ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 30 ஜூலை, 2015

குர்-ஆன் முரண்பாடுகள் - முதலாவதாக அல்லா உருவாக்கியது எது? வானமா? அல்லது பூமியா?

உமர்

பதில்:ஒரு இடத்தில் குர்-ஆன் அல்லா வானத்தை முதலாவது உருவாக்கியதாகவும், பிறகு பூமியை உருவாக்கியதாகவும் சொல்கிறது. மற்றோர் இடத்தில் குர்-ஆன் இதையே மாற்றிச்சொல்கிறது.

அ) முதலில் பூமி உருவாக்கப்பட்டது பிறகு வானம் உருவாக்கப்பட்டது

குர்-ஆன் 2:29 மற்றும் 41:9-12 வசனங்களில் குர்-ஆன் சொல்கிறது - "முதலில் பூமி படைக்கப்பட்டது பிறகு வானம் படைக்கப்பட்டது".

குர்-ஆன் 2:29

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். குர்-ஆன் 2:29

குர்-ஆன் 41:9-12

"பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயாமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக. 

அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக்கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்). 

பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்)படைக்க நாடினான்;ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின. 

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

ஆ) முதலிம் வானம் பிறகு பூமி:

குர்-ஆன் 79:27-33 வசனங்களில், அல்லா முதலில் வானத்தைப் படைத்தான் என்றும் பிறகு பூமியை படைத்தான் என்றும் சொல்கிறது. இது முன் சொல்லப்பட்ட( 2:29, 41:9-12) வசனங்களுக்கு முரண்பட்டது.

குர்-ஆன் 79:27-33

உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான் அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். அவன்தான் இரவை இருளடயதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான். இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.

அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

முடிவாக, வசனம் 2:29 ல், தெளிவாக "பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டன்" என்று உள்ளது. முதலில் பூமியை படைத்துவிட்டு பின்பு அல்லா வானம் படைக்க முற்பட்டான். 

வசனம் 41:11 ல், "பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது(அதைப்படைக்க) நாடினான்" என்றும் , மட்டுமில்லை வசனம் 41:12 ல், "அவற்றை அவன் ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்" என்று தெளிவாக உள்ளது. ஆனால், வசனங்கள் 79:27-33 சொல்கிறது, முதலில் வானத்தை படைத்துவிட்டு, "இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்" என்றும் பிறகு தண்ணீரையும் மேய்ச்சல் பொருள்களையும் படைத்தான் என்றும் சொல்கிறது.


இதர குர்-ஆன் முரண்பாடுகளை படிக்கவும்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/quran/contra/heaven_earth_creation.html


குர்-ஆன் முரண்பாடுகள் - நரகத்தில் உள்ளவர்களுக்கு உணவு எது?

உமர்

பதில்: நரகத்தில் உள்ள மக்களுக்கு எது உணவாக கொடுக்கப்படும் என்ற விசயத்தில் குர்-ஆன் பல இடங்களில் முரண்படுகிறது.

1) விஷச்செடிகள்:

குர்-ஆன் 88:6 சொல்லுகிறது, நரகத்தில் உள்ளவர்களுக்கு விஷச்செடிகளைத்தவிர வேறு உணவில்லை. 

குர்-ஆன் 88:6

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

2) சீழ் நீர்:

குர்-ஆன் 69:36 அடித்துச் சொல்கிறது, அவர்களுக்கு சீழ் நீர் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கப்படாது. 

குர்-ஆன் 69:36

சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.

3) ஜக்கூம் மரம் மற்றும் கொதிக்கும் நீர்:

இங்கு மறுபடியும் குர்-ஆன் ஜக்கூம் மரத்தைப் பற்றியும் கொதிக்கும் நீரைப்பற்றியும் பேசுகிறது.

குர்-ஆன் 37:62-67

அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருந்து கள்ளி) "ஜக்கூம்" என்ற மரமா? நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம். மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும். அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப்போலிருக்கும். நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக்கொள்வார்கள். பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.

ஒரு வேளை, விஷச்செடிகளும், ஜக்கூம் மரமும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால், சீழ் நீரும், கொதிக்கும் நீரும் கொடுக்கப்படும் என்று குர்-ஆன் சொல்கிறதே! அதை என்னச்செய்ய ? அது மட்டுமில்லை, சீழ் நீர் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கப்படுவதில்லை என்று குர்-ஆன் சொல்கிறது. இது ஒரு புறமிருக்க, குர்-ஆன் 88:6 ல் சொல்லப்படுவது விஷச் "செடி", மற்றும் 37:62-67 வரை சொல்லப்படுவது "செடி" இல்லை "மரம்". செடிக்கும் மரத்திற்கும் வித்தியாசம் இல்லையா? சிந்தியுங்கள்.


இதர குர்-ஆன் முரண்பாடுகளை படிக்கவும்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/quran/contra/hell_food.html


ஏன் கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?

கேள்விகள் - பதில்கள்

1. முஸ்லீம்கள் இயேசுவின் பெயரை, முகமதுவின் பெயரை மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது, "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்கிறார்கள், ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?

இக்கேள்விக்கான பதிலை மூன்று வகையாக பிரித்துச் சொல்லலாம்: 

  1. ஏன் கிறிஸ்தவர்கள் முகமது பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.
  2. ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.
  3. ஏன் கிறிஸ்தவர்கள் மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.

1. ஏன் கிறிஸ்தவர்கள் முகமது பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.

இதற்கான பதிலை நாம் தெரிந்துக்கொள்வதற்கு முன்பு, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன? பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ளவேண்டும். பைபிள் நமக்கு தெளிவாகச் சொல்கிறது. இயேசு தனக்கு பின்பு கள்ள (பொய் தீர்க்கதரிசிகள்) வருவார்கள் என்று தெளிவாக எச்சரித்துள்ளார். 

1. இயேசுவிற்கு பின்பு நிறைய பேர் தங்களை தீர்க்கதரிசிகள் (நபிகள்) என்று சொல்லிக்கொண்டு வருவார்கள், அவர்களை நம்பவேண்டாம்.

மத்தேயு 24:24

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

2. கலாத்தியர் 1:8-9 வசனத்தின்படி இயேசு தேவனுடைய குமாரன் இல்லை, அவர் சிலுவையில் அறையப்படவில்லை, அவர் உயிர்த்தெழவில்லை என்றுச் சொல்கிற (வேறு ஒரு சுவிசேஷம் (அ) நற்செய்தி கொண்டுவருகிற) எந்த மனிதனானாலும் அல்லது தேவதூதனானாலும் அவன் சபிக்கப்பட்டவன்.

கலாத்தியர் 1:8-9

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 

முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

முகமதுவிற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கள்ள நபிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கசொல்லியுள்ளது. இதன்படி கிறிஸ்தவர்கள் முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நம்பமுடியாது, நம்பமாட்டர்கள். எனவே முகமதுவின் பெயரைச் சொல்லும்போது கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் எல்லாரையும் நேசிக்கிறார்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்.

2. ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.

"அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்பதின் பொருள், நாம் அவரை வாழ்த்தும் படி தேவனிடம் கேட்பது ஆகும். நாங்கள் இயேசு தான் தேவன் என்று நம்புகிறோம். இயேசுவிடமிருந்து தான் நமக்கு, சாந்தி சமாதானம், இரட்சிப்பு எல்லாம் கிடைக்கிறது. அவர் தான் எங்கள் சமாதான கர்த்தர், சர்வவல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, ஆதியும் அந்தமுமானவர். இப்படியிருக்க, கிறிஸ்தவர்கள் எப்படி இயேசுவின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்லமுடியும்? இப்படிச் சொல்வது எங்கள் அடிப்படை நம்பிக்கையையே பாதிக்கும். 

இஸ்லாமியர்கள் "அல்லாவின்" பெயரைச் சொல்லும் போது ஏன் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்லமாட்டார்களோ, அதே காரணம் தான் கிறிஸ்தவர்களுக்கும். எனவே இயேசுவின் பெயரைச் சொல்லும் போது கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்லமாட்டார்கள்.

3. ஏன் கிறிஸ்தவர்கள் மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.

மற்ற தீர்க்கதரிசிகளுடைய பெயர்களைச் சொல்லும்பொது இப்படி அவர்கள் மீது வாழ்த்துதல் சொல்லும்படி பைபிள் எங்களுக்கு கட்டளையிடவில்லை. எனவே கிறிஸ்தவர்கள் சொல்வதில்லை. மட்டுமில்லை இப்படி சொல்வது சில நேரங்களில் நமக்கே ஒரு கண்ணியாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. சிலர் தீர்க்கதரிசிகளை ஆராதிக்கும் நிலைக்கும் வந்துவிடுவார்கள். தீர்க்கதரிசிகளும் நம்மைப்போன்ற மனிதர்களே. தீர்க்கதரிசிகள் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமே ஒழிய அவர்கள் நமக்கு விக்கிரமாகக்கூடாது அல்லது ஆராதனைக்குரியவர்களாக மாறக்கூடாது. 

தமிழ் நாட்டில் உள்ள நாகூர், இன்னும் ஏனைய தர்காக்கள் எல்லாம் உருவாவதற்கு காரணமே, சில இறைவனடியார்களுக்கு கொடுத்த அதிகபடியான மரியாதை தான். அவர்கள் மரித்தபின்பு அவர்கள் மீது அதிகமாக அன்பு, மதிப்பு வைத்த அன்பர்கள் அவர்களுடைய சமாதிக்கு ஒரு கோவில் கட்டி அவர்களிடம் சென்று முறையிடுகின்றனர். படைத்தவன் தவிர படைப்பு நமக்கு ஒரு வணக்கப்பொருளாகக் கூடாது. 

எனவே தான், கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசிகளின் பெயர்களைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை. இதற்காக கிறிஸ்தவர்கள் இவர்களை மதிக்கவில்லை என்று பொருள் அல்ல. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபையில் சொல்லப்படும் செய்திகள் பெரும்பான்மையாக, இத்தீர்க்கதரிகளுடைய வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களாகவே இருக்கும்.

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

உமரின் இதர தலைப்புக் கட்டுரைகள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/general-topics/pbuh.html


சனி, 18 ஜூலை, 2015

அப்துல்லாவும் அப்ரஹாமும் உரையாடல் - பாகம் – 2: குர்-ஆன் தொகுப்பு - எழுத்துக்கு எழுத்து மாற்றமடையாத குர்-ஆன்!

(அப்துல்லாவும் அப்ரஹாமும் உரையாடல்)

[ சனிக்கிழமை இரவு 8:00 மணி, அப்துல்லா தன் நண்பன் அப்ரஹாமுக்கு டெலிபோன் செய்கின்றான். வேலை ஒன்றும் இல்லையானால், நாளை மாலை வீட்டிற்கு வருவாயா என்று அப்துல்லா கேட்கிறான். அப்ரஹாமும் வருகிறேன் என்றான். ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 5, அப்ரஹாம், அப்துல்லா வீட்டிற்குச் சொல்கின்றான், இனி அவர்கள் இருவர் உரையாடலை கேட்ப்போம். ]

அப்துல்லா: வாடா, வேத பண்டிதனே! வா! சரியான நேரத்திற்கே வந்துட்டியே? 

அப்ரஹாம்: நீ கூப்பிட்ட பிறகு கூட, லேட்டா வரமுடியுமா சொல்லு? 

அப்துல்லாவின் மனைவி: அண்ணா, வாங்க வாங்க, வீட்டு பக்கமே வருவதில்லையே நீங்க?

அப்ரஹாம்: ஒன்னும் இல்லேம்மா, கம்பனியிலே கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு, அதனாலே தான் வரமுடிகிறதில்லே.

அப்துல்லாவின் மனைவி: நீங்க பேசிகிட்டு இருங்க, இதோ, அஞ்சு நிமிஷத்திலே காபி கொண்டு வரேன்.

[ குறிப்பு: குர்-ஆன் படி ஒரு பெண், இப்படி மூன்றாம் நபர் (கணவரின் உயிர் நண்பனானாலும் சரி) முன்பு, "புர்கா" அணியாமல், சாதாரண உடையில் வரக்கூடாது. இருந்தாலும், இந்த குடும்பம் நட்பிற்கு இலக்கணமாக திகழுவதினால், இவர்கள் இப்படிப்பட்ட சட்டங்களை சீரியசாக எடுத்துக்கோள்வதில்லை. இதைப் பற்றி முஸ்லிம் அறிஞர்களுக்கு தெரிந்தால், உடனே அப்துல்லாவிற்கு எதிராக பத்வா போட்டுவிடுவார்கள்]

அப்துல்லா: டேய், நான் ரொம்ப நாளா குர்-ஆன், பைபிள் பற்றி சில செய்திகளை சேகரித்து வந்திருக்கேன். நான் சொல்லப்போகும் செய்திகள் கேட்டு, நீ அப்படியே திகைச்சிடுவே தெரியுமா?

அப்ரஹாம்: கேளுடா, கேளு. யார் திகைச்சி போவாங்க என்று அப்புறம் தெரியும்.

அப்துல்லா: முதல்லே, நான் குர்-ஆன் பத்தின பெருமையைச் சொல்வேன், பிறகு பைபிளைப் பற்றி சில முக்கியமான முரண்பாடுகள், பிழைகளைப் பத்தி கேள்வி கேட்பேன் சரியா?

அப்ரஹாம்: ரொம்ப சந்தோஷம். அப்படியே செய்வோம்.

[சூடான காபி வருகிறது, இருவரும் குடிக்கிறார்கள். அப்துல்லா தன் மனைவிக்கு ஒருமணி நேரம் கழித்து மறுபடியும், காபி கொண்டுவா என்று சொல்கிறான்.]

அப்ரஹாம்: ஏண்டா, ஒரு மணி நேரத்திலேயே மறுபடியும் காபி?

அப்துல்லா: எனக்கு இல்லேடா, உனக்குத் தான். நான் சொல்லப்போற செய்திகள் கேட்டு உனக்கு தலை சுத்துமில்லையா, அதுக்குத் தான், காபி.

அப்ரஹாம்: [அப்துல்லாவின் மனைவியை கூப்பிட்டு] ஏம்மா, இரண்டு கப் காபி, மற்றும் ஒரு "சாரிடன் மத்திரை" கூட. ஹா..ஹா.. ஹா... [ எல்லாரும் சிரிக்கிறார்கள் ]

அப்துல்லா: நான் சொன்னது போல, எங்கள் குர்-ஆன் பற்றிய பெருமையை நான் மொதல்ல சொல்லுவேன். இதோ பாரு

1. உலகத்திலேயே மாறாமல் இருக்கும் ஒரு வேதம், குர்-ஆன் தான்.

2. குர்-ஆனில் மட்டும் தான், ஒரு எழுத்து கூட, அல்லது ஒரு எழுத்தின் பகுதியோ மாறாமல் 1400 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.

3. குர்-ஆனில் ஒரு எழுத்து கூட்டவோ, குறைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை, அது மனிதர்களால் முடியாதும் கூட. காரணம், குர்-ஆனை பாதுகாப்பதாக அல்லாவே சொல்லியிருக்கிறார். அந்த பொறுப்பை அல்லாவே எடுத்துக்கொண்டார்.

4. இப்போது உலகத்தில் நம்மிடம் இருக்கும் குர்-ஆனும், நபி முகமது (அவர் மிது சாந்தி உண்டாகட்டும்) அவர்களுக்கு வஹி மூலம் இறக்கிய குர்-ஆனும், எழுத்துக்கு எழுத்து மாறாமல், கூட்டப்படாமல், திருத்தப்படாமல் அப்படியே உள்ளது.

இப்போ சொல்லு, இதுக்கு உன் பதில் என்ன? 

சொல்லு, காபி மற்றும் சாரிடன் இப்போதே கொண்டுவரச் சொல்லட்டுமா? ஹா...ஹா... ஹா... 

அப்ரஹாம்: அண்ணே! காபி இப்போ வேண்டாமண்ணே! அப்பறம் குடிக்கலாம். கம்ப்யூட்டரை ஆன் பண்ணு, ஒரு அரபிக் குர்-ஆனை கையில் எடுத்துக்கோள், இன்டெர்னெட் கன்னெக்ட் பண்ணு. இதெல்லாம் இப்போ நமக்கு தேவை. நான் சொல்லப்போற பதில், உன் எல்லா செய்திகளுக்கும் பதில் தரும்.

அப்துல்லா: ஒரு நிமிஷம் இரு, எல்லாம் ரெடியா வெச்சிகிறேன். [எல்லாவற்றையும் முடித்து விடுகிறான், அப்துல்லா] சரி, இப்போ சொல்லு உன் பதில். 

அப்ரஹாம்: முகமதுவின் வாழ்நாளிலெ, 23 ஆண்டுகளாக, குர்-ஆன் பகுதி பகுதியாக, சமயத்திற்கு ஏற்றது போல அல்லா முகமதுக்கு வஹி (மனதிலே அல்லா வசனத்தை போடுவது / காபிரியேல் தூதன் வந்து கொடுப்பது) மூலமாக இறங்கியது. சரி தானே?

அப்துல்லா: ரொம்ப சரி. மேலும் சொல்லு.

அப்ரஹாம்: முகமது மரிப்பதற்கு முன்பாக, அவர் கையிலே, இப்போது நம்மிடம் உள்ள குர்-ஆன் போன்று மொத்த வசனங்கள் அடங்கிய ஒரு மொத்த தொகுப்பு இருந்ததா என்று கேட்டால்? இல்லை என்பது தான் பதில். 

அவர் இருக்கும்போது குர்-ஆன் அதிகாரங்களாக, வசனங்களாக பிரிக்கப்படவில்லை. அதிகாரங்களாக பிரிக்காதது தவறு என்று நான் சொல்லவில்லை. நான் கேட்பது. நம்மிடம் உள்ள குர்-ஆனில் உள்ள எல்லா வசனங்களும் (அல்லது செய்தியும்)உள்ள ஒரு தொகுப்பு (அ லிருந்து ஃ (A-Z) வரை ), முகமதுவிடம் இருந்ததா? 

அப்துல்லா: இருந்தது. இதில் என்ன சந்தேகம்?

அப்ரஹாம்: இல்லை. முகமது இறந்தவுடன், மற்ற நட்டு அரசர்கள், தாங்கள் முகமதுவிற்கு பயந்து நம்பிக்கொண்டு இருந்த "அல்லாவை" விட்டு விட்டனர். வரியை கட்ட மறுத்தனர். இதை சரி செய்ய "அபு பக்கர்" (முகமதுவின் மாமனார், ஆயிஷாவின் தந்தை, முதல் காலிஃபா), பல முஸ்லீம்களை யுத்தத்திற்கு அனுப்பினார். அந்த யுத்தம் தான் "யமாமா" என்று அழைக்கப்படுகிறது. அந்த போரில், முகமதுவின் நெருங்கி வாழ்ந்த தோழர்கள்(சீடர்கள்), குர்-ஆனை மனப்பாடம் செய்தவர்கள், அதிகமான பேர் மரித்துவிட்டனர்.

இந்த புகாரி ஹதீஸை பார்

4679. ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார். 

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்: 

உமர் அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். நான்'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். 

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள். 

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன். 

முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை. 

(அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129) 

(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. 

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 

இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், '(அவ்விரு வசனங்கள்) 'குஸைமா'(ரலி) அல்லது 'அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருந்தன' என (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது. Volume :5 Book :65

அப்துல்லா: சரி, இந்த ஹதீஸ் மூலம் நீ என்ன சொல்ல நினைக்கிறே?

அப்ரஹாம்: இந்த ஹதீஸ் என்ன சொல்கிறது என்றால் :

1. குர்-ஆன் முகமது வாழும் காலத்தில், ஒரு தொகுப்பாக, புத்தகமாக ஆக்கப்படவில்லை.

2. குர்-ஆனில் வசனங்கள் சிலரின் மனதில் மனப்பாடமாகவும், சில வசனங்கள் தோல்களிலேயும், பேரிச்ச இலைகளிலேயும், இன்னும் பல விதங்களில் சேமித்துவைக்கப் பட்டதே தவிர, ஒரு தொகுப்பாக, ஒருவரிடம் எல்லா வசனங்களும் இல்லை.

3. ஒரு தொகுப்பு (எல்லா வசனங்களும்) அபு பக்கர், உமர் போன்றவர்களிடம் இருந்துயிருக்குமானால், ஏன் அவர்கள் யுத்தத்தில் மரித்த மனிதர்களுக்காக கவலைப்பட வேண்டும்? 

4. மனப்பாடம் செய்தவர்கள் (குர்ரா-Qurra) எல்லாரும் போரில் மரித்துவிட்டால், தங்களிடம் இருக்கும் வசனங்கள் (தோலில், இலைகளில்) வைத்துக்கொண்டு ஒரு முழு குர்-ஆனை தொகுக்க முடியாது என்பதால் அவர்கள் ஒரு குர்-ஆன் தொகுப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தார்க்ள்.

5. ஏற்கனவே, ஒரு முழு குர்-ஆன் தொகுப்பு தங்களிடம் (தோலிலோ, இலைகளிலோ) இருந்துயிருந்தால், முகமது ஒரு முழு தொகுப்பை கொடுத்து சென்றுயிருந்தால், இவர்கள் ஏன் இத்தொகுப்பு வேலையை ஆரம்பிக்கவேண்டும்?

6. இப்படிப்பட்ட தொகுப்பு வேலையை, முகமதுவே செய்யும் படி கட்டளையிடவில்லை என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. அப்படியானால், முகமது மரிக்கும் போது ஒரு புத்தகவடியில் அவரிடமெ ஒரு குர்-ஆன் இல்லை.

மேல் சொன்ன ஹதீஸில், அபு பக்கர், உமர் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்.

…நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள்.….

இப்படி செய்யவில்லையானால்... சில காலத்திற்கு பின்பு நம்மிடம் "குர்-ஆன்" இருக்காது என்பது உமரின் எண்ணம். 

ஜையதின் தயக்கம் அல்லது எண்ணம்:

ஜையத் என்பவர் தான் முகமது குர்-ஆனை ஓதும் போது, அதை தோல்களிலும், இலைகளிலும் எழுதியவர். ஏன் ஜையத் இந்த தொகுப்பு வேலை ஒரு பெரிய மலை போன்றது என்கிறார்?

இன்றைய இஸ்லாமியர்கள், இன்னும் பல ஹதிஸ்கள் சொல்வதுபோல, பல பேர் குர்-ஆன் முழுவதும் மனப்பாடம் செய்துயிருந்தால், அல்லது தோல்களிலும், இலைகளிலும் முழு குர்-ஆனும் எழுதப்பட்டிருந்தால். ஜையத் இப்படி வேதனைபட்டிருக்க மாட்டார். தான் மனப்பாடம் செய்த எல்லா குர்-ஆன் வசனங்களும், எழுதிவிட்டு, மற்றவர்களை சரிபார்க்கும் படி சொல்லியிருப்பார், வேலை சுலமபாகியிருக்கும். இப்படி எல்லாரிடத்திலும் சென்று, தேடி, கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் இருந்தியிருக்காது. 

எனவே, உண்மை என்னவென்றால்:

1. ஒருவரும் குர்-ஆனை முழுவதுமாக ஒரு வார்த்தைவிடாமல், மனப்பாடம் செய்யவில்லை. நூறு சதவிகிதம்(100%) ஒருவரும் மனப்பாடம் செய்யவில்லை.

2. ஒரு நபித்தோழரிடமும், குர்-ஆனின் எல்லா வசனங்களும் தோல்களிலோ, இலைகளிலோ முழுவதுமாக இல்லை. 

3. முகமது மரிக்கும் தருவாயில், யாரிடமும், " ஒரு முழு குர்-அனை" கொடுத்துச் செல்லவில்லை. என்பது மிகத்தெளிவாகப் புரியும்.

அப்துல்லா: ஒருவேளை இந்த ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸாக இருக்கலாம்.

அப்ரஹாம்: நீ சொல்வது சரியானது இல்லை. உலக ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள், அறிஞர்கள் எல்லாம், குர்-ஆன் இப்படி தொகுக்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கின்றனர். இதில் எந்த கருத்துவேறுபாடுமில்லை. வேண்டுமானால், எல்லா இஸ்லாம் தளங்களிலும் சென்று "குர்-ஆன் தொகுக்கப்பட்ட விதம்" என்ற கட்டுரையை தேடிப் பார்.

அப்துல்லா: சரி, நீ சொல்வது ஏற்றுக்கோள்கிறேன், நம் நபி மரித்தபிறகு தான், குர்-ஆன் தொகுக்கப்பட்டது. ஆனால், அந்த தொகுப்பு ஒரு நல்ல படித்தவரிடம் தானே தொகுக்கும்படி ஒப்படைக்கப்பட்டது. அவர், மறுபடியும், எல்லா வசனங்களையும் தொகுத்துயிருப்பார் இல்லையா? அதில் ஒரு வசனம் கூட விடுபட்டுயிருக்காது இல்லையா? எனவே, இப்போது உள்ள குர்-ஆன் எல்லா வசனங்களையும் கொண்டுள்ளது என்று நிச்சயமாக சொல்லலாமே. 

அப்ரஹாம்: இதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. கீழ கண்ட ஹதீஸ் சொல்கிறது. "யமமா" போரில் மரித்தவர்கள் மட்டுமே மனப்பாடம் செய்த சில வசனங்கள், அவர்கள் போரில் மரிக்கும் போது அவர்களோடு அழிந்துவிட்டது. 

அவ்வசனங்கள் தெரிந்தவர்கள் யாருமில்லை, அவ்வசனங்கள் தோல்களிலும், இலைகளிலும் எழுதப்படவில்லை. எனவே, குர்-ஆனின் சில வசனங்கள், யாருக்கும் தெரியாமலே அழிந்துவிட்டது. இந்த வசனங்களை, அபு பக்கரும், உமரும், உத்மானும் தொகுக்கவில்லை என்று சொல்கிறது இந்த ஹதீஸ். 

Ibn Abi Dawud, Kitab al-Masahif, p.23

Many (of the passages) of the Qur'an that were sent down were known by those who died on the day of Yamama ... but they were not known (by those who) survived them, nor were they written down, nor had Abu Bakr, Umar or Uthman (by that time) collected the Qur'an, nor were they found with even one (person) after them. (Ibn Abi Dawud, Kitab al-Masahif, p.23).

இப்னு அபூ தாவுத், கிதாப் அல் மஸாஹிப், பக்கம் 23

வஹியாக இறக்கப்பட்ட அனேக குர்-ஆன் வசனங்கள் யமாமா பொரின் போது மரித்தவர்களுக்கு தெரிந்து இருந்தது. . . .  அப்போரில் உயிர் தப்பியவர்களுக்கு அவ்வசனங்கள் தெரியாமல் போனது. அவ்வசனங்கள் எழுதப்பட்டும் இருக்கவில்லை. அவைகளை அபூ பக்கரோ, உமரோ அல்லது உஸ்மானோ தொகுத்த குர்-ஆனிலோ அவைகள் காணப்படவில்லை. அதற்கு அடுத்து ஒருவரிடமும் அவ்வசனங்கள் காணப்படவில்லை.

சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன். யாராவது குர்-ஆனை எரித்தால் என்ன செய்வீர்கள்? 

அப்துல்லா: எரித்தவன் கதி அதோ கதி தான். சும்ம விட மாட்டோம்.

அப்ரஹாம்: அப்படியானால், இந்த புகாரி ஹதீஸை நீ தான் படிக்கனும்: 

4987. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 

ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள். 

எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்துவிடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். Volume :5 Book :66

மூன்றாவது காலிபா உத்மான் ஆண்ட காலத்தில்(முகமது மரித்த 20 ஆண்டுகளுக்கு பின்பு), பல விதமான மொழிபெயர்ப்பு (வசனங்கள்) உள்ள குர்-ஆன் புழக்கத்தில் இருந்தது. இதனால், ஒவ்வொரு பகுதியிலிருந்து வருபவர்கள், தங்கள் குர்-ஆன் தான் சரியானது, மற்றவர்களுடையது தவறானது என்று சண்டையிடவே, உத்மான், அபூபக்கர் தொகுத்த குர்-ஆனை வரவழைத்து, அதில் சில மாறுதல் செய்து, வேறு ஒரு புதிய தொகுப்பை உருவாக்கி, அதில் பல பிரதிகள் எடுத்து, புழக்கத்தில் இருந்த மற்ற எல்லா குர்-ஆன்களையும் எரித்துவிடும்படி உத்மான் கட்டளையிட்டார். 

நான் என்ன சொல்ரேன் என்றால்... 

அப்துல்லா: நீ ஒன்னும் சொல்லவேண்டாம். சும்மா இரு. [அப்துல்லா மனைவி வருகிறாள்]

அப்துல்லாவின் மனைவி: என்ன உங்க இரண்டுபேரோட பேச்சு முடிஞ்சுதா? அப்ரஹாம் அண்ணா, நான் காபி கொண்டுவரட்டுமா?

அப்துல்லா: அவனுக்கு காபி, கீபி ஒன்னும் வேண்டாம். எனக்கு மட்டும் ஒரு கப் காபி கொண்டுவா..... அதோட, இன்னும் 15-20  நிமிஷத்திலே நிறைய முந்திரி பருப்பு போட்டு, பால் பாயாசம் செய்து கொண்டுவா இவனுக்கு பாயசமுன்னா இவனுக்கு ரொம்ப இஷ்டம்.

அப்துல்லாவின் மனைவி: உங்களுக்கு சாரிடன் மாத்திரை கொண்டுவரட்டுமா? ஹா... ஹா... ஹா...

அப்துல்லா: உன் அண்ணனுக்கும், உனக்கும், நக்கல் அதிகம்.

அப்ரஹாம்: நான் இன்னும் உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லையே!?

அப்துல்லா: இன்னிக்கு இது போதும், அடுத்த வாரம் பேசலாம். இன்னும் அதிகமா கத்துகிட்டு வரேன். உன் தோலை அன்னிக்கு நான் உரிக்கிறேன்.

அப்ரஹாம்: அடுத்த வாரம் 5 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துடு. ஒரு புது ஸ்வீட் செஞ்சி உனக்கு குடுக்கனும்னு, உன் தங்கச்சி ஆசைபடுது. பாவம் நீ என் மனைவியின் கையால் அதுவும் புது ஸ்வீட் சாப்பிடப்போறே. கர்த்தர் தான் காப்பாத்தனும்.

[சிறிது நேரத்திற்கெல்லாம், பாயாசம் மனக்க மனக்க வருகிறது. அதுவும் முஸ்லீம் கையால் செய்தது. அதை சாப்பிட்டு விடைபெற்றுச் செல்கிறான், அப்ரஹாம். 

அடுத்த வார உரையாடலில், அப்ரஹாம் இப்போது உள்ள குர்-ஆன் சம்மந்தப்பட்ட சில செய்திகளைச் சொல்வான். மற்றும் அப்துல்லா, பைபிளின் வரலாற்றுப் பற்றி, தொகுக்கப்பட்ட முறைபற்றிப் பேசுவான்.]

[தேதி: 18 ஜூலை 2015 - இந்த கட்டுரை 2007ம் ஆண்டு ஈஸா குர்-ஆன் ஜியோசிடி தளத்தில் பதிக்கப்பட்டிருந்தது, இப்போது இந்த தளத்தில் மறுபதிவு செய்யப்படுகின்றது.]


அப்துல்லாஹ் மற்றும் அப்ரஹாமின் இதர உரையாடல்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/abdulla_abraham/quran_collection.html

அப்துல்லாவும் அப்ரஹாமும் உரையாடல்கள்: பாகம் -1 : ஏன் குர்-ஆனை அரபியில் மட்டும் படிக்கவேண்டும்?

[இரவு மணி 8, எல்லாரும் சாப்பிட்டாகிவிட்டது, அப்துல்லா கொஞ்சநேரம் தன் வீட்டு திண்ணையில் உட்கார வேளியே வந்தான், தன் நண்பன் அப்ரஹாம் வீட்டுபக்கம் திரும்பி பார்த்தான், அவனும் தன் திண்ணையில் உட்கார்ந்து இருந்தான். இருவரும் ஒரே தெருவில் குடியிருக்கிறார்கள். அப்ரஹாமும் இவனைப் பார்த்தான், அப்ரஹாம் கையசைக்க, அப்துல்லா அவனைப்பார்க்க சென்றான்]

அப்துல்லா: என்னடா சாப்பிட்டாச்சா?

அப்ரஹாம்: இப்போ தான் முடிஞ்சுது, நீ சாப்பிட்டாயா?

அப்துல்லா: சாப்பிட்டேன். நான் கொடுத்த குர்-ஆனை படிச்சியா? இன்னிக்கு ஆபிஸ்லே கொஞ்ச நேரம் ஓய்வு கெடச்சது. அப்போ நீ குடுத்த புதிய ஏற்பாட்டை படிச்சேன். முதல் இரண்டு பக்கம் படிக்கிறதுக்குள்ளே, போதும் போதும் என ஆயிடுச்சி.

அப்ரஹாம்: [சிரிக்கிறான்] இனிமேல் தான் நீ தமிழை முழுசா கத்துக்கோ போறே.

அப்துல்லா: நீ மட்டும் என்னவாம். சுத்தமா ஒரு முஸ்லீம் பெயரைக் கூட உன்னால் சரியாக உச்சரிக்க முடியாது.

அப்ரஹாம்: சரி விடு, நீயாவது எனக்கு சொல்லக்கூடாது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? குர்-ஆன்லே முதல் பக்கம் திருப்புறேன், முதல் அதிகாரம் வரும் என்று பார்த்தா..! இன்டக்ஸ் வருது! யோசிச்சி பாத்ததிலே, அப்பரம் தான் புரிஞ்சுது, குர்-ஆனை இடது பக்கத்திலிருந்து அல்ல, வலது பக்கமாக படிக்கனும் என்று. எனக்கு நீ இங்லீஸ் மட்டும் இருக்கிற குர்-ஆன் குடுக்கக்கூடாது? ஏன்? அரபி/ஆங்கிலம் இருக்கிற குர்-ஆனை கொடுத்த.

அப்துல்லா: இப்போ என்கிட்டே இருக்கிறது அந்த குர்-ஆன் தான், அதுவும் எங்க சித்தப்பா, மக்காவிற்கு ஹஜ்ஜிற்கு போகும் போது அது குடுத்தாங்கலாம். வேறே இங்லீஸ் குர்-ஆன் வாங்கிக்கிலாம் விடு.

அப்ரஹாம்: சரி, என் கேள்விக்கு பதில் சொல்லு, சொல்லலே உன்னை விடமாட்டேன். 

1. ஏன் நீங்க எப்போதும் அரபியிலேயே குர்-ஆனை படிக்கிறீங்க?

2. புரியாத மொழியிலே நாம் படிச்சா, அல்லா சொன்ன செய்திகள் உங்களுக்கு எப்படி தெரியவரும்?

3. அல்லாவிற்கு அரபி தவிர வேறு மொழி தெரியாதா?

அப்துல்லா: உன் முதல் கேள்விக்கு பதில் சொல்றேன் கேளு. குர்-ஆனை எந்த மொழியிலேயாவது நாம் படிக்கலாம். ஆனால் அரபியிலே படித்தால் தான், அதிக நன்மைகள் வரும் என்று எங்க இமாம்கள், பெரியவங்க சொல்றாங்க.

அப்ரஹாம்: ஒரு வசனத்தின் பொருள் புரியாமல், பலமுறை படித்தாலும் அதனால் என்ன நன்மை சொல்லு? உதாரணத்திற்கு, நாம் எந்த பொருள் வாங்கினாலும், அதனோடுகூட ஒரு சின்ன புத்தகம் கொடுப்பார்கள். அந்த பொருளை எப்படி பயன்படுத்தவேண்டும், அது ரிப்பேர் ஆகிவிட்டால் எப்படி சரிசெய்யவேண்டும் போன்ற விவரங்கள் பல மொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் தமிழில் அல்லது நமக்கு தெரிந்த மொழியில் அந்த விவரங்களை படிப்போம், அப்பொருளை எப்படி பயன்படுத்தவேண்டும்  என்று தெரிந்துக் கொள்வோம்.

இதேபோலத் தானே வேதங்களும் பயன்படுகின்றன, நாம் எப்படி வாழவேண்டும், எப்படி சமுதாயத்தில் நடந்துக்கொள்ளவேண்டும் போன்றவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம்.

அப்துல்லா: இதற்காகத்தானே நாங்கள் மசூதிற்கு செல்கிறோம். அங்கு சொல்லப்படும் செய்திகளை நம்முடைய மொழியில் கேட்கிறோம். குர்-ஆனில் சொல்லப்பட்டதை அவர்கள் விளக்கிச் சொல்கிறார்கள். அறிஞர்கள் எழுதிய இஸ்லாமிய புத்தகங்களை படிப்போம்.

அப்ரஹாம்: அவர்கள் சொல்வதெல்லாம் சரியானது என்று அவர்கள் செய்திகளை சரிபார்ப்பது யார்? ஒவ்வொரு மனிதனும் தான் எதை நம்புகிறானோ, அதையே மற்றவர்களுக்குச் சொல்லுவான். உதாரணத்திற்கு ஒரு இமாம் ஜிஹாதில் அதிக கவனம் செலுத்துகிறவராக இருந்தால், அவர்களுடைய பேச்சு, செய்திகள் எல்லாம் அதைப்பற்றியே இருக்கும். வேறு ஒரு இமாம் தான் சமுதாயத்தில் சேவை செய்வதில் விருப்பமுடையவராக இருந்தால், அவருடைய எல்லா செய்திகளும், அதைச்சுற்றியே இருக்கும். 

இதில் பலியாவது யார் என்றால், இந்த செய்திகளை கேட்பவர்கள் தான். நாம் இப்போது இவைகளை செய்திகளில் பார்க்கிறோம். எல்லா இஸ்லாம் தீவிரவாதிகளும் உருவாவது மசூதியிலோ அல்லது மதரசாவிலோ? ஆனால் இங்கு இருக்கிற இஸ்லாம் அறிஞர்கள் "தீவிரவாதிகள் தவறு செய்கிறார்கள். குர்-ஆனை அவர்கள் தவறாக புரிந்துக்கொன்டார்கள்" என்று சொல்கிறார்கள். பழியை தீவிரவாதிகள் மீது போடுகிறார்கள்.

அப்துல்லா: நீ சொல்வதும் சரி தான். இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமானாலும், கெட்டவர்களால் அது ஆளப்படும்போது, அதை சரி பார்த்து கேள்விகேட்டு, திருத்த அனுமதி மறுக்கப்படும்போது, உண்மையாகவே நன்மையை விட, தீமை தான் அதிகமாக நடக்கும். மதம் என்பது கத்தியைப் போன்றது. அது யாரிடம் உள்ளதோ, அவர்களைப் பொருத்தே அதன் பயன்பாடும் இருக்கும். 

உன்னுடைய இரண்டாவது கேள்வியும், முதல் கேள்வியும் ஒரேமாதிரி தான். நான் மூன்றாவது கேள்விக்கு பதில் சொல்கிறேன். இறைவனுக்கு மொழி என்பது ஒரு பிரச்சனையில்லை. எனவே அல்லாவிற்கு எல்லா மொழிகளும் தெரியும். எந்த மொழியில் நாம் பேசினாலும் அவனுக்குப் புரியும்.

அப்ரஹாம்: அப்படியானால் இதற்கு பதில் சொல்லு, ஒருவன் இஸ்லாமில் வருகிறான் என்று வைத்துக்கொள், அவன் தன் சொந்த மொழியில், அல்லாவிடம் நமாஜ் (தொழுகை) செய்யலாமா? நமாஜ் செய்யும்போது சொல்லப்படும் கலிமாக்கள் ( சூராக்கள், வசங்கள்) தன் தாய் மொழியில் சொல்ல அவனுக்கு அனுமதி உண்டா? அல்லது அவன் அரபியில் மட்டும் தான் தொழவேண்டுமா? 

அப்துல்லா: அவன் தன் சொந்த பிரச்சனைகளுக்காக வேண்டிக்கொள்ளும்போது வேண்டுமானால் தன் தாய் மொழியில் வேண்டிக்கொள்ளலாம். ஆனால் தினமும் 5 வேளை தொழுவது மட்டும் அரபியில் மட்டும் தான் இருக்கவேண்டும்.

அப்ரஹாம்: ஏன்?

அப்துல்லா: குர்-ஆன் அரபியில் இறக்கப்பட்டது, அதனால் நாம் அரபியிலேயே தொழவேண்டும். மற்ற மொழியில் தொழுதால் அதன் தனித்தன்மை, இலக்கிய நடை பாதிக்கப்படும்.

அப்ரஹாம்: பொருள் முக்கியமா? இலக்கிய நடை முக்கியமா? பைபிள் எபிரேய, மற்றும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டாலும், "ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு", "உன்னை பகைக்கிறவர்களுக்காக ஜெபம் செய்" போன்ற வசனங்கள், நம் தாய் மொழியில் படித்தால் தான் பிரயோஜனமே தவிர, இலக்கிய நடைக்காக நாம் கிரேக்க மொழியில் படிக்க முடியாது. அப்படி படித்தாலும் ஒரு நன்மையுமில்லை.

அப்துல்லா: சரி உனக்காகவாவது நான் இனிமேல் தமிழிலோ அல்லது இங்லீஸிலோ குர்-ஆன் படிப்பேன். சரியா? அடுத்த முறை நான் நிறைய விஷயங்கள் பைபிள் பற்றி கத்துகிட்டு வந்து, நான் கேள்வி கேட்கிறேன். நீ பதில் சொல்லு.

அப்ரஹாம்: எனக்காக படிக்க வேண்டாம், உனக்காக படி, குர்-ஆனில் என்ன இருக்கு? அல்லா என்ன சொல்றாறு? என்று தெரிஞ்சிக்கோ.

அப்துல்லா: சரி நான் வருகிறேன், மறுபடியும் பார்க்கலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்ரஹாம்: "வாஅலைக்கும் ஸலாம்" அரபியில் சொல்லிட்டேன் மன்னிக்கனும்,இதோ தமிழ் "உன் மீதும் சாந்தி உண்டாகட்டும்" குட் நைட்.

[தேதி: 18 ஜூலை 2015 - இந்த கட்டுரை 2007ம் ஆண்டு ஈஸா குர்-ஆன் ஜியோசிடி தளத்தில் பதிக்கப்பட்டிருந்தது, இப்போது இந்த தளத்தில் மறுபதிவு செய்யப்படுகின்றது.]

அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம் 1 - சாட்சி சொல்வதில் ஒரு பெண் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும் - குர்-ஆன் 2:282

[ஆயிஷா பி.எஸ்.சி முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். குடும்பத்தில் மொத்தம் 5 பேர், இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் மற்றும் தாய். தந்தை கடந்த ஆண்டுதான் காலமானார். குடும்பத்தின் முத்தமகள் என்பதால் குடும்ப பாரம் சுமக்கும் பொறுப்பு ஆயிஷாவின் மீது விழுந்தது . ஒரு சொந்த வீடு தவிர, வேறு சொத்து ஒன்றுமில்லை. தனக்கு வயது 24ஐ தாண்டிவிட்டது. தம்பிக்கு இப்போது வயது 7 ஆகிறது. இரண்டு சகோதரிகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். குர்-ஆனை அரபியில் பலமுறை படித்தாகிவிட்டது. முதல் முறை குர்-ஆனை படித்துமுடிக்கும் போது, அப்பா ஒரு விருந்து செய்து சொல்லிக்கொடுத்த ஆசிரியைக்கு மரியாதை செய்தது இன்னும் மனதைவிட்டு மறையவில்லை. ஒரு நாள் ஆயிஷாவிற்கு ஒரு யோசனை வந்தது, இன்றிலிருந்து குர்-ஆனை தமிழில் படிக்கலாம் என்று, தமிழ் குர்-ஆனை வாங்கினாள், படித்தாள், இதோ தன் சந்தேகங்களை கடிதமாக அல்லாவிற்கே எழுதுகிறாள்.]

அன்புள்ள அப்பா(அல்லாஹ்)விற்கு,

ஆயிஷா எழுதும் கடிதம். நலம் நலமறிய ஆவல். உங்களிடம் நலம் விசாரிப்பது கொஞ்சம் ஓவர் தான். நீங்கள் எப்போதும் நலமாகவே இருப்பீர்கள்.

நீர் கொடுத்த வேதத்தை(குர்-ஆன்) நான் அரபியில் பல முறைபடித்துள்ளேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நான் அதிக பக்தியுடையவளாக என் உள்ளத்தில் உணர்ந்துள்ளேன். என்னுடைய தந்தை எங்களை விட்டு போனபிறகு நாங்கள் தனிமையையும், பாதுகாப்பின்மையையும் உணருகிறோம். இதை போக்கிக்கொள்ளவும், இன்னும் நீர் குர்-ஆனில் என்ன சொல்லியிருக்கிறீர் என்று அறிந்து ஆறுதல் அடைய ஆவலுள்ளவளாய், நான் குர்-ஆனை தமிழில் படிக்க ஆரம்பித்தேன். எப்போதும் போல நான் சுத்தமாக குளித்துவிட்டு, அரபி குர்-ஆனை எவ்வித கண்ணியத்தோடு படிக்கிறேனோ, அதே கண்ணியத்தோடு தமிழ் குர்-ஆனையும் படிக்க ஆரம்பித்தேன்.

இப்படி படிக்கும்போது எனக்கு பல சந்தேகங்கள் வருகிறது. என் மனது சிலவற்றை ஏற்க மறுக்கிறது. அதை யாரிடம் கேட்பேன், எங்கள் அப்பா எங்களோடு இல்லை, எனவே உமக்கு நான் கடிதம் எழுதுகிறேன். எல்லா அனாதைகளுக்கும் தகப்பன் நீர் ஒருவர் தானே. இக்கடிதத்தை நான் என் டைரியில் எழுதிவைக்கிறேன், நீர் படித்து எனக்கு எப்படியாவது பதிலை தரவேண்டும். இறைவன் மனதின் எண்ணங்களை அறிபவன் என்றுச் சொல்வார்கள், எனவே என் டைரியை படிப்பதற்கு உமக்கு சிரமமிருக்காது.

1. சாட்சி சொல்வதில் ஒரு பெண் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும், குர்-ஆன் 2:282

அல்லா, நான் குர்-ஆன் இரண்டாம் அதிகாரம் படிக்கும்போது 282ம் வசனத்தை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஒரு பெண் சாட்சி சொல்லும்போது பாதியாக மதிக்கப்படுவாள் என்று நீர் சொல்லியிருக்கிறீர்.

குர்-ஆன் 2:282

...(நீங்கள் சாட்சியாக ஏற்கக்கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;...

Quran 2:282 YUSUFALI: ... and get two witnesses, out of your own men, and if there are not two men, then a man and two women, such as ye choose, for witnesses, so that if one of them errs, the other can remind her....

ஹதீஸ்களை பார்க்கும் போது, முஹம்மது பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்கள், பக்தியில் குறைவுள்ளவர்கள் என்றுச் சொல்கிறார். நரகத்தில் அதிகமாக காணப்படுவது பெண்கள் தான் என்றுச் சொல்கிறார்.

புகாரி 304. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். Volume :1 Book :6

சாட்சியாக கருதுவதற்கு ஒரு ஆணுக்கு இரு பெண்கள் சமம் என்று எப்படி நீர் சொல்கிறீர்? இதற்கு காரணம் கேட்டாள் "அறிவில் பெண்கள்" 

குறைபாடு உள்ளவர்கள் என்று முஹம்மது சொல்கிறார். உம்முடைய தூதரிடம் இதைப்பற்றி கேள்வி கேட்டால், இப்படியிருக்கும் என்று ஒரு வெப்தளத்தில் படித்தேன்.

கேள்வி: "ஓ முஹம்மது, ஏன் நரகத்தில் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள்?"

முஹம்மது: "ஏனென்றால், அவர்களுக்கு பொது அறிவு (அ) பகுத்தறிவு (Common-Sense) குறைவு"

கேள்வி: "அவர்களுக்கு பகுத்தறிவு குறைவு என்று உமக்கு எப்படி தெரியும்?"

முஹம்மது: "ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக இருப்பதினால், அவர்களுக்கு அறிவு குறைவு என்று அறிந்துக்கொள்ளலாம்"

கேள்வி: "ஆனால், ஏன் அவர்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக உள்ளது?"

முஹம்மது: "ஏனென்றால், அவர்கள் அறிவில் குறைபாடு இருப்பதனால்".

கேள்வி: "அவர்கள் அறிவில் குறைபாடு இருப்பது உமக்கு எப்படி தெரியும்?"

முஹம்மது: "அவர்கள் அறிவு குறைபாடு இருப்பதை, அவர்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக இருப்பதினால், நாம் அறிந்துக்கொள்ளலாம்".

கேள்வி: "மறுபடியும், ஏன் அவர்கள் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக உள்ளது?"

முஹம்மது: "ஏனென்றால், அவர்கள் மூளையறிவு குறைவு".

கேள்வி: "குறைபாடு அவர்களில்லை, உம்முடைய வாதத்தில் உள்ளது".

1) ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதி என்று குர்-ஆன் 2:282ல் சொன்னதால், பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்களா?  அல்லது

2) பெண்கள் (பிறப்பிலிருந்தே) அறிவில் குறைவுள்ளவர்கள் என்று நீரும், உம் தூதரும் சொல்வதால், ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியா? 

இதில் எது உண்மை. இது ஒரு தவறான, நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு வசனமாகும்.

இதை உலகத்தில் யார் சொல்லியிருந்தாலும், போகட்டும் நாக்கிலே எலும்பு இல்லை என்பதால் மனிதன் எதையானாலும் பேசுவான் என்று நான் விட்டுவிட்டுயிருப்பேன். ஆனால், எல்லாம் அறிந்த இறைவனாகிய "நீர் (அல்லா)" சொன்னது தான் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.

2. மூளை அல்லது அறிவு என்பது பயிற்றுவிக்கவேண்டியது:

அல்லா, பிறக்கும்போது யாரும் புத்திசாலியாக பிறப்பதில்லை, மற்றும் முட்டாளாக பிறப்பதில்லை. நாம் அந்த மூளைக்குத்தரும் பயிற்சி, படிப்பு, சூழ்நிலை மற்றும் நண்பர்கள் முலமாக மனிதன் (ஆண், பெண்), அறிவாளியாகவோ அல்லது சிறிது அறிவில் குறைவுள்ளவனாகவோ மாறுகிறான். இதில் ஆண்கள் அறிவில் எப்போதும் சிறந்து விளங்குவார்கள், பெண்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என்றுச் சொல்வது மிகப்பெரிய தவறாகும். பிறக்குப்போது மூளைவளர்ச்சி குன்றியவர்களை நாம் இதில் செர்த்துக்கொள்ளக்கூடாது. அப்படி சேர்த்துக்கொண்டாலும் இதிலும் இருவர் ஆண் பெண் உண்டு. 

என் மனைவி, அல்லது சகோதரி அறிவில் சிறிது குறைவுள்ளவள், பக்தியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்றுச் சொல்ல முஹம்மதுவிற்கு உரிமை உண்டே தவிர, உலக மொத்த பெண்ணினமே, அறிவில் குறைவுள்ளவர்களாக இருப்பார்கள், எனவே அவர்களின் சாட்சி ஆணின் சாட்சியில் பாதி என்றுச் சொல்ல அவருக்கு உரிமையில்லை.

பகுத்தறிவு, நேர்மை, நீதி, நியாயம், உண்மை, பொய், கடமை இவைகளின் இனம் (Sex) என்ன அல்லா? ஆணா அல்லது பெண்ணா? ஆண்கள் எப்போதும் நேர்மையாகவே இருப்பார்கள், பெண்கள் நேர்மை தவறுவார்கள் என்றுச் சொல்லி, இவைகளுக்கு ஒரு இனத்தை(Sex) கொடுத்த பெருமை இஸ்லாமையேச் சாரும்.

பெண்களை தலைவர்களாக நியமித்தால், அந்த நாடு அல்லது நிறுவனம் முன்னேறாது என்று முஹம்மது சொல்லியிருப்பது இப்போதுள்ள மனிதனுக்குத் தெரிந்தால், அவன் எவ்வித கஷ்டத்தில் இருந்தாலும், ஒரு நிமிடம் தன்னை மறந்து சிரித்துவிடுவான் அல்லா!....

புகாரி 4425. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார் 

ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டு (ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முனைந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது. பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் 'தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது" என்று கூறினார்கள். (இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல்.) Volume :5 Book :64"

இதோ உலகத்தின் சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த சில பெண் முத்துக்கள்: 

1. 1901 லிருந்து இன்றுவரை 33 பெண்கள் நோபல் பரிசுகள் பெற்றுயிருக்கின்றனர். 

2. மேரி கியுரி இரண்டு முறை நோபல் பரிசு வென்றவர் (1903, 1911)பொலோனியம் மற்றும் ரேடியம் கண்டுபிடித்ததற்காக (உலகத்தின் பெண் தலைவர்களின் பட்டியல் புகைப்படத்துடன் - WORLDWIDE GUIDE TO WOMEN IN LEADERSHIP

3. சரோஜினி நாயுடு, அன்னை தெரேசா, இந்திய பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி, இலங்கை பிரதமர் பண்டாரநாயகே, தமிழ்நாட்டின் முன்னால் உயர்நிதீ மன்றத்தின் நீதிபதி பாத்திமா பீவி அவர்கள், இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் கிரன் பேடி அவர்கள், இமயமலை சிகரத்தை அடைந்த முதல் ஜப்பானிய பெண் "ஜுன்கோ டெபை - ஆண்டு 1975" இன்னும் பலர்.

4. உம்முடைய சட்டம் நடைபெறும் சவுதி அரேபியாவில் பெண்கள், கார் ஓட்டுவதற்கு முன்பாகவே , காபிர் நாடாகிய (என் அருமை தாய் நாடு) இந்தியாவின் அருமை புதல்வி "கல்பனா சாவ்லா" வின்னிற்கு ராக்கெட்டில் சென்று விட்டாள். உம்முடைய சட்டம் நடைபெறும் நாட்டின் பெண்கள் தேர்தலில் ஓட்டுரிமை பெறுவதற்குள், காபிர் நாடுகளில் பெண்கள் முதலமைச்சர்கள், பிரதமமந்திரிகள் ஆகிவிடுகின்றனர்.

இவர்களின் அறிவு குறைபாடுள்ளதா? அல்லது நீங்கள் சொன்னது இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் தானா? அல்லா, இஸ்லாமிய பெண்களையும் படிக்க வையுங்கள், "ஷீரின் எபாடி" போன்ற பல பெண்கள் நொபல் பரிசுகளை வெல்வார்கள்.

5. சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு இஸ்லாமிய பெண்ணிற்கு "2003 அமைதி நோபல் பரிசு" கிடைத்தது. அவர் தான் "ஷீரின் எபாடி". நான் ஒன்று சொல்லட்டுமா அல்லா? இந்த பரிசு இப்பெண்மனிக்கு எதற்காகத் கிடைத்தது தெரியுமா? இவர் ஈரானில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் இழி செயல்களிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் காப்பாற்றும்படியாக அதிகமாக உழைத்ததால் தான்.

இவர் வழக்கறிஞராக பல ஆண்டுகள் பெண்களுக்கு சேவைசெய்தார். இவருக்கு நீதிபதியாக பதவி உயர்வு கிடைக்கும்போது, ஈரானின் இமாமகள், இது இஸ்லாமிற்கு எதிரானது, ஒரு பெண்ணின் அறிவுரையை ஆண்கள் கேட்கக்கூடாது என்றும், பெண்களை ஆளுகை செய்கிறவர்களாக நியமிக்கக்கூடாது என்றும் ஹதீஸில் முஹம்மது சொல்லியிருக்கிறார், எனவே இது செல்லாது என்றுச் சொல்லி, இவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள். 

இவர் தன் முயற்சியை விடாது போராடிக்கொண்டிருந்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இதே இமாம்கள், இதே இஸ்லாம், இது செல்லும் என்றுச் சொல்லி மறுபடியும், இவரை நீதிபதி செய்தார்கள்.இவருடைய 15 ஆண்டுகளின் சேவை இஸ்லாம் சட்டத்தால் வீணாக்கப்பட்டது. எத்தனை பெண்களின் வாழ்க்கை மலர்ந்திருக்குமோ, தெரியாது. இதற்கெல்லாம் நீர் தான் காரணம். உம்முடைய பதில் என்ன அல்லா?

Because of this, we all spent a lot of time investigating whether this was really true. We read, researched, and wrote articles about it. Finally, after 15 years, I'm happy to say that they have accepted that women can be judges. At the moment, we have two female judges in the Appeal Courts. So you see, when they said women couldn't be judges, they said it was because Islam had said so. But now they say Islam allows female judges, so my point is that with time, interpretations differ. Source: Shirin Ebadi Interview

3. இந்த வசனத்தினால் பெண்களுக்கு என்ன தீமை நடந்துவிடுகிறது என்று கேட்கிறீர்களா?

பாகிஸ்தானில் "ஹுதூத் சட்டம்" என்று ஒரு இஸ்லாமிய சட்டம் இருந்தது. குர்-ஆன் படியும், ஹதிஸ்படியும் தண்டனை (ஷரியா) கொடுப்பது தான் இதன் நோக்கம். இது 1979ல் கொண்டுவரப்பட்டது, 2006ல் ரத்துசெய்யப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் இன்னும் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன்படி,ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்துவிட்டால், அந்தப் பெண், நான்கு ஆண்களை சாட்சியாக் கொண்டுவர வேண்டும், கொண்டுவரமுடியவில்லையானால் அவளுக்கு வேசி என்று பெயர் சூட்டி, தண்டனை அளிக்கப்படும், சில நேரங்களில் கல்லெரிந்தும், ஊரின் நடுவில் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்படுவாள். இப்படி பல பெண்கள், ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் அழிந்துக்கொண்டுவருகிறார்கள். 

மூலம்:Wikipedia 

In Pakistan, rape is dealt with under Islamic laws known as the Hudood Ordinances. These criminalise all sex outside marriage. So, under Hudood, if a rape victim fails to present four male witnesses to the crime, she herself could face punishment. This has made it almost impossible to prosecute rape cases. According to the country's independent Human Rights Commission, a woman is raped every two hours and gang-raped every eight hours in Pakistan. These figures are probably an under-estimation as many rapes are not reported. மூலம்: BBC 

[19 வயது ஈரானின் நாஜினைன், நிலையை இங்கு படிக்கவும்

அல்லாஹ், இதற்கு பதில் சொல்லும்

1. எந்த ஒரு சண்டாளனாவது, நான்கு சாட்சிகளை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட காரியத்தைச் செய்வானா?

2. இப்படிப்பட்ட சட்டம் நாட்டில் இருந்தால், சில விஷமிகளுக்கு இப்படிப்பட்ட் வேலைகளைச் செய்ய அதிக தைரியம் வருமல்லவா?

3. இப்படிப்பட்ட வழக்குகள் பகிஸ்தானில் 2,10,000 நிலுவையில் உள்ளதே!, இந்த பெண்களின் நிலை என்ன?

4. இதற்கெல்லாம் காரணம் நீரல்லவோ அல்லா?

5. பெண்களின் அறிவு குறைவு என்று தெரிந்த உமக்கு, ஆண்களின் எண்ணங்கள் எப்படியிருக்கும் என்று தெரியாமல் போனதென்ன?

முடிவாக அல்லா, என் கேள்விகளை எல்லாம், உமக்கு தெரிவித்துள்ளேன். இன்னும் பல கேள்விகள் உள்ளது. அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம், "எந்த சமுதாயத்தில் பெண்கள் முன்னேறவில்லையோ, அந்த சமுதாயம் முன்னேறமுடியாது.".

இப்படிக்கு

ஆயிஷா

இந்தியா

[தேதி: 18 ஜூலை 2015 - இந்த கட்டுரை 2007ம் ஆண்டு ஈஸா குர்-ஆன் ஜியோசிடி தளத்தில் பதிக்கப்பட்டிருந்தது, இப்போது இந்த தளத்தில் மறுபதிவு செய்யப்படுகின்றது.]


ஆயிஷாவின் இதர கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ayeshaletters/ayeshaletter1.html