப்பார்க்கவில்லை. ஜூரிக் பரிசோதனை கூடத்தில் நடைப்பெற்ற சோதனையை குறைகூற என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. நான் எப்படி ஆதாரமில்லாமல் அவர்களை குறைகூறமுடியும்? நான் அவருக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டேன்.

நான் நியூயார்க் திரும்பிய பிறகும், அந்த உரையாடல் என்னை தூங்கவிடவில்லை, எப்படியாவது, ஐஸன்மேனுக்கு உதவவேண்டும், ஆனால்,  அதே நேரத்தில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஜூரிக் பரிசோதனை கூடத்தை விமர்சிக்கக்கூடாது என்பதற்காக ஒரு முடிவிற்கு வந்தேன். ஜூரிக் அல்லாத வேறு ஒரு உலக புகழ்பெற்ற பரிசோதனைக் கூடத்தில் சவக்கடல் சுருள்கள் பற்றிய இரண்டாவது கார்பன் 14 பரிசோதனை செய்யப்படவேண்டும் என்று நான் விரும்பினேன். இதன் மூலம், ஐஸன்மேன் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி, 'Biblical Archaeology Review'க்கு ஒரு கடிதம் எழுதினேன். இந்த முறை நடக்கும் பரிசோதனைக்கு நானே பணத்தை கொடுப்பதாக அந்த கடிதத்தில் வாக்கு கொடுத்தேன். நான் ஒரு ஏழை மாணவனாக இருந்தாலும், எப்படியாவது $1800ஐ புரட்டவேண்டும் என்று முடிவு செய்தேன். 

என் கடிதத்தை போஸ்ட் செய்வதற்கு முன்பாக, ஒரு முறை ஐஸன்மேனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த கடிதத்தை படித்துக் காட்டலாம், அவர் அதிகமாக மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி, அவருக்கு போன் செய்தேன், அவருக்கு கடிதம் முழுவதையும் படித்துக் காட்டினேன். ஆனால், இனி எந்த ஒரு ரேடியோ கார்பன் பரிசோதனையும் சவக்கடல் சுருள்கள் மீது செய்யக்கூடாது என்ற முடிவில் இருந்தார், நான் அந்த கடிதத்தை அனுப்பக்கூடாது என்று என்னை கேட்டுக்கொண்டார், நான் துக்கத்தோடு ஆச்சரியப்பட்டேன். முதன் முதலாக அவர் செய்த ஜூரிக் கார்பன் பரிசோதனை தன்னுடைய கோட்பாட்டிற்கு எதிராக வந்தபடியினால், அவர் இந்த இரண்டாம் முறை பரிசோதனையை கூட நம்பவில்லை.  நான் அவருக்கு கார்பன் முறையில் உள்ள விஞ்ஞான உண்மைகளை எடுத்துச் சொன்னேன், அவர் கேட்கவில்லை, பல முறை நாங்கள் இருவரும் போனில் விவாதித்தோம். நான் அந்த கடிதத்தை அனுப்பக்கூடாது என்று கேட்டுக்கொண்டார், நான் அதன் அவசியத்தை அவருக்கு எடுத்துச் சொன்னேன்.

ஐஸன்மேனின் மறுப்பிற்கு எந்த ஒரு சரியான காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே நான் அந்த கடிதத்தை போஸ்ட் செய்துவிட்டேன்.  என் கடிதம் மே-ஜூன் மாத Biblical Archaeology Review (BAR) பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. Biblical Archaeology Reviewன் தலைமை ஆசிரியர் ஹெர்ஷெல் ஷான்க்ஸ் என் கடிதத்தை, " Israel Antiquities Authority"ன் அமிர் திரோரிக்கு அனுப்பி, ஏன் இந்த பரிசோதனையை நீங்கள் இரண்டாம் முறை செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். சில மாதங்கள் கழித்து, இஸ்ரேலிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது, உங்களின் கோரிக்கையை Israel Antiquities Authority ஏற்றுக்கொண்டது, உங்களின் விருப்பப்படி பரிசோதனையைச் செய்யலாம் என்று எழுதப்பட்டு இருந்தது. என்னுடைய ஒரு கடிதம் இவ்வளவு பெரிய வேலையை செய்யும் என்று நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. நான் டக்ஸன் (Tucson AMS Lab) பரிசோதனை கூடத்திற்குச் சென்று தேவையான இதர வேலைகளை முடித்தேன். 1994-1995ம் ஆண்டில், சவக்கடல் சுருள்கள் மீது இரண்டாம் ரேடியோ கார்பன் 14 பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த முறை வெளி வந்த முடிவுகள் கூட ஐஸன்மேனுக்கு சாதகமாக இல்லை. அவர் இரண்டாம் முறையும் ஏமாற்றப்பட்டார். என்னுடைய இந்த கடிதம், அவருக்கு இரண்டாம் முறையும் ஏமாற்றத்தை கொடுத்தபடியினால் தான் அவர் என்னைப் பற்றி, அப்படி எழுதினார். அவர் வேண்டாம் என்று தடுத்தும், நான் இரண்டாம் கார்பன் 14 முறையில் பரிசோதனையைச் செய்தபடியினால், அவர் என் மீது கோபமாக உள்ளார். 


உமர்: மேற்கண்ட ஆய்வாளர் தம்முடைய கட்டுரையில் இதர விஞ்ஞான விவரங்களை கொடுத்து, ஏன் ஜூரிக் மற்றும் டக்ஸன் பரிசோதனைகளின் முடிவுகளை நம்பவேண்டும் என்று ஆதாரங்களோடு விளக்குகிறார். அதனை மேலே கொடுத்த தொடுப்பில் வாசகர்கள் படிக்கலாம். 

நான் ஏன் இந்த விவரங்களை இங்கு கொடுத்தேன் என்று பார்த்தால், ஒரு பெரிய அறிஞர் 'ஐஸன்மேன்' தன்னுடைய கருத்துக்கு எதிராக விஞ்ஞான பரிசோதனைகள் இருக்கின்றன என்பதற்காக எப்படியெல்லாம் செயல்பட்டார் என்பதை புரிந்துக் கொள்வதற்காகத் தான்.

4) ஐஸன்மேனின் ஆய்வில் காணப்படும் பிழைகள்

இதுவரை பேராசிரியர் ஐஸன்மேனின் ஊகக்கொள்கையையும், அவரது செயல்பாட்டையும் கண்டோம். இப்போது சுருக்கமாக அவரது கோட்பாட்டில் உள்ள பிழைகளைக் காண்போம்.

  • சுருள்களின் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு என்று ஆய்வுகள் சொல்கின்றன, ஆனால் ஐஸன்மேன் அதனை ஏற்க மறுக்கிறார், எனவே மற்ற எல்லா ஆய்வாளர்கள் இவரை ஒரு வேடிக்கைபொருளாக பார்க்கிறார்கள் அல்லது இவரது கோட்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம், அவரை புறக்கணித்துவிடுங்கள் என்றுச் சொல்கிறார்கள்.
  • தன்னுடைய கோட்பாடு உண்மையென்று அறியப்படவேண்டுமென்றால், சுருள்களின் காலக்கட்டம் கி.பி. முதலாம் நூற்றாண்டு என்று வரவேண்டும் என்று விரும்பி, முதலாம் கார்பன் 14 பரிசோதனையைச் செய்ய இவர் வற்புறுத்தினார், ஆனால் முடிவு இவருக்கு சாதகமாக வரவில்லை. இரண்டாம் முறையும் கார்பன் 14 பரிசோதனை வேறு ஒரு ஆய்வுக்கூடத்தில் செய்யப்பட்டபோதும் இவருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. விஞ்ஞான பரிசோதனைகளை ஏற்காத இவரது கோட்பாடு ஆதாரங்கள் இல்லாமல் தோல்வி அடைந்துவிட்டது.
  • நல்ல போதகன், கெட்ட ஆசாரியன் மற்றும் பொய்யன் என்ற மூன்று பேர்கள் 'இயேசுவின் சகோதரர் யாக்கோபு, அனனஸ் என்ற ஆசாரியன்  மற்றும் பவுல்' என்று இவர் சொல்கிறார். ஆனால், இதர ஆய்வாளர்கள் அனைவரும் இவர்களை மெக்காபீன்கள் காலத்து நபர்களோடு சம்மந்தப்படுத்துகிறார்கள். 
  • சவக்கடல் சுருள்களின் சொந்தக்காரர்கள் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் என்று இவர் சொல்கிறார், ஆனால், அவைகள் எஸ்ஸீன்ஸ் என்ற யூதர்களின் சுருள்கள் என்று ஆய்வுகள், பரிசோதனைகள் சொல்கின்றன. 
  • சரித்திரத்தின்படியும், ஆய்வுகளின்படியும், யோவான் ஸ்நானகன், இயேசு மற்றும் அவரது சகோதரர் யாக்கோபு போன்றவர்கள் ஆன்மீகவாதிகள் என்று அறியப்பட்டிருக்கிறார்கள், இவரோ 'அவர்கள் அனைவரும் யூத சுதந்திர போராட்ட வீரர்கள்' என்றுச் சொல்கிறார். இதற்கு ஆதாரமில்லாதபடியினால், இதர அறிஞர்கள் இவரை புறக்கணிக்கிறார்கள்.
  • ஒரு ஆய்வாளர், இவருக்கு ஃபாக்ஸ் அனுப்பி ஒரு சிறிய கேள்வியை பல முறை கேட்டார், கடைசியாக ஐஸன்மேன் பதில் கொடுத்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி: சவக்கடல் சுருள்களில் யாக்கோபு, பவுல் பற்றி இருந்தால், முக்கியமான நபராகிய இயேசு பற்றி ஏதாவது உண்டா? என்பதாகும். அதற்கு ஐஸன்மேன் அளித்த பதிலைப் பாருங்கள்.

I was not to be denied. I sent him fax after fax asking him the simple question. If James the Brother of Jesus is the Righteous Teacher, who was Jesus, I couldn't find a character in the scrolls that would fit the picture.

He never answered the faxes until one day his assistant called and everything was made crystal clear. There was no mention of Jesus in the Dead Sea Scrolls because Jesus as a living historical figure, in their theory, did not exist. They could not state that publicly because of the fear of an outcry, but that was the situation.

Now there had been so-called minimalists, foremost amongst who is G.A. Wells, who has written extensively propounding this theory but who even academics in the field dismiss completely. Source

இயேசுவிற்கு இவரது கோட்பாட்டில் எந்த ஒரு இடமும் இல்லை, அதாவது இவர் ஆய்வு செய்த சவக்கடல் ஆவணங்களில் இயேசு பற்றி ஒன்றுமே இல்லை. இவரது கோட்பாடு தோல்வி அடைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இப்படி பல வகைகளில் ஐஸன்மேனின் கோட்பாடு தோல்வி அடைந்தது.

5) ஐஸன்மேனின் ஆய்வு பற்றி இதர ஆய்வாளர்களின் கருத்துக்கள்

இந்த உபதலைப்பில், புகழ்பெற்ற சவக்கடல் சுருள்களில் வேலை செய்த ஆய்வார்கள், மேலும் இதர ஆய்வாளர்கள் பேராசிரியர்  ஐஸன்மேனின் கோட்பாடு பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை மேற்கோள் காட்டப்போகிறேன். நான் தமிழாக்கம் செய்யாமல் ஆங்கிலத்தில் அப்படியே மேற்கோள் காட்டப்போகிறேன். மேலதிக விவரங்களை படிக்க விரும்புகிறவர்கள், கொடுக்கப்பட்ட தொடுப்புக்களை சொடுக்கி படித்துக் கொள்ளலாம்.

அ) Greg Doudna:

இவர் இரண்டாவது முறை கார்பன் 14 ஆய்வைச் செய்ய காரணமாக இருந்தவர். இவரைப் பற்றி நாம் முந்தைய உபதலைப்பில் கண்ட விவரங்கள் வெறும் சுருக்கம் தான், முழு கட்டுரையையும்  படிக்க இந்த தொடுப்பை சொடுக்கி, கிரேக் என்ன சொல்கிறார் என்பதை படியுங்கள்.

ஆ) ஐஸன்மேனின் தியரையை விமர்சிக்கும் அறிஞர்கள்

Admittedly, Eisenman is a professor of Middle-East religions and Director of the Institute for the Study of Judeo-Christian Origins at CSU, Long Beach. But Eisenman's critics are people like Hershel Shanks (editor of the Biblcal Archaeological Review), Daniel J. Harrington (see his article on the subject here, and his article in the Journal of Biblical Literature ("Qumran Cave Texts: A New Publication," v. 11/3, 1993), co-authored with Strugnell, criticizing Eisenman's earlier handling of translations of Cave 4 texts), William Stegner (senior scholar at Garrett-Evangelical Theological Seminary, whose review of the book in Christian Century(February 4-11 1998) makes the same charges against Eisenman that I do, in more detail. 

Most other scholars regard Eisenman as someone to be ignored.

மூலம்: http://www.tektonics.org/books/eisenbrojrvw.php

இ) Daniel J. Harrington

(see his article on the subject here, and his article in the Journal of Biblical Literature ("Qumran Cave Texts: A New Publication," v. 11/3, 1993), 

Robert Eisenman and Michael Wise in 1992 infuriated many of their scholarly colleagues by providing introductions, transcriptions, and translations for fifty Cave 4 documents.[9] The problem was that they skimmed off the "cream" of the Cave 4 texts and did their work badly:[10] their transcriptions and translations are often inaccurate, and the introductions place the texts within a hypothesis that almost all scholars reject: that the Qumran scrolls came from the "messianic movement" in Palestine that included Palestinian or "Jamesian" Christianity.

மூலம்: www.crosscurrents.org/deadsea.htm

ஈ) L.H. Schiffman (professor at NYU and DSS expert)

L.H. Schiffman (professor at NYU and DSS expert) says of Eisenman:

"What you essentially do is load on a whole lot of associative material that may or may not be parallel, and then deny all criteria of dating which specifies anything that we can possibly use -- one by one they're all written off -- then you take a fundamentally correct position (that all this stuff has got to be reevaluated and requestioned) and turn it into a bunch of jumbled information, which has nothing to do with the subject at hand.... Thus theory presents the notion that the entire set of documents is talking about a certain period, whereas virtually everybody believes that it dates to another period. So you must simply write off all evidence which doesn't fit your view."

மூலம்: http://www.answering-islam.org/Literature/eisenman.html

உ) In his 1994 book titled "Reclaiming the Dead Sea Scrolls", Schiffman goes on to say:

Second, the scrolls are not the documents of an early Christian sect. Contrary to claims by certain sensationalists, the scrolls never mention Jesus, John the Baptist, or James the Just, the "brother" of Jesus. Further, the scrolls in no way reflect Christian beliefs. The only way to make such an outrageous claim is to radically redefine Christianity to accord with the scrolls. In fact, the most recent carbon-14 testing has confirmed the dating that had already been established by paleography, which is the study of the shapes of Hebrew letters and of other ancient writing. Since all the material was composed before the rise of the early church, the Dead Sea Scrolls cannot refer to those events. [page xxi]

He [Eisenman] has advocated the view that the scrolls are closely linked to early Christianity, an approach that has gained few adherents. [page 25]

A similar view has recently been espoused by some who wish to claim that the scrolls refer directly to the early Christian movement. This view, as I previously maintained, is impossible to accept on chronological grounds. [page 120]

It must be stressed at the outset that the scrolls contain no references to Christianity. Christianity is a movement that began as a Jewish sect and then developed into a separate religious group. Because the sectarian documents [i.e., Dead Sea Scrolls] were authored before the careers of John the Baptist and Jesus, the scrolls make no mention nor do they even allude to these New Testament figures -- not withstanding specious claims to the contrary. [page 371]

மூலம்: http://www.answering-islam.org/Literature/eisenman.html

எ) Professor H. Stegemann said of Eisenman's hypothesis regarding the scrolls:

Commenting on the dating of the Dead Sea Scrolls accomplished by two independent Carbon-14 tests and paleographic techniques (all of which confirmed one another), Professor H. Stegemann said of Eisenman's hypothesis regarding the scrolls:

Therefore one may dismiss Dr. Eisenmann's ideas in this field. (quoted in "The People of the Dead Sea Scrolls", Garcia-Martinez and Barrera, 1993, p. 25)

மூலம்: http://www.answering-islam.org/Literature/eisenman.html

ஏ) DSS expert J.T. Barrera has added:

The thesis that Qumran manuscripts reflect Judaeo-Christian origins rests on incorrect dating of those manuscripts. (ibid, p. 25).

The certain fact is that the New Testament texts show many parallels and points of contact with the texts from Qumran. As the Essene writings are more ancient than the Christian writings it is logical to assume that the former could influence the latter. Undoubtedly, just as two parallel lines never actually meet, a Qumran text and a gospel text can run parallel without it meaning that the first has influenced the second directly. Study of comparative literature and comparative religion has often fallen into "parallelomania" (Sandmel), which confuses parallel with tangents and similarities of form or content with direct contacts or influences. (ibid, p. 203)

If only the points of contact between the New Testament texts and those from Qumran are noticed, a distorted view of them both results. It is important not to forget the points of disagreement, which we have not considered here but turn out to be more numerous and, in general, more significant. (ibid, p. 220)

உ) Fr. William Most

DEAD SEA SCROLLS: THREAT TO CHRISTIANITY?

Fr. William Most

The volume is controversial. A four day conference on the scrolls was scheduled for the New York Blood Center for Dec. 14-17, 1992, reported in Biblical Archaeology Review March-April, 1993, pp. 63-68. Less than a week before the conference, 18 prominent scholars released a statement strongly attacking the work of Eisenman and Wise, charging, "unethical appropriation" of the work of others, of using unnamed publications in a "fraudulent manner," hiding from the readers the fact that some things had already been published. The special point of condemnation was the claim that Eisenman and Wise had used a text called MMT, which had been edited previously by Elisha Qimron, who said "they stole my work." The two authors claim they worked with knowledge of the work of Qimron but not depending on it. Now that text, MMT, was put together out of several fragments - resulting in a problem to know in what order to put them - Eisenman and Wise claim they worked independently, and did not depend on the edition by Qimron. But some time back a samzidat (bootleg) copy of MMT was in general circulation. It contained some misjoins of fragments - the same misjoins used by Eisenman and Wise. According to Biblical Archaeology Review March-April, 1993, p. 65 Wise could not give a satisfactory explanation of how he had the same misjoins as the samzidat copy if he really had worked independently.

மூலம்: http://www.ewtn.com/library/SCRIPTUR/DEADSEA.HTM

ஐஸன்மேன் ஒரு சரித்திர ஆசிரியர் தான், பாலியோகிராஃபர் கிடையாது என ஒப்புக்கொண்ட வைஸ்:

Many scholars then boycotted the conference. But a sort of peace was made. The 18 signers of the statement were willing to "retract the statement and all it implies." Wise in turn in a published statement said he regretted the unintended impression on the degree to which some parts of the work were done independently of the work of others. He admitted indebtedness in part. According to the Biblical Archaeology Review report, on p. 65, Wise said that Eisenman is "an historian and not a paleographer", and was responsible chiefly for the interpretations of the texts.

ஊ) ஐஸன்மேனின் கோட்பாடு பற்றி உலக அறிஞர்களின் கருத்துத் தொகுப்பு: 

Good Question......how well-respected are the theories of Eisenman, Allegro, Thiering, and Baigent & Leigh concerning the Dead Sea Scrolls?

நான் இதோடு இந்த கட்டுரையை முடித்துக்கொள்கிறேன், வாசகர்கள் கொடுக்கப்பட்ட தொடுப்புக்களை முழுவதுமாக படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். 

முடிவுரை: பிஜே அவர்களைப் போல நுனிப்புல் மேயாமல், ஆழமாக ஆய்வு செய்து எழுதும் படி இதர முஸ்லிம் அறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன். வாசகர்கள் இக்கட்டுரைகள்  பற்றிய தங்கள் விமர்சனங்களை இந்த பக்கத்தின் மூலமாக எனக்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

தேதி: 6th Nov 2016


'சவக்கடல் சுருள்கள்' பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: 

ஐஸன்மேனின் கைகளினால் இஸ்லாமுக்கு கல்லறைக் கட்டும் பிஜே

முந்தைய கட்டுரைகள்: 

  1. சவக்கடல் சுருள்கள் அறிமுகம்
  2. சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
  3. சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை
  4. சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்
  5. சவக்கடல் குகைகள் 4-5ல் கிடைத்த சுருள்கள்
  6. சவக்கடல் குகைகள் 6-11ல் கிடைத்த சுருள்கள்
  7. சவக்கடல் சுருள்கள் – கிறிஸ்தவத்திற்கு அமிர்தமா அல்லது நஞ்சா?
  8. சவக்கடல் சுருள்கள் – இஸ்லாத்திற்கு வரமா? அல்லது சாபமா?
  9. பேராசிரியர் ஐஸன்மேன் யார்? சவக்கடல் சுருள்கள் பற்றிய அவரது கோட்பாடு (ஊகக்கொள்கை) என்ன?

நான் ஏற்கனவே சொன்னது போல, என்னுடைய இந்த தொடர் கட்டுரைகள் எழுதுவதற்கு முக்கியமான காரணம், பிஜே அவர்களின் விளக்கம் 271 ஆகும். 

பிஜே அவர்களின் 271வது விளக்கத்திற்கு மறுப்பு அளிக்க, நான்கு ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்டியிருந்தாலே போதுமானதாகும். ஆனால், தமிழ் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்  'சவக்கடல் சுருள்கள்' பற்றிய குறைந்தபட்ச விவரங்களை புரிந்துக்கொள்ளவேண்டுமென்பதற்காக, இந்த தொடர் கட்டுரைகளை தமிழில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இது மட்டுமல்ல, பிஜே போன்றவர்கள் இதர மேற்கத்திய அறிஞர்களின் கருத்துக்களை ஆதரித்து, அவைகளை முழுவதுமாக புரிந்துக்கொள்ளாமல், நுனிப்புல் மேய்வதினால் இஸ்லாமுக்கு உண்டாகும் ஆபத்தை விளக்குவதற்காகத்தான் இந்த முயற்சி. 

இப்போது, பிஜே அவர்கள் 271வது விளக்கத்தில் என்ன எழுதியுள்ளார், ஐஸன்மேனின் கருத்து எப்படி இஸ்லாமை இடித்துப்போடுகிறது என்பதை காண்போம். இதுவரை தெளிவுபடுத்திய விவரங்கள் இந்த மறுப்பு கட்டுரைக்கு உதவும். 

பிஜே அவர்களின் விளக்கம் 271ஐ இங்கு சொடுக்கி படிக்கலாம். பிஜே தம் விளக்கத்தில் செய்த பிழைகள் இவைகள் தாம்.

பிழை 1: குர்-ஆனின் குகைவாசிகள் கதையை, சவக்கடல் சுருள்களோடு சம்மந்தப்படுத்தியது பிஜேயின் முதல் பிழை. இதற்கு நான் கொடுத்த மறுப்பை இங்கு சொடுக்கி படிக்கலாம்.

பிழை 2: சவக்கடல் சுருள்கள் விஷயத்தில், பேராசிரியர் ஐஸன்மேனின் கருத்தை உண்மை என்று நம்பி, இஸ்லாமுக்கு ஆதரவாக எழுதியது இரண்டாவது பிழை.

பிழை 3: ஐஸன்மேனின் கருத்தை (ஊகக்கொள்கையை) முழுவதுமாக ஆய்வு செய்யாமல், அறைவேக்காடு என்றுச் சொல்வதற்கு ஏற்ப, தம்முடைய கருத்தைச் சொல்லி, கிறிஸ்தவத்தை விமர்சித்தது பிஜே அவர்களின் மூன்றாவது பிழையாகும்.

பிஜே அவர்கள் விதைத்ததை அறுவடை செய்யவேண்டாமா? பழைய ஏற்பாட்டின் சங்கீத புத்தகத்திலிருந்து ஒரு வசனம் ஞாபகத்தில் வருகிறது, 'கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்' என்பதாகும் (சங்கீதம் 126:5). ஆனால், பிஜே அவர்களின் விஷயத்தில், இது அப்படியே தலைகீழாக உள்ளது, ஒரு காலத்தில் கெம்பீரத்தோடு விதைத்த பிஜே அவர்கள், இன்று கண்ணீரோடே அறுவடைச்செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது ஜஸன்மேனின் கைகள் மூலமாக, பிஜே அவர்கள் எப்படி இஸ்லாமை இடித்துபோடுகிறார் என்பதை காண்போம். கீழ்கண்ட விளக்கத்திற்கு பிஜே அவர்கள் மறுப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் அல்லது அவருடைய 271வது விளக்கத்தை மாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

அடி 1: இயேசு ஒரு யூத சுதந்திர போராட்ட வீரர்:

பேராசிரியர் ஐஸன்மேனின் கருத்தின் படி, யோவான் ஸ்நானகனும், இயேசுவும் யூதர்களுக்கு ரோமர்களிடமிருந்து சுந்ததிரம் வாங்கிக்கொடுக்க போராடிய வீரர்கள் ஆவார்கள். ஆனால், குர்-ஆன் 'யோவானையும், இயேசுவையும்' ஆன்மீகத்தோடு மட்டுமே சம்மந்தப்படுத்தியுள்ளது. இவர்கள் 'தீர்க்கதரிசிகள்' என்று குர்-ஆன் சொல்கிறது. 

பிஜே அவர்கள் ஐஸன்மேனின் கருத்தை ஒப்புக் கொண்டபடியினால், குர்-ஆன் 3:38-39, 45-46,48-49ம் வசனங்கள் சொல்வதை மறுத்து, யஹ்யாவும், ஈஸாவும் நபிகள் அல்ல, அவர்கள் வெறும் யூத சுதந்திர போராட்ட வீரர்கள் என்று ஒப்புக்கொள்கிறாரா? ஐஸன்மேனின் கருத்து கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களுக்கு எதிராக உள்ளது. ஐஸன்மேனை ஆதரிப்பதற்காக பிஜே அவர்கள் இவ்வசனங்களை புறக்கணிக்கின்றாரா? அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்.

குர்-ஆன்

3:38. அப்போது தான் ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்''488 என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின்  வார்த்தையை90 அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.

3:45. "மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை90 பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ்92 என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

3:46. "அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார்.415 நல்லவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினர்)

3:48. அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும்491 கற்றுக் கொடுப்பான்.67

3:49. இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும்459 (ஈஸாவை அனுப்பினான்.)"உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் அனுமதியின்படி269 அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் அனுமதியின்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது'' (என்றார்)

பிஜே அவர்களுக்கு கேள்விகள்:

  • யஹ்யாவும், ஈஸாவும் நபிகளா? அல்லது யூத போராட்ட வீரர்களா?
  • இவ்விருவர் ஆன்மீக வாதிகளா? அல்லது தங்கள் தாய் நாட்டுக்காக போராடியவர்களா?
  • யார் சொல்வது உண்மை? பேராசிரியர் ஐஸன்மேனா? அல்லது அல்லாஹ்வா?

அடி 2: இயேசு அற்புதம் செய்தார் என்று குர்-ஆன் சொல்வது கட்டுக்கதையாகும்

பேராசிரியர் ஐஸன்மேனின் படி, இயேசுவின் பிறப்பு மற்றும் அவர் செய்த அற்புதங்கள் எல்லாம், பவுலினால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகளாகும். இயேசு ஒரு யூத நாட்டு சுதந்திரத்திற்காக போராடியவராக இருந்தார், ஆனால், பவுல் அந்த இயக்கத்தை ஆன்மீக இயக்கமாக மாற்றி, இயேசு தந்தையில்லாமல் அற்புதமாக பிறந்தார், அவர் பல அற்புதங்கள் செய்தார் என்று பொய்யாக சுவிசேஷங்களில் சேர்த்துவிட்டார் என்று ஐஸன்மேன் கூறுகிறார். 

பிஜே அவர்கள் ஐஸன்மேனின் கருத்தை ஒப்புக்கொண்டபடியினால், குர்-ஆனுக்கு மரண அடியை தனக்கு தெரியாமலேயே அடித்துவிட்டார். 

குர்-ஆன் 3:46ன் படி தொட்டில் குழந்தையாக இயேசு இருக்கும்போதே பேசினார், இது உலகில் இதுவரை நடக்காத அற்புதம்.

குர்-ஆன் 3:47ன் படி இயேசு தந்தையில்லாமல் பிறந்தார்.

குர்-ஆன் 3:49ன் படி, இயேசு கலிமண்ணினால் பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்தார், தொழுநோயையும் குணப்படுத்தினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார்.

ஆனால், பேராசிரியர் ஐஸன்மேனின் படி, மேற்கண்ட அற்புதங்கள் அனைத்தும், பவுலினால் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.  

பிஜே அவர்களே, குர்-ஆனின் மேற்கண்ட வசனங்கள் அனைத்தையும் பவுல் தான் இட்டுக்கட்டினார் என்று ஒப்புக்கொள்வீர்களா? பாவம் முஸ்லிம்கள்! தங்கள் குர்-ஆனில் பவுல் இட்டிக்கட்டியதை வைத்துக்கொண்டு, அதனை வேதம் என்று 14 நூற்றாண்டுகளாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது திரு ஐஸன்மேனின் ஆய்வின்படியும் பிஜே அவர்களின் உதவியினாலும் இதனை முஸ்லிம்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.  பிஜே அவர்களே! இன்னும் நீங்கள் குர்-ஆனை இறைவேதம் என்று நம்புகிறீர்களா?

அடி 3: இயேசுவே நபியாக இல்லாத போது, முஹம்மது எப்படி நபியாக முடியும்?

திரு ஐஸன்மேன்,  'இயேசு நபியில்லை' என்றும், அவரது பிறப்பு அற்புதமில்லையென்றும், அவர் அற்புதங்கள் செய்யவில்லையென்றும் கூறுகிறார். ஆனால், முஹம்மது மேற்கண்ட அனைத்தும் உண்டென்று நம்புகிறார். 

பிஜே அவர்கள் இப்போது யார் சொல்வதை நம்பப்போகிறார்கள்? யாருக்கு ஓட்டு போடப்போகிறார்கள்? ஐஸன்மேனுக்கா? அல்லது தங்கள் உயிரினும் மேலான முஹம்மதுவிற்கா?

அடி 4: யாக்கோபு யாராக இருப்பாரோ, இயேசுவும் அவராகவே இருப்பார்

ஐஸன்மேனின் கருத்துப்படி, ஒருவருக்கு 'இயேசு யார்?' என்று தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், அவர் முதலாவது 'இயேசுவின் சகோதரர் யாக்கோபு யார் என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும்'. யாக்கோபு ஒரு நபியாக இருந்தால், இயேசுவும் ஒரு நபி என்றுச் சொல்லலாம். யாக்கோபு ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருந்தால், இயேசுவும் ஒரு சுதந்திர போராட்ட வீரர்.

ஐஸன்மேனின் படி, யாக்கோபு ஒரு யூத கிளர்ச்சி போராட்ட வீரர், எனவே, இயேசுவும் ஒரு போராட்ட வீரர். 

ஐஸன்மேனை நம்பும் பிஜே, இயேசு ஒரு நபி அல்ல, குர்-ஆன் சொல்வது பொய்யாகும், ஐஸன்மேன் சொல்வதுதான் உண்மை என்றுச் சொல்வாரா?

'இஸ்லாமை அழிக்க முயலும் ஐஸன்மேனின் ஊகக்கொள்கை (Theory)'

பிஜே போன்றவர்கள் அரைகுறையாக ஆய்வு செய்து எழுதுகிறார்கள். 'இஸ்லாமை இது உறுதிப்படுத்துகிறது, கிறிஸ்தவத்தை எதிர்க்கிறது' என்று யாராவது  சொன்னால் போதும், அதன் பின்னணி என்ன? அவர் என்ன கோட்பாட்டைச் சொல்கிறார்? அது இஸ்லாமை ஆதரிக்கின்றதா? அல்லது குர்-ஆனோடு மோதுகின்றதா? போன்றவற்றை ஆராயாமல், உடனே அவருக்கு வக்காளத்து வாங்க ஆரம்பித்துவிடுவது. இது தான் பிஜே போன்ற முஸ்லிம்களின் வழக்கமாகிவிட்டது, பிழைப்பாகிவிட்டது. பொய்யான ஹதீஸ்களை கண்டுபிடிப்பதற்கு பிஜே அவர்கள் காட்டிய, காட்டும், காட்டப்போகும் முக்கியத்துவத்தைப் போன்று ஐஸன்மேன் போன்றவர்களின் கருத்துக்களுக்கும் காட்டியிருந்தால், இப்படி இஸ்லாமுக்கு பிஜே சமாதிகட்டியிருப்பாரா?

எங்கள் ஆய்வின் படி, சில ஹதீஸ்கள் குர்-ஆனோடு மோதுகின்றன என்றுச் சொல்லி, ஹதீஸ்களை புறக்கணிக்கும் பிஜே அவர்களே! இதே போல, மேற்கத்திய அறிஞர்கள் 'இஸ்லாமை ஆதரிக்கிறது' என்று மேலோட்டமாகச் சொல்லும் போது, அவ்வறிஞர்களின் கோட்பாடு குர்-ஆனோடு மோதுகின்றதா? என்று ஆய்வு செய்து எழுதலாம் அல்லவா?

இஸ்லாமை காப்பாற்ற புறப்பட்டுவிட்டேன் என்றுச் சொல்லிக்கொண்டு, அதே இஸ்லாமுக்கு கல்லறையைக் கட்ட வந்துவிட்டீர்கள் நீங்கள்! உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், 'பிஜே போன்றவர்கள் இஸ்லாம் பற்றி பேசாமல், எழுதாமல் இருந்தாலே போதும், இஸ்லாம் இன்னும் சில ஆண்டுகள், யாரிடமும் அடிவாங்காமல் இருக்கும்'.

முடிவுரையாக:

அ) சவக்கடல் சுருள்களுக்கும், இஸ்லாமுக்கும் நேரடியாக சம்மந்தமில்லை

ஆ) 'மறைமுகமாக சம்மந்தமுண்டு' என்றுச் சொன்னால், அது பழைய ஏற்பாட்டு நபிமார்கள் மூலமாக கொடுக்கப்பட்ட வேத எழுத்துக்களை அல்லாஹ் 2000 ஆண்டுகள் பாதுகாத்து, இன்று நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தான் என்று முஸ்லிம்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்.

இ) பேராசிரியர் ஐஸன்மேனின் கோட்பாடு, அல்லாஹ்விற்கும், குர்-ஆனுக்கும் இஸ்லாமுக்கும் எதிரானது என்பதை முஸ்லிம்கள் அறியவேண்டும்.

ஈ) சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷமாகும்.

உ) 1992க்கு பிறகு அனைத்து சவக்கடல் சுருள்கள் மக்களின் முன் கொண்டு வரப்பட்டது. அதனை ஆய்வு செய்த மதசார்ப்பற்ற அறிஞர்கள், யூத ஆய்வாளர்கள் கூட கிறிஸ்தவத்திற்கு எதிராக தங்கள் விரலை நீட்டமுடியவில்லை. கிறிஸ்தவ சபை மீது சாட்டப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.  

பிஜே அவர்களே! இஸ்லாமின் உண்மை நிலையை உறுதிச் செய்ய உங்களுக்கு குர்-ஆனும், முஹம்மதுவின் சுன்னாவும் போதுமானதாக இல்லாத போது, ஐஸன்மேனும் சவக்கடல் சுருள்களும் எப்படி உதவும்?

இதுவரை ஐஸன்மேனின் கோட்பாடு எப்படி இஸ்லாமுக்கு எதிராக இருக்கிறது என்பதை விளக்கினேன், அடுத்த கட்டுரையில் 'ஐஸன்மேனின் கோட்பாட்டிற்கு இதர ஆய்வாளர்கள் என்ன மறுப்பு கொடுத்துள்ளார்கள்? அவரது கோட்பாட்டில் உள்ள பிழைகள் என்னென்ன? அவரது ஆய்வில் அவர் தவரவிட்ட ஆதாரங்கள் எவைகள்?' என்பதைப் பார்ப்போம். இவ்விவரங்கள் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், மேலும், முஸ்லிம்கள் கூட சவக்கடல் சுருள்களின் விஷயத்தில் தங்கள் நிலையை சரி பார்த்துக்கொள்ளமுடியும்.

தேதி: 5th Nov 2016


'சவக்கடல் சுருள்கள்' பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/dead_sea_scrolls/pj_and_eisenman.html


பேராசிரியர் ஐஸன்மேன் யார்? சவக்கடல் சுருள்கள் பற்றிய அவரது கோட்பாடு (ஊகக்கொள்கை) என்ன?

முந்தைய கட்டுரைகள்: 

  1. சவக்கடல் சுருள்கள் அறிமுகம்
  2. சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
  3. சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை
  4. சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்
  5. சவக்கடல் குகைகள் 4-5ல் கிடைத்த சுருள்கள்
  6. சவக்கடல் குகைகள் 6-11ல் கிடைத்த சுருள்கள்
  7. சவக்கடல் சுருள்கள் – கிறிஸ்தவத்திற்கு அமிர்தமா அல்லது நஞ்சா?
  8. சவக்கடல் சுருள்கள் – இஸ்லாத்திற்கு வரமா? அல்லது சாபமா?

நான் இந்த சவக்கடல் சுருள்கள் பற்றிய விவரங்களை தொடர்களாக எழுதுவதற்கு காரணம், நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர் திரு பிஜே அவர்கள் ஆவார்கள். இவர் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தின் 271ம் விளக்கத்தில், சவக்கடல் சுருள்கள் பற்றி எழுதும் போது, பேராசிரியர் ஐஸன்மேன் என்பவரின் ஆய்வு பற்றி மேற்கோள் காட்டி விமர்சித்துள்ளார். 

நேரடியாக ஒரு கட்டுரையில் பிஜே அவர்களுக்கு பதில் எழுதுவதற்கு பதிலாக, கீழ்கண்ட மூன்று பிரிவுகளில் நான் பதிலை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

முதலாவதாக சவக்கடல் சுருள்கள் பற்றிய விளக்கம் (இதுவரை எழுதிய 8 தொடர்கள்)
இரண்டாவதாக, ஐஸன்மேன் அவர்களின் ஊகக்கொள்கை பற்றிய விளக்கம் (இந்த தொடர்)
மூன்றாவதாக, பிஜே அவர்களுக்கு மறுப்பு (அடுத்த தொடர்)

பிஜே அவர்கள்  ஐஸன்மேனின் ஆய்வை முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல், அவரது ஊகக்கொள்கையை (Theory) வம்புக்கு இழுத்தபடியினால், இஸ்லாமுக்கு மிகப்பெரிய கெடுதியை செய்துள்ளார். அதனை இத்தொடர் கட்டுரைகளை படிக்கும் போது புரிந்துக்கொள்ளலாம். இப்போது ஐஸன்மேனின் ஊகக்கொள்கையை சுருக்கமாக காண்போம்.

பேராசிரியர் ராபர்ட் ஐஸன்மேன் (Prof. Robert H Eisenman):

இவர் கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிடியின் தலைவராக இருக்கிறார். இவர் மத்திய கிழக்கு மதங்கள், அகழ்வாராய்ச்சி, மற்றும் இஸ்லாமிய சட்டம் பற்றிய துறையின் பேராசிரியராக இருக்கிறார். இவரைப் பற்றிய இதர விவரங்களை அறிய இந்த விக்கிபீடியா தொடுப்பை சொடுக்குங்கள்.

சவக்கடல் சுருள்களும் ஐஸன்மேனும்:

இவர் 1980/90களில் சவக்கடல் சுருள்கள் அனைத்தும் மக்களின் முன்னிலையில் கொண்டுவரப்படவேண்டும் என்று குரல் எழுப்பினார். சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்வதாகச் சொல்லி, ஒரு புதிய ஊகக்கொள்கையை (Theory) உலகிற்கு அறிமுகம் செய்தார். சவக்கடல் சுருள்களில் 'பைபிள் சம்மந்தமில்லாத இதர ஆவணங்களின்' காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்று பாலியோகிராபி என்ற முறையின் படி கண்டுபிடித்திருந்தனர். அதனை இவர் விமர்சித்து, ரேடியோ கார்பன் முறைப்படி மறுபடியும் காலத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவரது கட்டாயத்தினால், முதன் முதலாக  சவக்கடல் சுருள்கள் ரேடியோ கார்பன் 14ன் படி ஆய்வு செய்து காலத்தை கணக்கிட்டார்கள். இவர் "James the Brother of Jesus: The Key to Unlocking the Secrets of early Christianity and the Dead Sea Scrolls " என்ற புத்தகத்தை 1997ல் எழுதினார். அவர் தன்னுடைய புதிய கோட்பாட்டை இப்புத்தகத்தில் எழுதியிருந்தார். 

இவரைப் பற்றிய முன்னுரையை நான் இதோடு முடித்துக்கொள்கிறேன். இவரைப் பற்றிய இதர விவரங்களை மேலே கொடுக்கப்பட்ட விக்கிபீடியா தொடுப்பில் படிக்கலாம். இத்தொடரின் நோக்கம், இந்த ஆய்வாளரின் கோட்பாட்டை சுருக்கமாக விவரித்து, அதனை முஸ்லிம்கள் நம்புவதினால், அவர்கள் இஸ்லாமை எப்படி இடித்துப்போடுகிறார்கள் என்பதை விளக்குவது தான். இவர் எழுதிய 1000 பக்கங்கள் அடங்கிய மேற்கண்ட புத்தகத்தில் உள்ள அனைத்தையும் சொல்வது என் நோக்கமல்ல, அது தேவையும் இல்லை. எனவே, இவரது ஊகக்கொள்கையை இப்போது பார்ப்போம். இதை புரிந்துக்கொண்டால் தான், முஸ்லிம்களுக்கு கொடுக்கப்போகும் மறுப்பு புரியும். 

சவக்கடல் சுருள்கள் இரண்டு வகையான ஆவணங்களை உள்ளடக்கியது: 

  • பைபிள் சம்மந்தப்பட்டது (பழைய ஏற்பாட்டு புத்தகங்கள், விரிவுரைகள்) மற்றும் 
  • பைபிள் சம்மந்தப்படாத இதர ஆவணங்கள் (எஸ்ஸீன்ஸ் யூதர்களின் இதர மத சம்மந்தப்பட்ட புத்தகங்கள்).

பேராசிரியர் ஐஸன்மேனுக்கு பைபிள் சம்மந்தப்பட்ட சவக்கடல் சுருள்கள் பற்றி பிரச்சனையில்லை. இவரது ஆய்வு பைபிள் சம்மந்தப்படாத ஆவணங்கள் பற்றியது தான் (Sectarian documents), அதிலும் நான்காவது குகையில் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆவணங்கள் பற்றியது தான். இவர் சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தினர் அல்ல என்பதை மனதில் வைக்கவும். இவர் 1937ம் ஆண்டு பிறந்தார், மற்றும் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலக்கட்டத்தில் (1947ம் ஆண்டு) இவர் 10 ஆண்டுகள் நிரம்பிய சிறுவன். இவர் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த விவகாரத்தில் தலையிடுகிறார். 

பேராசிரியர் ஐஸன்மேனின் ஊகக்கொள்கை (கோட்பாடு):

1) செக்டேரியன் டாகுமெண்ட்ஸ் (Sectarian documents) என்றுச் சொல்லக்கூடிய ஆவணங்களின் காலமும், கும்ரான் பகுதியில் மக்கள் வாழ ஆரம்பித்த காலக்கட்டமும் கி.மு. 2ம் நூற்றாண்டு ஆகும் என்று  அனைத்து ஆய்வுகளும் சொல்கின்றன (மெக்காபீன்கள் காலம்). ஆனால், ஐஸன்மேன் அவர்களோ, 'அதன் காலக்கட்டம் இயேசுவிற்கு பிறகு வந்த காலமாகும் அதாவது கி.பி. 30 லிருந்து கி.பி 70 வரையிலானது' என்றுச் சொல்கிறார்.

2) இவரது கருத்துப்படி, முதல் நூற்றாண்டில் ஒரு யூத சுதந்திர போராட்ட இயக்கமாக கிறிஸ்தவம் ஆரம்பித்தது. அதாவது ரோமர்களுக்கு எதிராக எழுந்த யூத கிளர்ச்சிக்காரர்களின் இயக்கம் தான் கிறிஸ்தவம். சிகரி (Sicarii) போன்றதொரு கிளர்ச்சிக் குழு தான் கிறிஸ்தவம் கூட என்பது இவரது கருத்து. இது ஒரு ஆன்மீக குழுவல்ல, இது ஒரு சுதந்திர போராட்டக் குழு.

3) இவரின் கருத்துப்படி, யோவான் ஸ்நானகன் தான் முதலாவதாக, இந்த யூத கிளர்ச்சிக்கு (ரோமர்களுக்கு எதிராக பேசி, போராட்டம் செய்தவர்) வித்திட்டவர்

4) யோவான் ஸ்நானகனைத் தொடர்ந்து இயேசு அந்த யூத இயக்கத்தை நடத்திவந்தார். தேசத்துரோகி (கிளர்ச்சிக்காரர்) என்று குற்றம் சாட்டி ரோமர்கள் இயேசுவை கொன்றுவிட்டார்கள். 

5) இயேசுவிற்குப் பிறகு அவரது சகோதரர் யாக்கோபு அந்த யூத சுதந்திர போராட்டஇயக்கத்தை நடத்திவந்தார். இந்த குழுவில் இருந்த பவுலை யாக்கோபு புறக்கணித்து துரத்திவிட்டார். 

6) இயேசு தெய்வம் என்று பவுல் சொல்லி, நாட்டுக்கு சுதந்திரத்தை கொண்டுவர பாடுபட்டுக்கொண்டு இருந்த இயக்கத்தை ஆன்மீக இயக்கமாக மாற்றுகிறார் என்றுச் சொல்லி, யாக்கோபு பவுலை துரத்திவிட்டார். 

7) யாக்கோபு எருசலேம் தேவாலயத்தை கைவசப்படுத்திக் கொண்டு, அங்கு யூத மத சடங்குகளை நடத்தச் சென்றபோது, அப்போது பிரதான ஆசாரியராக இருந்த அனனஸ் (Ananus) இவரை பிடித்து, கல்லெரிய ஒப்புக்கொடுத்தார்.

8) இந்த காலக்கட்டத்தில் கும்ரான் பகுதிக்குச் சென்று தஞ்சம் அடைந்த அந்த யூத சுதந்திர இயக்கத்தின் அங்கத்தினர்கள் பதுக்கி வைத்த சுருள்கள் தான் கும்ரான் சவக்கடல் சுருள்கள்.

9) கி.பி. 68ல் ரோம படைகளால் எருசலேம் அழிக்கப்பட்ட போது இந்த கும்ரான் பகுதியில் வாழ்ந்த இவர்களும் அழிக்கப்பட்டுவிட்டனர்.

10) யூதர்களுக்கு சுதந்திரம் வாங்கித்தர போராடிய யோவான் ஸ்நானகன், இயேசு மற்றும் அவரது சகோதரர் யாக்கோபு போன்றவர்கள் உருவாக்கிய இயக்கத்தை, பவுல் ஒரு ஆன்மீக இயக்கமாக சித்தரித்து, இயேசுவை தெய்வமாக மாற்றி 'கிறிஸ்தவம்' என்ற பெயரில் அதனை மாற்றிவிட்டார். 

இவைகள் தான் பேராசிரியர் ஐஸன்மேன் அவர்கள் எழுதிய புத்தகத்தின் சுருக்கம். இந்த சுருக்கமான விவரம் நமக்கு போதும் என்று நம்புகிறேன்.

பேராசிரியர் ஐஸன்மேன், ஏன் 'சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதிப்படுத்துகின்றன என்றுச் சொன்னார்?' என்பதை இப்போது காண்போம்.

இவரின் கருத்துப்படி யாக்கோபின் போதனை பவுலின் போதனைக்கு நேர் எதிரானதாகும். இதைப் பற்றி இவர் இவ்வாறு சொல்கிறார் - "யாக்கோபின் போதனை -  நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்வதினால் இரட்சிப்பு உண்டாகும் என்பதாகும். பவுலின் போதனை – கிருபையினால் இரட்சிப்பு உண்டாகும் என்பதாகும்".

பேராசிரியர் ஐஸன்மேனின் படி இஸ்லாம் மற்றும் யாக்கோபின் நம்பிக்கை எப்படி ஒத்துப்போகிறது என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறார் என்பதை பாருங்கள் (Youtube விடியோ). 

யூத முறைமையின்படி நற்செயல்கள் செய்தால், இரட்சிப்பு அடைய முடியும் என்று யாக்கோபு கருதியதாக ஐஸன்மேன் கருதுகிறார். இது எதனை ஒத்து இருக்கிறது? இஸ்லாமை ஒத்து இருக்கிறதல்லவா என்றுச் சொல்கிறார். நல்ல செயல்களைச் செய்யுங்கள், உங்களுக்கு அல்லாஹ் சொர்க்கம் கொடுப்பான் என்பது தான் இஸ்லாமின் போதனை. பேராசிரியர் ஐஸன்மேன், தன்னுடைய மேற்கண்ட ஊகக்கொள்கையை நிருபிப்பதற்கு, இப்படி இஸ்லாமிய போதனையும், கும்ரான் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் போதனையும் ஒன்று தான் என்று கூறினார். 

நற்செயல்களைச் செய்யுங்கள், அது உங்களை சொர்க்கம் அடையச் செய்யும் என்ற நம்பிக்கை, இஸ்லாமுக்கும், யூதத்துக்கும் மட்டுமல்ல, உலகில் இருக்கும் அனேக மதங்களின் முக்கியமான கோட்பாடு இது தான். இந்து மதத்தில் கூட "நற்செயல்களைச் செய்யுங்கள், மோட்சம் அடைவீர்கள்" என்ற போதனை இல்லையா? அப்படியானால், யாக்கோபு என்பவரின் போதனை இந்துத்துவத்தை உறுதிச் செய்கிறது என்றுச் சொல்லலாம் அல்லவா? ஐஸன்மேன் என்ன சொல்கிறார் என்பதை சரியாக முஸ்லிம்கள் புரிந்துக்கொண்டால், 'இஸ்லாமை கும்ரான் குகைவாசிகளின் போதனை உறுதிப்படுத்துகிறது' என்ற சொற்றொடரில் உள்ள அர்த்தம் அவர்களுக்கு புரியும்.

பேராசிரியர் ஐஸன்மேன், தம்முடைய புத்தகங்களிலோ, நெர்க்கானல்களிலோ கீழ்கண்டவிதமாகச் சொல்லியுள்ளாரா? 

  • சவக்கடல் சுருள்களில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உள்ளது.
  • சவக்கடல் சுருள்களில் அல்லாஹ்வின் பெயர் உள்ளது.
  • இயேசு ஒரு நபி (தீர்க்கதரிசி) மட்டுமே என்று சவக்கடல் சுருள்கள் சொல்கின்றன?
  • மக்காவில் உள்ள காபாவை ஆபிரகாமும் இஸ்மவேலும் சேர்த்து தான் புதுப்பித்தார்கள் (கட்டினார்கள்).
  • அரேபியாவிலிருந்து வெளிப்படும் ஒரு நபிக்காக யூதர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள்
  • இன்னொரு வேதத்தை யூதர்களின் தேவன் அரேபியாவில் இறக்கப்போகின்றான்.

மேற்கண்ட விதமாக பேராசிரியர் ஐஸன்மேன் கூறவில்லை, அவரால் கூறவும் முடியாது. இவர் இன்றும் நம்மிடம் உள்ளார், அவருக்கு மேற்கண்ட தெளிவான கேள்விகளை எழுதி முஸ்லிம்கள் பதிலை பெற்றுக்கொள்ளலாம்.

முதல் நூற்றாண்டின் யூதப்புரட்சிக் குழு:

ஐஸன்மேனின் புதிய கோட்பாட்டில் அனேக ஓட்டைகள் உள்ளன. சவக்கடல் சுருள்களின் ஆய்வுக் குழுவில் இடம் பெற்று இருந்த  யூத, கிறிஸ்தவ மற்றும் மதசார்பற்ற அறிஞர்கள் அவருக்கு மறுப்பை அளித்துவிட்டார்கள். கும்ரான் வாசிகள் முதல் நூற்றாண்டில் உண்டான யூத சுதந்திரத்திற்காக போராடிய குழுதான், யோவான் ஸ்நானகன், இயேசு மற்றும் அவரது சகோதரர் யாக்கோபு என்பவர்கள், இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள் என்று அவர் சொன்ன கோட்பாடு, ஆதாரங்கள் இல்லாமல் துவண்டு விட்டது. இவரது இந்த புதிய கோட்பாட்டில் இருக்கும் பிழைகளை அடுத்தடுத்த கட்டுரையில் நாம் காண்போம். 

இஸ்லாமிய அறிஞர்களின் அறிவீனமான வாதத்திற்கு பதில் அளிப்பதற்காக ஜஸன்மேனின் சுருக்கமான கோட்பாட்டை நாம் இதுவரை பார்த்து இருக்கிறோம். இதன் அடிப்படையில், அடுத்த தொடரில் பிஜே அவர்களின் விமர்சனத்திற்கு பதிலையும், ஐஸன்மேனின் கருத்து மற்றும் கோட்பாடு எப்படி இஸ்லாமை இடித்துபோடப்போகிறது என்பதையும் காண்போம்.

அடிக்குறிப்புக்கள்

1) Dead Sea Scrolls: Threat to Christianity?

2) Robert Eisenman's "James the Brother of Jesus"

3) JAMES, the Brother of JESUS

4) Good Question...how well-respected are the theories of Eisenman, Allegro, Thiering, and Baigent & Leigh concerning the Dead Sea Scrolls?

5) Answering Eisenman

தேதி:5th Nov 2016


'சவக்கடல் சுருள்கள்' பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/dead_sea_scrolls/dss_eisenman_theory.html


சவக்கடல் சுருள்கள் – இஸ்லாத்திற்கு வரமா? அல்லது சாபமா?

முந்தைய கட்டுரைகள்: 

  1. சவக்கடல் சுருள்கள் அறிமுகம்
  2. சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
  3. சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை
  4. சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்
  5. சவக்கடல் குகைகள் 4-5ல் கிடைத்த சுருள்கள்
  6. சவக்கடல் குகைகள் 6-11ல் கிடைத்த சுருள்கள்
  7. சவக்கடல் சுருள்கள் – கிறிஸ்தவத்திற்கு அமிர்தமா அல்லது நஞ்சா?

நான் சவக்கடல் சுருள்கள் பற்றிய இந்த தொடர் கட்டுரைகளை எழுதுவதற்கு முக்கியமான காரணம் முஸ்லிம் அறிஞர்களின் விமர்சனமாகும். சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை ஆதரிக்கின்றது என்றும், கிறிஸ்தவத்தை எதிர்க்கின்றது என்றும் அவர்கள் புரளியை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒரு முஸ்லிம் அறிஞர் திரு பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆவார்கள். இவரது விமர்சனத்திற்கு அடுத்தடுத்த தொடர்களில் பதில் தரப்படுகின்றது. 

இந்த தொடரில், இஸ்லாமுக்கு சவக்கடல் சுருள்களினால் பயன் உண்டா? எந்த வகையில் சவக்கடல் இஸ்லாமுக்கு சம்மந்தப்படுகின்றது என்பதை கேள்வி பதில் வடிவில் சுருக்கமாக காண்போம். 

கேள்வி 1: சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதிப்படுத்துகிறது என்கிறார்களே! இது உண்மையா?

பதில் 1: இது பொய்யாகும். இஸ்லாம் கி.பி. 7ம் நூற்றாண்டில் வந்தது, சவக்கடல் சுருள்கள் கி. மு. 2 லிருந்து கி.பி. 1 நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்ட யூத சுருள்கள். ஐஸன்மேன் என்ற ஒரு அறிஞர் 'சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதிப்படுத்துகிறது' என்று கூறினார். ஆனால், அவர் எந்த கோணத்தில் அவ்வாக்கியத்தைச் சொன்னார்? அவரின் ஆய்வு என்ன? அவரின் ஆய்வு இஸ்லாமை எப்படி இடித்துப்போகின்றது என்பதை அடுத்த இரண்டு தொடரில் எழுதுகிறேன். அவைகளை படித்த பிறகு முஸ்லிம் நிச்சயமாக தங்கள் தவறான கருத்துக்கு வருந்துவார்கள்.

கேள்வி 2: சவக்கடல் சுருள்களில் முஹம்மது பற்றிய தீர்க்கதரிசனம் உண்டு என்கிறார்களே!

பதில் 2: சவக்கடல் சுருள்களில் முஹம்மது பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை. சவக்கடல் சுருள்களில் பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் உண்டு, மேலும் எஸ்ஸீன்ஸ் என்ற யூத பிரிவினர் தங்களுக்காக எழுதிக்கொண்ட இதர புத்தகங்களும் உள்ளன. ஆனால், முஹம்மது பற்றிய எந்த ஒரு துப்பும் அவைகளில் இல்லை. தற்போது, சவக்கடல் சுருள்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, ஆய்வு செய்ய விரும்புவர்கள் தாராளமாக செய்யலாம். 

கேள்வி 3: அப்போஸ்தலர் பவுலடியார் தான் கிறிஸ்தவத்தை உருவாக்கினார், இயேசு அல்ல என்று சவக்கடல் சுருள்கள் சொல்கிறதாமே!

பதில் 3: இதனை எங்கு படித்தீர்கள்? எந்த சுருளில் படித்தீர்கள்? நம்மிடம் இருக்கும் பைபிளில் உள்ள பழைய ஏற்பாட்டு புத்தகங்கள், சவக்கடல் சுருள்களிலும் கிடைத்துள்ளது. மேலும், புதிய ஏற்பாட்டு புத்தகங்களில் ஒரு புத்தகம் கூட சவக்கடல் சுருள்களில் கிடைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, கும்ரான் பகுதியில் வாழ்ந்தவர்கள் யூதர்கள் ஆவார்கள், அதுவும் அதிகமாக கட்டுப்பாடு உள்ள எஸ்ஸீன்ஸ் என்றுச் சொல்லக்கூடிய யூதர்கள் ஆவார்கள். இவர்களிடம் பழைய ஏற்பாட்டு நூல்கள், அவைகளின் விரிவுரைகள் இருந்தன. கி.பி. 68ம் ஆண்டு எருசலேம் ரோமர்களால் அழிக்கப்பட்ட போது இவர்களும் அழிந்துவிட்டார்கள். இக்காலக்கட்டத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் கடிதங்கள் எழுதப்பட்டு, திருச்சபைகளில் வாசிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இந்த கும்ரான் யூத பிரிவினர், தங்களுக்காக மேசியா வருவார் என்று காத்துக்கொண்டு இருந்தார்களே தவிர, கிறிஸ்தவம் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

நான் மேலே குறிப்பிட்டது போல, பேராசியர் ஐஸன்மேன் என்ற அறிஞர் ஒரு புதிய புனைகருத்தை (ஊகக்கருத்து - Theory) முன்மொழிந்தார். அது ஆதாரமற்றது என்று உலக அறிஞர்கள் புறக்கணித்துவிட்டார்கள். 

நம் இஸ்லாமிய சகோதரர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணமாக, பேராசிரியர் ஐஸன்மேனின் அந்த புதிய தியரி என்ன? அதனால் இஸ்லாமுக்கு என்ன நன்மை? அல்லது என்ன தீமை? போன்றவற்றை அடுத்த இரண்டு தொடரில் பார்ப்போம். முஸ்லிம்கள் திரு ஐஸன்மேனை இஸ்லாமுக்கு ஆதாரமாக காட்டுவது, தங்கள் கால்களில் இருக்கும் செருப்பை கழற்றி தாங்களே அடித்துக்கொள்வதற்கு சமம் என்பதை அப்போது புரிந்துக்கொள்வார்கள். 

கேள்வி 4: பழைய ஏற்பாட்டின் மூல நூல்கள் பற்றிய முஸ்லிம்களின் விமர்சனத்தை சவக்கடல் சுருள்கள் எப்படி சந்திக்கிறது?

பதில் 4: 1947 வரை  நாம் பயன்படுத்திய பழைய ஏற்பாட்டின் மூல நூல்களின் காலக்கட்டம் கி.பி. 9-10ம் நூற்றாண்டுகளாகும். இதனை முஸ்லிம்கள் ஒரு விமர்சனமாக முன்வைத்தார்கள். உங்கள் பழைய ஏற்பாட்டு மூல நூல் பிரதிகள் கி.பி. 9-10க்கு சம்மந்தப்பட்டது, ஒவ்வொரு முறை கைகளினால் பிரதிகள் எழுதப்படும் போது, அனேக பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இயேசுவின் காலத்தில் அல்லது அவருக்கு முன்பு வாசிக்கப்பட்ட பழைய ஏற்பாடு எங்கே? உங்களிடம் கி.மு.க்கு சம்மந்தப்பட்ட மூல நூல்கள் உண்டா? என்று முஸ்லிம்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், 1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சவக்கடல் சுருள்கள், மேற்கண்ட விமர்சனத்துக்கு சாவு மணி அடித்துவிட்டது.  சவக்கடல் சுருள்களின் காலக்கட்டம் கி.மு. 2 லிருந்து  கி.பி. 1ம் நூற்றாண்டுவரையானதாகும்.  இதுமட்டுமல்ல, நம்மிடமுள்ள பழைய ஏற்பாட்டோடு, சவக்கடல் சுருள்களை ஒப்பிட்டுப் பார்த்த ஆய்வாளர்கள் வாயடைத்துவிட்டார்கள். ஓராயிரம் ஆண்டுகள் பிரதி மேல் பிரதி எடுத்தாலும், ஒரு சில எழுத்துப்பிழை தவிர வேறு எந்த ஒரு கோட்பாட்டு வித்தியாசம் இல்லாமல் பழைய ஏற்பாடு இருப்பது, ஆச்சரியமே! என்று கூறுகிறார்கள். 

இனி முஸ்லிம்கள் மேற்கண்ட விமர்சனத்தை இன்னும் சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன்.  

கேள்வி 5: சில சவக்கடல் சுருள்களை வெளியிடாமல் பல ஆண்டுகள் ஆய்வாளர்கள் தாமதித்தது ஏன்? இதிலிருந்து கிறிஸ்தவர்கள் ஏதையோ மறைக்கிறார்கள் என்று தெரிகின்றதல்லவா?

பதில் 5: இந்த கேள்வியில் உண்மையில்லை. சவக்கடல் சுருள்கள் அனைத்தும் 1947ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டுவரை கண்டெடுக்கப்பட்டது. இஸ்ரேல் ஒரு நாடாக அறியப்பட்ட காலக்கட்டம் அது, யுத்தச் சூழலும்  அரசியலில் நிலையற்ற தன்மையிருந்த காலம் அது. இது மட்டுமல்லாமல் சவக்கடல் சுருள்களின் ஆய்வுக்குழுவின் முதல் இரண்டுத் தலைவர்கள் திடீரென்று மரித்துவிட்டார்கள் (Roland de Vaux and Perre Benoit).  சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்துக்கொண்டு இருந்த ஆய்வாளர்கள், தங்கள் வேலையை முழுவதுமாக முடிப்பதற்குள் மரித்துவிட்டார்கள் (Patrick Skehan, Yigael Yadin and Jean Starky). அச்சுருள்கள் பலர் கைகளுக்கு இடம் மாறியது. கும்ரான் குகைகள் ஜோர்டானுக்கு சொந்தமாக அறியப்பட்டிருந்தது, ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.முதன் முதலாக சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை ஜோர்டன் அரசாங்கமே அமைத்தது. மேலும், இக்குழுவில் இருந்த பல அறிஞர்கள், இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்படக்கூடாது என்று விரும்பியவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வாளர்கள் சிலர் ஆய்வு செய்யாமல், நிலைவையில் போட்டு விட்டார்கள். 4ம் குகையில் கிடைத்த சில சுருள்கள் தவிர மீதமுள்ள குகைகளில் கிடைத்த சுருள்கள் வெளியிடப்பட்டாகிவிட்டது. 1990ம் ஆண்டுக்கு பிறகு, 4ம் குகை சுருல்கள் கூட வெளியிடப்பட்டாகிவிட்டது.  

இப்போது நம் முன் நிற்கும் கேள்விகள் இவைகளாகும். 1990க்கு பிறகு அனைத்து சுருள்களும் வெளியிடப்பட்டு விட்டது. அவைகளின் முழு ஆங்கில மொழியாக்கமும் வெளியிடப்பட்டு விட்டது. கிறிஸ்தவ சபை சவக்கடல் சுருள்களின் உண்மையை உலகிற்கு தெரிவிக்க பயப்படுகின்றது என்று  1990க்கு முன்பு வரை குற்றம் சாட்டியவர்கள் இப்போது, தங்கள் ஆய்வை செய்யட்டும். சவக்கடல் சுருள்களின் ஆய்வில் ஈடுபட்டு இருந்தவர்களில் மதசார்பற்ற ஆய்வாளர்கள், கிறிஸ்தவ ஆய்வாளர்கள், யுத ஆய்வாளர்கள் என்று அனைத்து தர ஆய்வாளர்களும் இருந்தனர். 

பேராசிரியர் ஐஸன்மேன் போன்றவர்களும் பலவாறு அடாவடி அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால், 90க்கு பிறகு அதுவரை வெளியிடாமல் இருந்த சுருள்கள் வெளியிட்ட பிறகு அமைதியாக இருந்துவிட்டனர். 

கிறிஸ்தவ சபையோ, யூத சமுதாயமோ சவக்கடல் சுருள்களில் எதையும் மறைக்கவில்லை. தங்களுக்கு கிடைத்த பொக்கிஷங்களை ஏன் அவர்கள் மறைப்பார்கள்? அந்த சுருள்கள் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றது. இந்த இணைய தள காலத்தில் எல்லோரும் அவைகளை பார்க்கவேண்டுமென்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இனியும், கிறிஸ்தவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்றுச் சொல்வது அறிவுடமையுள்ளவர்களுக்கு தகாது. 

கேள்வி 6: பழைய ஏற்பாட்டில் எங்கள் முஹம்மது பற்றிய அறிவிப்புக்கள் இருந்தன, அதனை கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டார்கள் என்ற வாதத்தின் நிலை என்ன?

பதில் 6: இயேசுவின் காலத்துக்கு முன்பு இருந்த பழைய ஏற்பாட்டில் முஹம்மது பற்றிய அறிவிப்புக்கள் இருந்தன என்றும், அவைகளை யூதர்களும் கிறிஸ்தவர்களும் மாற்றிவிட்டார்கள் என்ற ஒரு பொய்யான தகவலை முஸ்லிம்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  இவர்களின் இந்த பொய்யை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது சவக்கடல் சுருள்கள். கி.பி. 9/10ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்ட சுருள்களோடு, இயேசுவிற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டு சவக்கடல் சுருள்களை ஒப்பிட்டுப் பார்த்த போது, முஸ்லிம்கள் சொல்வது போல எதுவும் நடக்கவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது. அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சுருள்களை ஒப்பிட்டுப் பார்த்த போது, எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

முஸ்லிம்களில் யாராவது இந்த ஆய்வை செய்ய விரும்பினால், அவர்களுக்கு வாசல் (சவால்) திறந்தேயுள்ளது. ஆய்வை செய்ய தைரியமுள்ளவர்கள் முயன்று பார்க்கட்டும், அவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சும் என்பதில் சந்தேகமில்லை. முஹம்மது பழைய ஏற்பாட்டில் முன்னறிவிக்கப்பட்டுள்ளார் என்றுச் சொல்வது, தற்காலத்தில் ஏற்புடையது அல்ல. 

கேள்வி 7: குர்-ஆன் சொல்லும் இஸ்லாம் மார்க்கமும் சவக்கடல் சுருள்களின் சொந்தக்காரர்களான அந்த யூத பிரிவினரின் மார்க்கமும் ஒன்று தானே? சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதிச் செய்கிறது என்பது உண்மை தானே!

பதில் 7: குர்-ஆன் சொல்லும் இஸ்லாமும், சவக்கடல் சுருள்கள் சொல்லும் மார்க்கமும் ஒன்றல்ல. இவ்விரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன. அறியாமையில் பேசும் முஸ்லிம்கள் மட்டுமே, இப்படி இவ்விரண்டும் ஒன்று என்றுச் சொல்வார்கள். உதாரணத்திற்கு, இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் சில வித்தியாசங்களைப் பார்ப்போம். அதன் பின்பு, கும்ரான் குகைவாசிகளின் மார்க்கமும், இஸ்லாமிய மார்க்கமும் குறைந்தபட்சம் மேலோட்டமாகவாவது ஒன்றுபடுகின்றதா என்பதை முஸ்லிம்களே முடிவு செய்யட்டும்.

வித்தியாசம் 1: கும்ரான் பகுதி யூத பிரிவினர்களிடம் 'ஆசாரியத்துவம்' என்ற ஊழியத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. அதாவது அவர்கள் தங்களை 'ஆசாரியர்களின் குமாரர்கள்' என்று அழைத்துக்கொண்டனர். அதாவது பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலில் இருந்த 12 பிரிவுகளில் 'லேவி' என்ற ஒரு வம்சத்திற்கு தேவன், தேவாலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்யும் படி அனுமதித்தார். அந்த லேவியர்கள் தான் இவர்கள். இஸ்லாமில் இப்படிப்பட்ட ஒரு வகை உண்டா? ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே மசூதிக்குள் ஊழியம்  (இமாம்) செய்யவேண்டும் என்ற சட்டமுண்டா? 

வித்தியாசம் 2: இந்த கும்ரான் வாசிகள் 'உலகில் நடக்கும் நல்லவைகளுக்கு தேவன் காரணம் என்றும், தீயவைகளுக்கு சாத்தான் (பெலியல்) காரணம் என்றும்' நம்புகிறார்கள். ஆனால், இஸ்லாமின் படி, உலகில் நடக்கும் நல்லவைகளுக்கும், தீயவைகளுக்கும் அல்லாஹ் தான் காரணம் ஆவான். அப்படியானால், கும்ரான் வாசிகளும், குர்-ஆன் வாசிகளும் எப்படி ஒன்றானவர்களாக இருக்கமுடியும்? இவ்விருவரின் அடிப்படை நம்பிக்கையே எதிர்மறையாக இருக்கும்  போது, கும்ரான் வாசிகள் இஸ்லாமை உறுதிப்படுத்துகிறார்கள் என்றுச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

வித்தியாசம் 3: கும்ரான் வாசிகள் சூரிய காலண்டரை (சோலார் காலண்டர்) பயன்படுத்தியவர்களாக இருந்தார்கள், முஸ்லிம்களோ சந்திர காலண்டரை (லூனார் காலண்டர்) பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இதுவரை பின்பற்றிய நாட்கணக்கு தவறானது என்று கருதி, இனி சோலார் காலண்டரை பின்பற்றுவார்களா?

வித்தியாசம் 4: கும்ரான்வாசிகள் விவாகரத்து செய்வது ஹராம் என்று கருதினார்கள், மேலும் இராஜாவைத் தவிர மற்ற மக்கள் ஒரே மனைவியை உடையவனாக இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள். ஆனால், இஸ்லாமில் ஒவ்வொரு முஸ்லிமும் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்யலாம் (பல தாரமணம்) என்ற சட்டம் உள்ளது. சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதி செய்தால், என்ன நடக்கும் என்று இப்போது சிந்தித்துப் பாருங்கள் முஸ்லிம்களே! முஹம்மது தவிர மீதமுள்ள அனைத்து பலதார மணம் புரிந்த அனைவரும் பெரும்பாவம் (ஷிர்க்) செய்தவர்களாவார்கள். அதாவது முஹம்மதுவின் தோழர்களாகிய அனைவரும் பெரும்பாவிகள் என்று ஏற்றுக்கொள்ள தயாராக முஸ்லிம்கள் இருக்கிறார்களா?

வித்தியாசம் 5: கும்ரான் வாசிகள் தாங்கள் குழுவாக உட்கார்ந்து திராட்சை ரசம் குடிப்பவர்களாக இருந்தார்கள். முஹம்மது தம்முடைய தோழர்களுடன் சேர்ந்து திராட்சை ரசம் குடிப்பவராக இருந்தாரா?

வித்தியாசம் 6: கும்ரான் வாசிகள் 'சத்தியம்' செய்வதை ஆதரிக்கவில்லை. அதாவது ஒருவர் தங்களுடைய பிரிவில் சேரும் போது மட்டுமே அவர் சத்தியம் செய்யவேண்டும், அதன் பிறகு மரிக்கும் வரை சத்தியம் செய்யக்கூடாது. ஆனால், இஸ்லாமில் சத்தியம் செய்வது, சாபம் இடுவதும் அனுதின வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. அனேக முறை அல்லாஹ்வே சத்தியம் செய்கின்றவனாக இருக்கிறான். 

இப்படி அனேக வித்தியாசங்களை காட்டலாம். ஒருபோதும் கும்ரான்வாசிகள் குர்-ஆனை உறுதிச்செய்யவில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், சவக்கடல் சுருள்கள் இஸ்லாமுக்கு ஒரு வரமல்ல, அது ஒரு சாபமாகும். எனவே இஸ்லாமுக்கு சாகா வரம் வேண்டுமென்பவர்கள் சவக்கடல் சுருள்கள் பக்கம் வராமல் இருப்பார்களாக! இதனை அறிந்துக்கொள்ளாமல் சில முஸ்லிம் அறிஞர்கள் தங்கள் தலையில் மட்டுமல்ல, அல்லாஹ்வின் தலையிலும் மண்ணை வாரி போடுகிறார்கள்.

இதைப் பற்றி மேலும் அதிகபடியான விவரங்களை அடுத்த இரண்டு அத்தியாயங்களில் காண்போம்.

தேதி: 2nd Nov 2016


'சவக்கடல் சுருள்கள்' பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/dead_sea_scrolls/dss_curse_to_islam.html