ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 14 ஜூலை, 2015

2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

[இதர ரமளான் கடிதங்களை வாசிக்க இங்கு சொடுக்கவும். 2015 ரமளான் கடிதம் 12ஐபடித்துவிட்டு இந்த 13ம் கடிதத்தை படிக்கவும்]

உமரின் தம்பி உமருக்கு எழுதிய கடிதம்:

அன்புள்ள அண்ணாவிற்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கடிதம் கண்டேன், படித்தேன். நீங்கள் இஸ்லாமை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை உங்களிடம் நான் பேசிக்கொண்டு இருந்தேன்.  ஆனால், கலிஃபாக்களின் வாழ்க்கையை நீங்கள் விமர்சிக்கும் விதத்தைப் பார்த்தால், இனி என்னால் உங்களை திருத்தமுடியுமா? என்ற சந்தேகம் வந்துவிட்டது. நீண்ட நேரம் சிந்தித்தேன், உங்களோடு இனி இஸ்லாம் பற்றிய உரையாடல்களை தொடரக்கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். 

இது தான் நான் உங்களுக்கு எழுதும் கடைசி கடிதம். ஆனால், இந்த கடிதத்திலும், கிறிஸ்தவம் பற்றிய முக்கியமான கேள்விகளை உங்களிடம் கேட்டுவிடலாம் என்று எண்ணி இந்த கடிதத்தை எழுதுகிறேன். 

சொர்க்கவாசிகள் பற்றி நீங்கள் அதிகமாக விமர்சித்தால், நானும் விமர்சிப்பேன் என்று என் முந்தைய கடிதத்தில் எழுதினேன். ஆகையால், இந்த கேள்விக் கணைகள் உங்களை நோக்கி வீசுகிறேன், முடிந்தால், பதில் சொல்லுங்கள். 

கேள்விகள்:

1) எங்கள் இறைத்தூதர் அல்லாஹ்விடமிருந்து வஹி பெற்று எப்படி தன் தோழர்கள் 10 பேருக்கு சொர்க்கத்தை வாக்கு செய்தாரோ, அதே போல இயேசுவும் தம் சீடர்கள் சொர்க்கவாசிகள் என்று வாக்கு கொடுத்துள்ளார். 

2) சொர்க்கவாசிகள் என்று வாக்குறுதி பெற்ற சஹாபாக்கள் சொர்க்கவாசிகள் போல நடந்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் விமர்சித்தீர்கள். ஆகையால், இப்போது அப்போஸ்தலர்கள் சொர்க்கவாசிகளாக நடந்துக் கொண்டார்களா என்று எனக்கு விளக்குங்கள்.

3) சஹாபாக்கள் பற்றி முஹம்மது சொன்னது செல்லுபடியாகாது என்றால், அப்போஸ்தலர்கள் பற்றி இயேசு சொன்னது மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

4) இதுமட்டுமல்ல, சஹாபாக்கள் உயிரோடு இருக்கும் போதே " சொர்க்கவாசிகள்" என்று வாக்கு கொடுத்தபடியினால், அனேக இறையியல் பிரச்சனைகளை அல்லாஹ் சந்திக்கிறான் என்றால், அதே கேள்விகள் இப்போது இயேசுவிற்கு எதிராகவும் வருகிறது. அல்லாஹ்விற்கு நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் இயேசுவிற்கும் பொறுந்தும். இதற்கு உங்கள் பதில் என்ன? உதாரணத்திற்கு: சீடர்கள் சொர்க்கவாசிகள் என்று சொல்லப்பட்ட காலம் முதற்கொண்டு அவர்கள் மரிக்கும் வரைக்கும் உள்ள காலகட்டத்தில் அவர்கள் செய்த பாவங்களை இயேசு என்ன செய்தார்? மறந்துவிட்டாரா? அல்லது மன்னித்துவிட்டாரா?

5) சீடர்களுக்கு மட்டுமல்ல, தன்னோடு பக்கத்தில் சிலுவையில் அறையுண்ட ஒரு கள்ளனைப் பார்த்து அவனுக்கு பரலோகம் வாக்கு செய்கிறார் இயேசு. இது கிறிஸ்தவ இறையியலுக்கு பிரச்சனைகளை உண்டாக்காதா?

6) அந்த கள்ளன் ஞானஸ்நானம் பெறவில்லை, நீங்கள் மாதாமாதம் எடுக்கின்ற இராபோஜனம் என்றுச் சொல்கின்ற, ரொட்டியும், திராட்சை ரசத்தையும் எடுக்கவில்லை, பாவமன்னிப்பு கோரவில்லை. இப்படியிருக்க அவன் எப்படி இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்வீர்கள்? அண்ணா, இங்கு கிறிஸ்தவ இறையியல் ஆட்டம் காணுகின்றதே! இதற்கு கொஞ்சம் பதில் சொல்வீர்களா?

7) மிகவும் முக்கியமான கேள்வி, இயேசு சீடர்களைப் பார்த்து நீங்கள் 12 பேர் பரலோக ராஜ்ஜியத்தில் சிம்மானத்தில் உட்கார்ந்து 12 யூத கோத்திரங்களை நியாயந்தீர்ப்பீர்கள் என்றுச் சொன்னார். ஆனால், யூதாஸ் தற்கொலை செய்துக் கொண்டான், எண்ணிக்கையில் ஒரு சீடன் குறைந்துவிட்டான். யூதாஸ் பரலோகம் செல்லமாட்டான் என்று இயேசுவிற்கு தெரியாதா? 12 சீடர்களை சொர்க்கவாசிகள் என்று இயேசு சொன்னது தவறு தானே! அல்லது யூதாஸ் கூட சிம்மானத்தில் மற்ற சீடர்களோடு உட்கார்ந்து நியாய்ந்தீர்ப்பாரா?

அண்ணே, இதற்காகத் தான் " மிகவும் ஜாக்கிரதையாக எழுதுங்கள் " என்று  நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

இப்போது இவைகளுக்கு பதில்களைத் தாருங்கள், பார்க்கலாம். இனி நான் உங்களுக்கு பதில்களை எழுதமாட்டேன்.

இப்படிக்கு,

உங்கள் தம்பி

சௌதி அரேபியா


உமரின் பதில்:

அப்போஸ்தலர்கள் சொர்க்கவாசிகளே!

அன்பான தம்பிக்கு,

வாழ்த்துதல்கள் சொல்லி அண்ணன் உமர் எழுதும் கடிதம்.

உன் கடிதத்தை படித்து நான் வேதனையுற்றேன். இனி நான் இஸ்லாம் பற்றி உங்களுடன் உரையாட மாட்டேன் என்று நீ எடுத்த முடிவு சரியானதல்ல. நீ இவ்வளவு சீக்கிரத்தில் சோர்ந்து போவாய் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. நீ எந்த விஷயத்திலும் எளிதில் தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டாய். நீ கடைசி மூச்சுவரை போராடுபவன் என்பதை மறந்துவிட்டாயா?  நீ தொடர்ந்து என்னுடன் உரையாடவேண்டும், எனக்கு எழுதவேண்டும்.  

நீ இறைத்தூதர் என்று நம்புகிற முஹம்மது தம்முடைய கடைசி மூச்சுவரை போராடினார் என்பதை மறந்துவிடாதே! அவர் தொடர்ந்து முன்னேரிக்கொண்டே சென்றார் [அவர்  போராடியது சத்தியத்தின் பக்கமா அசத்தியத்தின் பக்கமா என்பது வேறு விஷயம்]. 

நீ உன் முடிவை மாற்றிக்கொள், தொடர்ந்து என்னோடு பேசு, உரையாடு, என்னை நீ ஆதாயப்படுத்திக் கொண்டால், உனக்கு அல்லாஹ் நற்கூலி கொடுப்பான் என்பதை மறந்துவிடாதே. ஒருவன் இஸ்லாமை விமர்சித்தால், உடனே உன் நம்பிக்கை அற்றுப்போகுமா? உன்னோடு அல்லாஹ் இல்லையா? அல்லாஹ் உனக்கு வழிகாட்டமாட்டானா? கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு சரியான பதில்களைத் தர அல்லாஹ் உனக்கு உதவமாட்டானா? சோர்ந்துப் போகாதே! மனமே, சோர்ந்துப் போகாதே!

தம்பி, நீ நிச்சயமாக எனக்கு பதிலை எழுதுவாய் என்று நான் நம்புகிறேன். தம்பி, இதில் யார் வெற்றி பெறுகிறார்? யார் தோல்வியடைகிறார்? என்ற பேச்சுக்கு இடமில்லை. அதற்கு பதிலாக, யார் யாரை சொர்க்கவாசியாக மாற்றுகிறார் என்பதைத் தான் நாம் கவனிக்கவேண்டும். நீ என்னை வென்றுவிட்டால், உன் நம்பிக்கையின் படி நான் உன்னோடு கூட சேர்ந்து சொர்க்கவாசியாவேன். நான் உன்னை வென்றுவிட்டால், என் நம்பிக்கையின் படி நீ என்னோடு கூட சொர்க்கவாசியாவாய். நம் இருவரின் உரையாடலின் நோக்கம் இது தான். ஆங்கிலத்தின் இப்படி சொல்வார்களில்லையா ! "Win Win Situation". இது போலத்தான் நம்முடைய இந்த உரையாடல்கள்.

இப்போது, நீ கேட்ட கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு நான் பதிலைத் தருகிறேன். நீ கேட்ட கேள்விகள் அனைத்தையும் நான் கீழ்கண்ட ஐந்து தலைப்புகளாக மாற்றி பதில் தருகிறேன். 

1) சீடர்கள் சொர்க்கவாசிகளே! என்று கிறிஸ்தவர்கள் எப்படி நிருபிக்கப்போகிறார்கள்?

2) சொர்க்கவாசிகள் பற்றிய முஹம்மதுவின் நற்செய்தி செல்லுபடியாகாது என்றால், இயேசுவின் நற்செய்தி எப்படி செல்லுபடியாகும்?

3) சொர்க்கவாசிகளான அப்போஸ்தலர்களும், கிறிஸ்தவ இறையியலின் பிரச்சனைகளும்

4) சொர்க்கவாசிகள் 12 பேரில் யூதாஸும் ஒருவரா? 

5) சிலுவையில் அறையுண்ட கள்ளன் கிறிஸ்தவ இறையியலுக்கு களங்கமில்லாமல் எப்படி சொர்க்கவாசியானான்? 

முடிவுரை

---------------------

1) சீடர்கள் சொர்க்கவாசிகளே! என்று கிறிஸ்தவர்கள் எப்படி நிருபிக்கப்போகிறார்கள்?

நான் சஹாபாக்களின் வாழ்க்கையை ஹதீஸ்கள் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களில் படித்தேன். அவர்கள் "சொர்க்கவாசிகள்" என்று முஹம்மது முன்னறிவித்தது தவறாக உள்ளது, இதனை அவர்களின் வாழ்க்கை நமக்கு தெரிவிக்கிறது என்ற என் விமர்சனத்தை ஆதாரங்களுடன் உன்னுடன் முந்தைய கடிதங்களில் பகிர்ந்துக் கொண்டேன். 

ஆனால், இயேசுவின் சீடர்கள் சொர்க்கவாசிகள் இல்லை என்று நீ சொல்கின்றாய். மேலும், "சீடர்கள் சொர்க்கவாசிகள்" தான் என்பதை நிருபியுங்கள் என்று என்னிடம் கேள்வி கேட்கிறாய். நீ ஒன்றை சரியாக புரிந்துக் கொள்ளவேண்டும். 

சஹாபாக்கள் சொர்க்கவாசிகள் இல்லை என்ற என் வாதத்தை முன்வைக்க நான் இஸ்லாமிய ஆதாரங்களை உனக்கு கொடுத்தேன். அதே போல, சீடர்கள் சொர்க்கவாசிகள் இல்லை என்ற உன் வாதத்தை முன்வைக்க, நீ தான் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதை விட்டுவிட்டு, என்னிடம் ஆதாரம் கேட்கக்கூடாது. நீ பைபிளை படித்து, உன் ஆதாரங்களை சேகரித்து, "இந்த ஆதாரங்களை முன்னிட்டு, இயேசுவின் சீடர்கள் சொர்க்கவாசிகள் இல்லை என்பதை நான் கூறமுடியும்" என்று நீ சொல்லவேண்டும். அதன் பிறகு அந்த ஆதாரங்கள் உண்மையானவைகளா என்பதை நான் மறுபரிசோதனை செய்வேன், உனக்கு பதில் எழுதுவேன்.

எனவே, அப்போஸ்தலர்களை குற்றப்படுத்தும் நீ தான் உன் விமர்சனத்திற்கு ஆதாரங்களைத் தரவேண்டும். என்னிடம் ஆதாரம் கேட்பது சரியாக தெரியவில்லை. என் விரலைக் கொண்டு என் கண்ணையே குத்திவிடலாம் என்று நினைத்தாயா தம்பி? நீ சௌதிக்கு சென்றுவிட்டதால், அதிக புத்திசாலி என்று நினைத்துவிட்டாயா! நான் அறிவாளியா என்று எனக்கு சரியாக கணிக்கத்தெரியாது, ஆனால், என்னை முட்டாளாக்க மற்றவர்கள் முயற்சிப்பதை சரியாக என்னால் கணித்து கண்டுபிடிக்க முடியும்.

நீ புதிய ஏற்பாடு முழுவதையும் இன்னொரு முறை படித்துப்பார், உன் ஆதாரங்களை சேகரித்து எனக்கு அனுப்பு.

2) சொர்க்கவாசிகள் பற்றிய முஹம்மதுவின் நற்செய்தி செல்லுபடியாகாது என்றால், இயேசுவின் நற்செய்தி எப்படி செல்லுபடியாகும்?

முஹம்மதுவின் முன்னறிவிப்பு செல்லுபடியாகாது என்று நான் சொன்னதற்கு காரணம் "முஹம்மது சொன்னார்" என்பதினால் அல்ல, அதற்கு பதிலாக, அவர் சொன்னதற்கு ஏற்றவாறு "சஹாபாக்கள் வாழவில்லையே" என்பதினால் தான். அதே போல, அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை நாம் கவனிக்கும் போது, இயேசு சொன்னதற்கு ஏற்றவாறு அவர்கள் சொர்க்கவாசிகளுக்கு ஏற்ற நற்குணங்களோடு இப்பூமியில் வாழ்ந்தார்களா என்பதின் மீது சார்ந்துள்ளது.

எனவே, இஸ்லாமிய சொர்க்கவாசிகள் பற்றி நான் விமர்சித்தது, சஹாபாக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து தான். அதே போல, நீயும் அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து, உன் விமர்சனத்தை எனக்கு எழுது.

சொர்க்கவாசிகள் பற்றிய முன்னறிவிப்பை எப்படி சோதிப்பது?

தம்பி, இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க தவறிவிடாதே.  

முஹம்மது இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசி என்று நான் நம்புவதில்லை இது ஒரு புறம் இருந்தாலும், அவர் சொன்ன சொர்க்கவாசிகள் என்ற முன்னறிவிப்பை சரி பார்ப்பது எப்படி? 

இதே போல, முஸ்லிமாகிய நீ இயேசு இறைவனல்ல என்று நம்புகிறாய், இது ஒரு புறமிருக்க, அப்போஸ்தலர்கள் பற்றிய இயேசுவின் முன்னறிவிப்பை சரி பார்ப்பது எப்படி?

இவ்விருவரின் முன்னறிவிப்பை சரி பார்க்க இப்பூமியில் நாம் இருக்கும்வரை நமக்கு சாத்தியமில்லை. முஹம்மதுவின் சஹாபாக்கள் பத்து பேர் சொர்க்கம் சென்றார்களா இல்லையா என்பது உலகத்தின் முடிவு காலத்தில் தான் நமக்கு தெரியவரும். அது போல, இயேசுவின் சீடர்கள் சொர்க்கம் சென்றார்களா இல்லையா என்பது உலக முடிவில் தான் தெரியவரும்.  நீ முஸ்லிமாக இருப்பதினால், முஹம்மது சொன்னதை அப்படியே நம்புவது வேறு, அதே போல, இயேசு சொன்னதை நாம் அப்படியே நம்புவது வேறு. 

ஆனால், அதற்கு முன்பாக, நாம் இவ்வுலகத்தில் இருக்கும்போதே, இவ்விருவரின் முன்னறிவிப்புக்களின் நம்பகத்தன்மையை சரி பார்க்க ஒரு வழி இருக்கிறது. அது என்னவென்றால், சஹாபாக்கள் மற்றும் அப்போஸ்தலர்களின் வாழ்க்கைகளை ஆய்வு செய்து, இவர்களிடம் சொர்க்கவாசிகளுக்கு ஏற்ற நற்குணங்கள் காணப்பட்டனவா? இவர்களின் தலைவர்கள்(இயேசுவும், முஹம்மதுவும்) சொன்னதின் படி, இவர்கள் வாழ்ந்தார்களா? என்பதை கவனித்தால் நமக்கு உண்மை தெரிந்துவிடும். இதனை அறிவதற்கு, உலகத்தின் முடிவுவரை நாம் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. 

இதைத் தான் நான் என் கடிதங்களில் உனக்கு எழுதினேன். முஹம்மது சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி சொன்னது ஒரு புறமிருக்க, சஹாபாக்கள் அதற்கேற்றபடி வாழவில்லையே என்பது தான் என் விமர்சனம், இதனால் அவர்கள் சொர்க்கவாசிகள் அல்ல என்பது தான் என் ஆய்வின் முடிவு. இதே போல நீயும் செய், இயேசுவின் சீடர்களின் வாழ்வை ஆய்வு செய், உன் முடிவைச் சொல்.

இதுவரை நான் விளக்கிய விவரங்களிலிருந்து தெரிவது என்னவென்றால், முஹம்மது சொன்னது செல்லுபடியாகவில்லை ஏனென்றால், சஹாபாக்கள் முஹம்மதுவின் முன்னறிவிப்பின் படி (சொர்க்கவாசிகளுக்கு ஏற்றவாறு) வாழவில்லை.  ஆனால், இயேசு சொன்னது போல, அப்போஸ்தலர்கள் வாழ்தார்கள். எனவே இயேசுவின் முன்னறிவிப்பு செல்லுபடியாகும். எப்படி லாஜிக் பார்த்தாயா!

தம்பி, இந்த கடிதத்தில் நான் எழுதப்போகும் இதர விவரங்களும் இந்த விஷயம் பற்றியதே, எனவே அவைகளையும் தவறாமல் படி. நான் அடுத்த தலைப்பிற்குச் செல்கிறேன்.

3) சொர்க்கவாசிகளான அப்போஸ்தலர்களும், கிறிஸ்தவ இறையியலும்

தம்பி, முஹம்மதுவின் சொர்க்கவாசிகள் என்ற முன்னறிவிப்பினால், இஸ்லாமிய இறையியல் அனேக பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதை என் முந்தைய கடிதத்தில் விளக்கினேன். நீ அவைகளை அப்படியே கிறிஸ்தவ இறையியலுக்கும் பொருந்தும் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டாய், அதாவது "சேம் டு யூ" (Same to You) என்று ஒரு வரியில் சொல்லிவிட்டாய். 

சஹாபாக்கள் உயிரோடு இருக்கும் போதே அவர்கள் சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி வந்துவிட்டதால், அதன் பிறகு அவர்கள் மரிக்கும் வரைக்கும் செய்த பாவங்களை முன்னமே அல்லாஹ் மன்னித்தானா? அல்லது கவனத்தில் கொள்ளவில்லையா? அல்லது சஹாபாக்கள் ஒரு சிறிய பாவமும் செய்யமாட்டார்கள் என்று அல்லாஹ் முடிவு செய்துவிட்டானா? என்று பல கேள்விகள் நான் கேட்டு இருந்தேன். உன் விருப்பத்தின் படி, இதே கேள்விகளை இப்போது நான் கிறிஸ்தவ இறையியலுக்கும் கேட்டு பதிலைத் தருகிறேன்.

இயேசு சீடர்களுக்கு சொர்க்கம் வாக்கு கொடுத்தது, கிறிஸ்தவ இறையியலை பாதிக்காது. இதனை புரிந்துக் கொள்ள கீழ்கண்ட விவரங்களை படி.

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமில் இரட்சிப்பு

தம்பி, இரட்சிப்பு என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று உனக்கு தெரியும் என்று நம்புகிறேன். பாவம் செய்து இறைவனைவிட்டு பிரிந்துப்போன மனித இனத்தை தன்னிடம் மறுபடியும் சேர்த்துக்கொள்ள இறைவன் செய்த செயலின் மீது மனிதன் கொள்ளும் நம்பிக்கை தான் இரட்சிப்பிற்கு வழி. 

இஸ்லாமில் இரட்சிப்பு: தம்பி, சுருக்கமாக உனக்கு இஸ்லாமிய இரட்சிப்பு பற்றி சில வரிகளில் எழுதுகிறேன். 

இஸ்லாமின் படி மனிதனுக்கு நல்வழி காட்ட அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்புகிறான், வேதங்களை கொடுக்கிறான். இதோடு அல்லாஹ்வின் கடமை முடிந்துவிட்டது. மனிதன் இறைத்தூதர்களுக்கு கீழ்படிந்து, வேதங்களை கைக்கொண்டு, தன் முயற்சியினால் பல நற்காரியங்களைச் செய்து இதனால் வரும் நன்மைகளைச் சேகரித்துக் கொண்டு, பாவங்களை முடிந்த அளவிற்கு குறைத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு டிக்கெட் கிடைகும் என்று நம்பிக்கொண்டு இருக்கவேண்டும். உலகத்தின் முடிவில், மனிதன் செய்த நன்மைகளையும், தீமைகளையும் தராசில் வைத்து அல்லாஹ் சரி பார்ப்பான். ஒவ்வொரு மனிதனின் சொர்க்கம் பற்றிய உண்மை அன்று வெளிப்படும். இவ்வுலகில் வாழும் வரை எந்த ஒரு முஸ்லிமும் எனக்கு சொர்க்கம் நிச்சயம் என்று உறுதியாக கூறக்கூடாது, அது அல்லாஹ்வின் விருப்பத்தின் மீது சார்ந்துள்ளது, இறுதி தீர்ப்பிற்கு பிறகு அது முடிவு செய்யப்படும். 

கிறிஸ்தவத்தில் இரட்சிப்பு:

மனிதனை தன்னிடம் சேர்த்துக் கொள்ள இறைவன் மனிதனாக வந்து அவனுடைய தண்டனையை தானே சுமந்துக் கொண்டு, அவனுக்கு இரட்சிப்பை உண்டாக்கினார். இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் இவைகளை விசுவாசிக்கின்ற மனிதன் தேவனின் சொர்க்கத்திற்கு தகுதியடைகின்றான். மனிதனுக்கு வழி காட்ட, அவனுக்கு இறைத்தூதர்களையும், வேதங்களை தேவன் கொடுத்தார். 

இவ்விரு மார்க்கங்களுக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம், இந்த இரட்சிப்பில் தான் உள்ளது. சில முக்கியமான வித்தியாசங்களை இப்போது உனக்குத் தெரிவிக்கிறேன்.

கிறிஸ்தவத்தில் இரட்சிப்புஇஸ்லாமில் இரட்சிப்பு

தேவன் இறைத்தூதர்களையும், வேதங்களையும் கொடுத்தார். தேவன் மனிதனுக்காக இறங்கி வந்தார். தம்முடைய உயர்ந்த அன்பை இதன் மூலம் வெளிப்படுத்தினார்.

அல்லாஹ் இறைத்தூதர்களையும், வேதங்களையும் கொடுத்தார். அல்லாஹ் மனிதனுக்காக எதையும் சுயமாக செய்யவில்லை. 

இரட்சிப்பை தேவன் சம்பாதித்து மனிதனுக்கு கொடுத்தார். 

இரட்சிப்பை மனிதன் சம்பாதிக்கவேண்டும்.

மனிதன் முதலாவது இயேசுவை விசுவாசிக்க வேண்டும், அதன் பிறகு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ தன்னால் முடிந்ததை செய்யவேண்டும், பரிசுத்த ஆவியானவர் மனிதனுக்கு இதற்காக உதவி செய்வார்.

மனிதன் மத சடங்காச்சாரங்களை தவறாமல் பின்பற்றவேண்டும். குர்-ஆன் & ஹதீஸ் சொல்கிறபடி வாழ தன்னால் முடிந்ததை செய்யவேண்டும். 

தேவன் மனிதனை இரட்சிக்க திட்டமிட்டார். தேவன் மனிதனை இரட்சிக்க வந்தார். தேவன் மனிதனோடு கூட இருந்து, கடைசி நாள் வரை அவனுக்கு உதவி செய்துக்கொண்டே இருக்கிறார். எல்லாவற்றையும் தேவன் செய்துமுடித்தார்.

அல்லாஹ் மனிதனை இரட்சிக்க இறைத்தூதர்களையும், வேதங்களையும் கொடுத்தார். மனிதன் வேதங்களை கைக்கொள்ளவேண்டும். மனிதன் தன்னைத் தான் தயார் படுத்திக்கொள்ளவேண்டும். அல்லாஹ் கொஞ்சம் செய்தார், மீதியை மனிதன் செய்யவேண்டும்.

கிறிஸ்தவனுக்கு இரட்சிப்பின் நிச்சயம் (சொர்க்கவாசி என்ற நிச்சயம்) இந்த பூமியிலேயே கிடைத்துவிடுகின்றது.

முஸ்லிமுக்கு தான் சொர்க்கவாசி என்ற நிச்சயம், இறுதி தீர்ப்பில் முடிவு செய்யப்படும்

தம்பி, மேலே கொடுத்த பட்டியலில் நான்காவது பாயிண்டை பார்.  கிறிஸ்தவத்தில் இரட்சிப்பின் நிச்சயம் மனிதனுக்கு பூமியிலேயே தேவன் கொடுத்துவிடுகின்றார். அதை தன் மரணம் வரை தக்கவைத்துக் கொள்ளவேண்டியது மனிதனின் கடமையாகும், இதற்கு பரிசுத்த ஆவியானவரும் உதவி செய்கின்றார்.  ஆனால், இஸ்லாமிலே முஸ்லிமுக்கு இரட்சிப்பின் நிச்சயம் பூமியிலே கிடைப்பதில்லை, அவன் மரிக்கும் வரைக்கும் அதன் நிச்சயம் அவனுக்கு இல்லை.

சீடர்களை இயேசு சொர்க்கவாசிகள் என்றுச் சொன்னது, எந்த ஒரு இறையியல் பிரச்சனையையும் உண்டாக்காது. ஏனென்றால், கிறிஸ்தவத்தில் இரட்சிப்பின் நிச்சயம் அதாவது, சொர்க்கவாசி என்ற நிச்சயம் கிறிஸ்தவர்களுக்கு பூமியிலேயே முடிவு செய்யப்பட்டு விடுகிறது.

யோவான் 3:16-18  

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

இஸ்லாமிலே மட்டும் தான் நான் குறிப்பிட்ட இறையியல் பிரச்சனைகள் உண்டாகும், கிறிஸ்தவத்தில் அவைகள் உண்டாகாது. இயேசுவின் சீடர்கள் சொர்க்கவாசிகள் என்று இயேசு சொன்னது சரியானது தான். இது மட்டுமல்ல, சீடர்களும் அதற்கேற்றபடியே வாழ்ந்து காட்டினார்கள்.  அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர் நடபடிகளிலும், இதர கடிதங்களிலும் நீ காணலாம் தம்பி.  

நான் சஹாபாக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து உனக்கு எழுதும் நேரத்தில், நீயும் அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து எனக்கு எழுதும் படி உன்னை கேட்டுக் கொள்கிறேன். உன்னால் முடிந்தால், அப்போஸ்தலர்களின் வாழ்க்கையில் காணப்பட்ட சொர்க்கவாசிகளுக்கு எதிரான விஷயங்களை கண்டுபிடி. 

இதுவரை பார்த்த விவரங்களின் படி, கிறிஸ்தவ இறையியலுக்கு எந்தஒரு பாதிப்பும் இல்லாத படி ஆதி கால அப்போஸ்தலர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. உன்னுடைய அடுத்த கேள்விக்கு இப்போது நான் தாவுகிறேன்.

4) சொர்க்கவாசிகள் 12 பேரில் யூதாஸும் ஒருவரா? 

நீ உன் கடிதத்தில் ஏழாவது கேள்வியாக கீழகண்ட கேள்வியை கேட்டுயிருந்தாய்.

7) மிகவும் முக்கியமான கேள்வி, இயேசு சீடர்களைப் பார்த்து நீங்கள் 12 பேர் பரலோக ராஜ்ஜியத்தில் சிம்மானத்தில் உட்கார்ந்து 12 யூத கோத்திரங்களை நியாயந்தீர்ப்பீர்கள் என்றுச் சொன்னார். ஆனால், யூதாஸ் தற்கொலை செய்துக் கொண்டான், எண்ணிக்கையில் ஒரு சீடன் குறைந்துவிட்டான். யூதாஸ் பரலோகம் செல்லமாட்டான் என்று இயேசுவிற்கு தெரியாதா? 12 சீடர்களை சொர்க்கவாசிகள் என்று இயேசு சொன்னது தவறு தானே! அல்லது யூதாஸ் கூட சிம்மானத்தில் மற்ற சீடர்களோடு உட்கார்ந்து நியாய்ந்தீர்ப்பாரா?

தம்பி, இந்த கேள்விக்கான பதில் உனக்கு தெரிந்து இருந்தும் நீ வேண்டுமென்றே கேட்கிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது. 

பன்னிரண்டாவது சாட்சி:

இயேசு தம்மை உலகத்திற்கு வெளிக்காட்டி வெளியரங்கமாக ஊழியம் செய்த நாள் முதற்கொண்டு, அவரை  பார்த்தவர்கள், அவரோடு பேசியவர்கள், அவருடைய அற்புதஙக்ளைக் கண்டவர்கள், இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவரைக் கண்டவர்கள் இயேசுவின் சாட்சிகளாக இருக்கிறார்கள். யூதாஸ் தற்கொலை செய்துக்கொண்டதால், அவனது இடத்தை நிரப்புவது தான் முதல் வேலை, எனவே அப்போஸ்தலர்கள் இந்த காரியத்தை முதலாவது செய்தார்கள்.  இதனை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தின் முதலாவது அத்தியாயத்தில் காணலாம். 

தம்பி, உனக்கு நான் நன்றி சொல்லவேண்டும், ஏனென்றால், இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டு, இந்த தொடர் கடிதங்களுக்கு சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தை மறுபரிசீலனை செய்ய நீ எனக்கு உதவியுள்ளாய். சீக்கிரமாக கீழ்கண்ட வசனங்களை படித்துவிட்டு, அதன் பிறகு நான் எழுதியவைகளை படி, உனக்கே புரியும்.

அப் 1:15-26

1:15  அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று: 

1:16  சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. 

1:17  அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்கு பெற்றவனாயிருந்தான். 

1:18  அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. 

1:19  இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது. 

1:20  சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது. 

1:21  ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும், 

1:22  அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். 

1:23  அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: 

1:24  எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, 

1:25  இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; 

1:26  பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான். 

சஹாபாக்களில் முதல் தலைவரின் தெரிவும், சீடர்களில் அப்போஸ்தலரின் தெரிவும்:

தம்பி, உன் கேள்வி எனக்கு பிடிச்சிருக்கு. 

முஹம்மதுவின் உள்வட்ட தோழர்கள் என்றாலும், நெருங்கிய தோழர்கள் என்றாலும் அதற்கு தனி மதிப்பு உண்டு.  ஆனால், இயேசுவின் 12 சீடர்கள் என்றால், முஹம்மதுவின் உள்வட்ட தொழர்களைக் காட்டிலும் அதிக மதிப்பு உள்ளது. மரித்தவர்களை உயிரோடு எழுப்பக்கூடிய ஒரு தீர்க்கதரிசியோடு மூன்று ஆண்டுகள் கூட இருப்பது என்பது எவ்வளவு பெருமை, எவ்வளவு மதிப்பு மக்களிடையே!

முஹம்மது மரித்துவிட்டார், இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு தலைவரை நியமிக்கவேண்டும். இயேசு மரித்து, உயிர்த்தெழுந்து, பரலோகம் சென்றுவிட்டார். கிறிஸ்தவ சமுதாயத்திற்கு ஒரு அப்போஸ்தலரை நியமிக்கவேண்டும்.  இது தான் இஸ்லாமிலும், கிறிஸ்தவத்திலும் நடந்த முதல் தேர்தல் என்றுச் சொல்லுவேன். இந்த தேர்தல் களத்தில் இஸ்லாமிய கட்சி தொண்டர்கள் எப்படி மற்ற தொண்டர்களுக்கு குழியை வெட்டினார்கள் என்பது தான் மிகவும் சுவாரசியமான விஷயம். 

அபூ பக்கர் கலிஃபாவாக வரக்கூடாது என்று அனேக தோழர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இரத்தத்தை பார்க்காமல் நான் வாளை கீழே வைக்கமாட்டேன் என்றுச் சொல்கிறார் ஒரு தோழர். இன்னொருவர், இந்த தேர்தல் களத்தை போர்களமாக மாற்றட்டுமா என்று கேட்கிறார். கடைசியாக இதர மக்களை மிரட்டி, விருப்பமிருந்தாலும், விருப்பமில்லாவிட்டாலும் அபூ பக்கருக்கு தலைவர் பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்றுச் சொல்லி உமர் அடம் பிடித்தார், மனதிலே திட்டிக்கொண்டு, சாவுக்கு பயப்பட்டு தோழர்கள் ஓட்டு போட்டனர். முஹம்மதுவின் தோழர்கள் என்பதை இவர்கள் நிருபித்துவிட்டார்கள்! முதல் கோணல் முற்றும் கோணல். தலைவர்களே மற்றவர்களின் தலைகளை சீவ முந்திக்கொண்டால், தோண்டர்கள் என்ன குறைவாகவா சீவுவார்கள்?

ஆனால், எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல், 12வது அப்போஸ்தலராக மத்தியா என்பவர் நியமிக்கப்பட்டு விட்டார். இஸ்லாமிலே வாளை தூக்கினார்கள், கிறிஸ்தவத்திலே இரண்டு சிறிய துண்டு சீட்டுகளில் இருவரின் பெயரை எழுதி, குலுக்கிப்போட்டு 12வது அப்போஸ்தலரை சுலபமாக தெரிவு செய்துவிட்டார்கள். சத்தமில்லை, கலகமில்லை, சபித்தில் இல்லை, கத்தி தூக்கவில்லை வெறும் கைத்தட்டல்கள் தான். இஸ்லாமின் முதல் தலைவருக்காக சமுதாயத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார்கள் சஹாபாக்கள், இயேசுவின் சீடர்கள் இரண்டு சீட்டுகளை குலுக்கி போட்டார்கள். 

சீடர்கள் 120 பேர் ஒன்றாக கூடியிருந்தார்கள், அவர்களில் ஒருவரை சுலபமாக அமைதியாக தெரிவு செய்துவிட்டார்கள். இவர்கள் மத்தியிலே பொறாமை இல்லை, பதவி ஆசை இல்லை, ஒன்று மட்டும் நிறைய இருந்தது அது "அன்பும் ஒருமனமும் தான்". இயேசுவின் சீடர்கள் என்பதை அவர்கள் நிருபித்துவிட்டார்கள்! என்னே ஒற்றுமை! என்னே இயேசுவின் சீடர்களின் ஒருமனம்! மீன் குட்டிக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா என்ன? இயேசுவின் சீடர்களுக்கு அன்பு செலுத்த கற்றுக்கொடுக்கவேண்டுமா என்ன?

உண்மையை சொல்லவேண்டுமென்றால், இயேசுவின் சீடர்களோடு சஹாபாக்களை ஒரு பேச்சுக்கு கூட ஒப்பிடக்கூடாது.  இவ்விரு மார்க்கங்களின் முதல் சந்ததிகளைப் பார் தம்பி! பூமிக்கும் வானத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளி, இவர்களிடைய காணப்படும் இடைவெளியை விட குறைவானது என்று சொல்லமுடியும். 

இப்போது அடுத்த தலைப்பிற்குச் செல்கிறேன்.

5) சிலுவையில் அறையுண்ட கள்ளன் கிறிஸ்தவ இறையியலுக்கு களங்கமில்லாமல் எப்படி சொர்க்கவாசியானான்?

தம்பி, இந்த கடிதம் நீண்ட கடிதமாக உருவாகிக்கொண்டு இருக்கிறது. நீ பொறுமையாக இதனை படிப்பாய் என்று நம்புகிறேன்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது ஒரு கள்ளனைப் பார்த்து இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு சொன்னார். இதைப் பற்றி நீ கீழ்கண்ட இரண்டு கேள்விகளை முன்வைத்தாய்.

5) சீடர்களுக்கு மட்டுமல்ல, தன்னோடு பக்கத்தில் சிலுவையில் அறையுண்ட ஒரு கள்ளனைப் பார்த்து அவனுக்கு பரலோகம் வாக்கு செய்கிறார் இயேசு. இது கிறிஸ்தவ இறையியலுக்கு பிரச்சனைகளை உண்டாக்காதா?

6) அந்த கள்ளன் ஞானஸ்நானம் பெறவில்லை, நீங்கள் மாதாமாதம் எடுக்கின்ற இராபோஜனம் என்றுச் சொல்கின்ற, ரொட்டியும், திராட்சை ரசத்தையும் எடுக்கவில்லை, பாவமன்னிப்பு கோரவில்லை. இப்படியிருக்க அவன் எப்படி இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்வீர்கள்? அண்ணா, இங்கு கிறிஸ்தவ இறையியல் ஆட்டம் காணுகின்றதே! இதற்கு கொஞ்சம் பதில் சொல்வீர்களா?

தம்பியின் அறியாமை அண்ணனுக்கு பெருமையல்ல:

தம்பி, உனக்கு கிறிஸ்தவம் என்றால் என்னவென்று தெரியும், இருந்தபோதிலும், ஒன்றுமே தெரியாதவன் மாதிரி நீ எழுதுகிறாய். ஞானஸ்நானம் எடுக்காதவன், இராபோஜனம் எடுக்காதவன், பாவமன்னிப்பு கேட்காதவன் எப்படி சொர்க்கம் செல்லமுடியும்? என்று கேட்கிறாய். 

உனக்கு ஞாபகம் இருக்கின்றதா? பல ஆண்டுகளுக்கு முன்பு, நம் சபைக்கு ஒரு குடும்பம் புதிதாக வந்தார்கள். அந்த சகோதரியின் கணவர் நன்றாக குடிப்பார், சபைக்கு வரமாட்டார். ஆனால், அவர் கடைசி காலத்தில் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார், குடியை விட்டுவிட்டார். ஞானஸ்நானம் எடுப்பதற்கு நாள் குறிக்கப்பட்டது, அவர் ஒரு முறை கூட இராபோஜனம் எடுக்கவில்லை, ஆனால் ஞானஸ்நானம் எடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே மரித்துவிட்டார். உனக்கு ஞாபகம் இருக்கும், நம்முடைய போதகர், அடுத்த வாரம் அவரை குறிப்பிட்டு, ஒரு அருமையான செய்தியை கொடுத்தார். நீயும் அந்த நாளின் செய்தி அருமையாக இருந்தது என்று என்னிடம் கூறினாய், நாம் அடிக்கடி அதைப் பற்றி பேசிக்கொண்டோம்.  இயேசுவின் மீது விசுவாசம் வைத்து, தன் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்புவது தான் இரட்சிப்பிற்கு முதல்படி. ஞானஸ்நானம் என்பதும், இராபோஜனம் என்பதும் இரண்டாவது படி தான். ஒரு மனிதன் இந்த முதல்படியை தாண்டிவிட்டால், அதுவே அவன் சொர்க்கவாசியாகிவிட்டான் என்பதற்கு அத்தாட்சி. மரணம் சந்திக்கவில்லையென்றால் அடுத்தடுத்த படிகளை கட்டாயம் செய்யவேண்டும் என்று போதகர் அன்று நமக்கு போதித்தார்.

ஆக, இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளனுக்கு சொர்க்கவாசி என்று இயேசு நற்செய்திச் சொன்னது சரியானதே, இதனால், கிறிஸ்தவத்தின் இறையியல் ஒன்றுமே பாதிப்பு அடையாது, உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அது தான் உண்மையான கிறிஸ்தவ இறையியல். 

இப்போது உனக்கு ஒரு கேள்வி எழும், அடுத்த கடிதத்தில் அந்த கேள்வியை நீ என்னிடம் கேட்க நான் வாய்ப்பு தரமாட்டேன். 

இரட்சிப்பின் முதல்படியாகிய இயேசுவின் மீது விசுவாசம் வைத்தல், தன் குற்றங்களுக்காக மனஸ்தாபப்பட்டு பாவமன்னிப்பு கோருதல், போன்றவற்றை அந்த கள்ளன் செய்யவில்லையே? என்று என்னிடம் நீ கேட்கக்கூடும். பைபிளை சரியாக படித்தால், இந்த சந்தேகம் வராது. நீ குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி பற்றிய வசனங்களை இங்கு தருகிறேன், அவைகளில் இந்த கேள்விக்கான பதில் உள்ளது.  

நீ லூக்கா 23:39-43 வரை ஒரு முறை படித்துப்பார்.

லூக்கா 23:39  அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். 

23:40  மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 

23:41  நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 

23:42  இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். 

23:43  இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மேற்கண்ட வசனங்களில் 40, 41 மற்றும் 42ம் வசனங்களை சரியாக படித்துப் பார். 

  • அந்த கள்ளன் தன் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை தனக்கு கிடைத்துள்ளது என்று ஒப்புக்கொள்கிறான், 
  • இயேசு குற்றமற்றவர் என்பதை அறிக்கையிடுகின்றான். 
  • இயேசுவை விசுவாசிக்கிறான், 
  • அவர் தம்முடைய இராஜ்ஜியத்தில் வரும் போது, தன்னை நினைத்துக் கொள்ளும் என்று கேட்கிறான்.  

இரட்சிப்பின் முதல் படியாகிய, இயேசுவை விசுவாசித்தல், தன் குற்றங்களுக்காக மனஸ்தாபப்பட்டு பாவ மன்னிப்பு கோருதல் போன்றவற்றை அவன் செய்துவிட்டான்.  எனவே, அவன் சொர்க்கத்திற்கு தகுதியானவனாக மாறிவிட்டான்.  ஆக, இயேசு அந்த கள்ளனுக்கு சொர்க்கவாசிக்கான நற்செய்தியை அறிவித்தது, எந்த வகையிலும், கிறிஸ்தவ இறையியலுக்கு முரண்படவில்லை.  

முஹம்மதுவின் கடைசி வார்த்தைகளும், இயேசுவின் கடைசி வார்த்தைகளும்: 

தம்பி, நீ கேட்கும் ஒவ்வொரு கேள்வியும், ஒரு முக்கியமான இஸ்லாமிய கோட்பாட்டை தகர்த்துவிடுகிறதை நான் பார்க்கிறேன். அதே நேரத்தில், அந்த கேள்விக்கான பதில் கிறிஸ்தவத்தை ஒரு படி மேலே உயர்த்தி காட்டுவதைப் பார்க்கிறேன். 

இயேசு மரிப்பதற்கு முன்பு, ஒரு மனிதனை சொர்க்கவாசி ஆக்கிவிட்டு மரித்தார்.

முஹம்மது மரிப்பதற்கு முன்பு, யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சபித்து மரித்தார். 

இயேசு கடைசியாக மன்னித்தார், முஹம்மது கடைசியாக சபித்தார். இஸ்லாம் சபிக்கிறது, கிறிஸ்தவம் மன்னிக்கிறது. 

புகாரி ஹதீஸ்கள் 435 & 436:

435. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்!" எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். Volume :1 Book :8

436. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்" எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.  Volume :1 Book :8

முடிவுரை:

கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் ஒப்பிட்டால், ஒவ்வொரு அணுவிலும் நாம் வித்தியாசத்தைக் காணமுடியும். பக்கத்திற்கு பக்கம் இஸ்லாம் கிறிஸ்தவத்திற்கு முன்பாக அடிபணியவேண்டி வருகிறது. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், இஸ்லாம் என்னை கவர்வதாக தெரியவில்லை தம்பி. இஸ்லாமிய ஸ்தாபகர் முதற்கொண்டு தொண்டர் வரை யாரை ஆய்வு செய்தாலும் சரி, ஒவ்வொருவரும் படுதோல்வி அடைகிறார்கள்.

இன்னும் நான் அபூ பக்கரின் இரண்டாண்டுகள் சாதனைகள் பற்றிய ஆய்வை உனக்கு எழுதவில்லை, அதற்குள் இரமளான் முடிந்துவிடும் போல இருக்கிறது. 

கடைசியாக, உன்னிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீ தொடர்ந்து எனக்கு எழுது, இன்னொரு முறை பைபிளைப் படி, ஆய்வு செய், இஸ்லாமோடு கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு அணுவையும் ஒப்பிட்டுப்பார். நான் சொல்வதை அப்படியே நம்பவேண்டுவதில்லை. நீயே எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பற்றிக் கொள். 

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

அதுவரை கர்த்தருடைய கிருபை உன்னோடு இருப்பதாக.

இப்படிக்கு,

உன் அண்ணன்

உமர்

தேதி: 14 ஜூலை 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day13.html


கருத்துகள் இல்லை: